அப்துல் கலாம் (3) - ஒரு மதிப்பீடு

9. 1944ஆம் ஆண்டு ஆல்சோஸ் எனப் பெயரிடப்பட்ட திட்டமொன்று, ஜெர்மனியிடம் அணுகுண்டு உள்ளதா என்று கண்டுபிடிக்கும் நோக்கத்துடன் அமெரிக்காவால் நிறுவப்பட்ட்து. சாமுவேல் கவுட்ஸ்மிட் என்ற விஞ்ஞானியின் தலைமையிலான இக்குழு, ஜெர்மனியிடம் அணுகுண்டு இல்லை என்ற முடிவுக்கு வந்தது.
10. 1945 ஜூலை 24க்குப் பிறகு சோவியத் தலைவர் ஸ்டாலினுக்கு ட்ரூமன் ஒரு கடிதம் எழுதுகின்றார். அமெரிக்கா ஒரு ‘புதிய ஆயுதத்தை’கண்டுபிடித்துள்ளதெனவும் அது அசாதாரணமான பேரழிவு சக்திகொண்டது எனவும் கூறுகின்றார். ஆனால் ஸ்டாலின் இக்கடிதம் பற்றி மேற்கொண்டு எக்கருத்தும் கேட்டுக்கொள்ளாமல் மவுனமாக இருந்து விடுவது கண்டு ட்ரூமன் அதிர்ச்சி அடைகின்றார். ஸ்டாலின் நடப்பது என்ன என்று ஊகித்துக் கொண்டவராக அன்று மாலையே சோவியத் அணுசக்தி ஆராய்ச்சியை துரிதப்படுத்துமாறு தனது அதிகாரிகளுக்கு ஆணை இடுகின்றார்.
11. புகழ் பெற்ற விஞ்ஞானிகளான ஐன்ஸ்டீன், லியோசிலார்ட், நீல்ஸ்போர், வானெவர் புஸ், ஜேம்ஸ் கானண்ட், பொருளாதார நிபுணர் அலெக்சாண்டர் சாக் ஆகிய அனைவருமே அணு ஆயுத உபயோகத்துக்கு எதிராக குரல் கொடுத்தார்கள். நீல்ஸ்போர், அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட்டையும், பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலையும் நேரில் சந்தித்து புதிய ஆயுதத்தை மக்கள் மத்தியில் வெட்டவெளிச்சமாக்குமாறு கேட்டுக் கொண்டதுடன் ஜெர்மனியை சரணடையுமாறும் வேண்டினார்.
தொடரும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக