சனி, டிசம்பர் 05, 2015

கேரள மக்களின் இறைச்சி ’அரசியல்’:

கேரள மக்களின் இறைச்சி ’அரசியல்’:


கொச்சி என்ற எர்ணாகுளத்தில் பணியில் இருந்தபோது சென்னைக்கு வரும்போதெல்லாம் எர்ணாகுளம் வடக்கு ரயில்வேஸ்டேசன் எதிரே உள்ள உணவகத்தில் இரண்டு பெரிய சப்பாத்திகளும் மாட்டுக்கறி கொத்துக்கறியும் பார்சல் செய்து வாங்கி, இரவு 8 மணிக்கு மேல் ரயிலில் சாப்பிடுவது வழக்கம். சுவையோ சுவை! ஆட்டிறைச்சியில் அத்தனை சுவை இருக்கவே இருக்காது என்பது உறுதி. நினைத்தாலே இனிக்கும்....

கேரள மக்களில் 80 விழுக்காட்டினர் (இந்துக்கள் இசுலாமியர்கள் கிறித்துவர்கள் என அனைவரும்) மாட்டிறைச்சி உண்பது சர்வசாதாரணம். ஓட்டல்களில் மாட்டிறைச்சி சாதாரணம், ஆட்டுக்கறி கிடைப்பதுதான் அரிது. காலை உணவே பரோட்டா மாட்டுக்கறி என்பது மிகச்சாதாரணம் அங்கு. கேரள பிஜேபியினரும் இதில் அடக்கம் என்பதை அகண்டபாரதக்கனவில் இருப்போர் அவசியம் தெர்ந்துகொள்ளவேண்டும். கேரள மக்களின் இறைச்சி உணவில் 40 விழுக்காட்டுக்கும் மேல் இடம் பெறுவது மாட்டிறைச்சியே. கேரளாவில் கோழி இறைச்சி வருடவிற்பனை 1.51 மெட்ரிக் டன் எனில் மாட்டிறைச்சியின் வருட விற்பனை 2.3 மெட்ரிக் டன்.
மஹாராஷ்ட்ர மாநில அரசு இறைச்சிக்கு தடை விதித்தபோது கேரள மக்கள் (மீண்டும் சொல்ல வேண்டியுள்ளது, இந்துக்கள் இஸ்லாமியர்கள் எல்லோரும் சேர்ந்து) பொது இடத்தில் மாட்டிறைச்சி சமைத்து மகிழ்வுடன் உண்டார்கள் என்பது செய்தி.

கருத்துகள் இல்லை: