1) திருவொற்றியூரில் இருந்து சோழிங்கனல்லூர் வரை பரந்துபட்ட வெள்ளத்தின் பேரழிவில் இருந்து மக்களை மீட்க இன்றுள்ள அரசு எந்திரத்தின் பலமும் ஊழியர்களின் எண்ணிக்கையும் போதாதுதான்; தனிமனிதர்களும் குழுக்களும் தம் உயிரை துச்சமென மதித்து களத்தில் மக்க்ளுக்காக நிற்கின்றார்கள். கடற்படை, தீயணைப்புத்துறை, காவல்துறை, மின்சாரத்துறை, மாநகராட்சி, முனிசிபல் ஊழியர்கள், மருத்துவமனை டாக்டர்கள் ஊழியர்கள் 24 மணி நேரமும் இயங்குகின்றார்கள், எல்லாம் அரசுத்துறைதான், ப்ரைவேட் அல்ல.
2) ப்ரைவேட் இண்டெர்னேசனல் ஸ்டாண்டர்ட் மியாட் ஆஸ்பத்திரியில் 14 பேர் ஆக்சிஜன் இன்றி சாவு; மத்திய அரசு ஊழியர்களை CGHS திட்டத்தின் கீழ் இந்த மருத்துவமனை படுத்தும்பாடும் கொடுமையும் (அரசு ஊழியரிடம் இருந்து மக்கள் வரிப்பணத்தை கட்டணம் என்னும் பேரில்) அடிக்கும் கொள்ளையும் சொல்லி அடங்காது, அரசு மருத்துவமனையில் இது நடந்திருந்தால் ப்ரைவேட் சானல்கள் கூப்பாடு கூட்டி ‘.....அவரது உறவினர் சொல்வதை கேட்போம்’ என மைக்கை நீட்டியிருப்பார்கள்;
மியாட் முதலாளிக்காக அடக்கி முனகுகின்றார்கள்.
3) இப்போதும் கூட அரசுப்பேருந்துகள், அரசு ரயில்கள்தான் இயன்றவரை இயக்கப்படுகின்றன; சென்னை கடற்கரை, திருவள்ளூர், அரக்கோணம் ஸ்டேசன்களில் இருந்து தென் மாவட்டங்கள், வட மானிலங்களுக்கு ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது;
’ஃபோன் செயதாப்போதும்’ என பீற்றிக்கொண்ட கால்டாக்சி கம்பெனிகள் எங்கே போயின? கோயம்பேட்டின் கொள்ளைக்கார கும்பலான ஆம்னி முதலாளிகள் செத்துப் போனார்களா?
4) பொதுத்துறை நிறுவனமான பிஎஸ் என் எல் ஐந்து நாட்களுக்கு இலவச சேவை அறிவித்துள்ளது, பில் கட்டுவதற்கான நாளை நீட்டித்துள்ளது; தனியார் செல்ஃபோன் சிக்நல் நாசமாகி மூணு நாள் ஆச்சு; பில் கட்ட மெசேஜ் தவறாமல் வரும், சந்தேகம் இல்லை.
5) அரக்கோணம் ராஜாளி கடற்படை தளத்தில் இருந்து இண்டியன் ஏர்லைன்ஸ் தமிழ்நாட்டுக்குள் 1000 ரூபாய், வெளிமானிலங்களுக்கு 2000 ரூபாய்க்கு சர்வீஸ் அறிவித்துள்ளது.
எல்லாம் அரசுத்துறையில் இருப்பதால் சாத்தியம்.
ப்ரைவேட் கார்பொரேட்டுகள் எங்கே போனார்கள்?
வெள்ளம் வடிந்தபின் ஈசிஆர் பெர்முடாஸ் பேர்வழிகள் ‘வாவ்...ப்ரைவேட் ஈஸ் ப்ரைவேட்யா..ச்யர்ஸ்’ என்று மீண்டும் பீர் பாட்டில் ஓப்பன்பண்ணி பொழந்தால் நாசமாப் போவீர்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக