அப்துல் கலாம் (2) - ஒரு மதிப்பீடு

ஆக இவ்வாறு கனத்த மவுனம் காத்ததன் மூலமாக, ஆர் எஸ் எஸ்-சின் திட்டமான ‘ஒரு முஸ்லிமை இச்சமயத்தில் வேட்பாளராக அறிவித்து குஜராத் குறித்த ஒட்டுமொத்த சர்ச்சையையும் திசைதிருப்பிவிடலாம்’ என்ற திட்டத்துக்கு உடன்பட்டதன் மூலமாக, ஆர் எஸ் எஸ்-சின் மோசமான திட்டத்துக்கு துணைபோனதன் மூலம் இந்திய இஸ்லாமிய சமுதாயத்தைக் குப்புறத்தள்ளியவர் அப்துல்கலாம். இந்திய முஸ்லிம் சமுதாயம் அவரிடம் அத்தகைய ஒரு நேர்மையை, பிஜேபியின் தந்திரத்தை புரிந்து கொண்டு ஆர் எஸ் எஸ்-சின் தந்திரத்தை அம்பலப்படுத்தும் துணிச்சலை எதிர்பார்த்தது. அதில் நியாயம் இருந்தது; இந்திய சமூகத்தில் அன்றைக்கு அவருக்கு இருந்த நற்பெயரைப் பயன்படுத்தி ஆர் எஸ் எஸ்-சின் ‘கலாம் ஜனாதிபதி’ திட்டத்தை நிராகரித்திருப்பார் எனில் இந்திய அளவில் மட்டும் அல்ல, உலக அளவில் பிஜேபிக்கு அவரால் ஒரு நெருக்கடியை கொடுத்திருக்க முடியும், அதன் மூலம் குஜராத் படுகொலைகளை இந்துமத்திலேயே இருக்கின்ற கலாமை நேசிக்கின்ற அமைதிவிரும்பிகள், மதஒற்றுமையை விரும்புபவர்கள் மத்தியில் தீவிரமான விவாதத்தை தொடங்கி வைத்திருக்க முடியும்; தனது சறுக்கலால் அப்துல்கலாம் அத்தகைய ஒரு வரலாற்றுப்பொறுப்பில் இருந்து நழுவினார்.
6. தான் ஒரு சைவ உணவு விரும்பி (தாவர உணவு விரும்பி அல்ல!), அதிகாலையில் கீதை வாசிப்பவர் (அதாவது ஒரு இஸ்லாமியர் தனது புனித நூலான திருக்குரானை வாசிப்பதை விட்டுவிட்டு கீதை வாசிக்கின்றார் என்று கொள்க!), வீணை இசைப்பவர், சம்ஸ்கிருத ஸ்லோகங்களை உச்சரிப்பவர் என்று காட்டிக்கொண்ட்தன் மூலம் ஆர் எஸ் எஸ்-சின் ‘நல்ல முஸ்லிம்’ ஆனார். குடியரசுத்தலைவர் பொறுப்பேற்ற பின்னர் அவர் குஜராத் சென்றார் போன்ற வாதம் எல்லாம் செத்த பிணத்துக்கு உயிர்கொடுக்கும் முயற்சிகளே. நமது இந்தியத்திரைப்படங்களில் வரும் ‘நல்ல முஸ்லிம்கள்’ போலீஸ்காரனாக இருப்பார்கள், இவர்கள் ஆர் எஸ் எஸ்-சுக்கு உகந்த ’தேசபக்த’ முஸ்லிம்கள்; ‘கெட்ட முஸ்லிம்கள்’ வெடிகுண்டு வைப்பார்கள் என்பது நினைவுக்கு வருகின்றது.
7. புகழ்பெற்ற விஞ்ஞானக்கோட்பாடுகளைக் கண்டறிந்த விஞ்ஞானிகளும், புகழ் பெற்ற கருவிகள் எந்திரங்களைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகளும் மிகச்சிறந்த அறிவாளிகளாக மட்டும் இன்றி, மனிதாபிமானிகளாகவும் இருந்தார்கள் என்பதற்கு வரலாறு நெடுகிலும் ஏகப்பட்ட உதாரணங்கள் கிடக்கின்றன.
தொடரும்...
தொடரும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக