சனி, டிசம்பர் 12, 2015

சென்னைப்பெருவெள்ள அழிவு - யார் காரணம்? IISc ஆய்வு



’நீர்நிலைகள், திறந்த வெளிகளை நாசம் செய்ததன் பலனை சென்னை அனுபவிக்கின்றது’ -
Indian Institute of Science, Bengaluru (Centre for Ecological Sciences) - இன்றைய பேரழிவுக்கு பல மாதங்களுக்கு முன்பே எச்சரிக்கப்பட்டது - 
The Hindu 11.12.2015 page 13
1. 1991 தொடங்கி சென்னையின் கான்க்ரீட் கட்டுமானங்கள் 13 மடங்காக உயர்ந்துள்ளது
2. அதே நேரத்தில் வெள்ளம் தாங்கும் பகுதிகள், திறந்த வெளிகளின் அளவு நான்கில் ஒரு பகுதி அபகரிக்கப்படுள்ளது.  திறந்த வெளிகள், சதுப்பு நிலங்கள், வெள்ளம் தாங்கும் பகுதிகள் 18.14% ஆக சுருக்கப்பட்டுள்ளன
3. சென்னையின் கட்டுமானப்பகுதி 1.46%இல் இருந்து 18.6% ஆக உயர்ந்துள்ளது
4. ஆனால் மரங்கள், வனங்கள் உள்ளிட்ட இயற்கைப்பிரதேசங்கள் 22% அழிக்கப்பட்டுள்ளன
5. செயற்கைக்கோள் படங்கள், முன்னெச்சரிப்பு மாதிரிகள் தெரிவிப்பது: சென்னையின் வடமேற்கு, தென்மேற்கு பகுதிகள் முற்றிலும் திட்டமிடப்படாத வளர்ச்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இன்றைய பெருவெள்ளத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டவை இப்பகுதிகளே என்பது முக்கியமானது
6. சென்னை, கொல்கத்தா போன்ற பெருநகரங்களில், சதுப்பு நிலங்களும் வெள்ளம் தாங்கும் பகுதிகளும்தான் கரைபுரண்டு ஓடும் ஆறுகளில் இருந்து வெளியேறும் நீரை ஏறுக்கொள்வதில் தணிப்பதில் மிக முக்கிய பங்கை செலுத்துகின்றன; நகரத்தை திட்டமிடும் ‘அறிவாளிகள்’ இதை உணரவில்லை

இதே நாசகர நிலை தொடரும் எனில்:

7. 2026இல் சென்னயின் அடர்வில் கட்டுமானப்பகுதியின் அளவு 36.6% அதிகரிக்கும்
8. திறந்த வெளிகள், சதுப்பு நிலம், வெள்ளம் தாங்கும் பகுதிகளின் அளவு 33.1% ஆக குறையும்
9. ஆஸ்பால்ட், கான்க்ரீட், உலோகப்பொருட்களால் ஆன கட்டுமான பகுதிகள் அடுத்த பத்தாண்டுகளில் இரண்டு மடங்காக அதிகரிக்கும்; ஆனால் இப்போதுள்ள திறந்த வெளியின் அளவில் மூன்றில் இரண்டு பகுதிகள் காணாமற்போகும்.
இரண்டு கழகங்களும் சேர்ந்து சென்னை மக்களை பேரழிவில் தள்ளியுள்ளன என்பதே பேருண்மை!
இந்த ஆய்வு தலைவருக்கும் தலைவிக்கும் சமர்ப்பணம்!

சனி, டிசம்பர் 05, 2015

சென்னைப்பெருவெள்ளம் (5) அல்லது ’ப்ரைவேட் ஈஸ் ப்ரைவ்வேட்...ஒண்டர்ஃபுல் யா..கீப் இட் அப்’









’ப்ரைவேட் ஈஸ் ப்ரைவ்வேட்...ஒண்டர்ஃபுல் யா..கீப் இட் அப்’
MIOT இண்டெர்னேஷனல் ஸ்டாண்டர்ட் கார்பொரேட் ஆஸ்பத்திரியில் செத்தவர்கள் 18 பேராம். ஆஸ்பத்திரி முதலாளி ஒண்ணு சொல்றான், அரசு ஹெல்த் செக்ரட்டரி வேற ஒண்ணு சொல்றாரு, இவர் சொல்றது ஒரு வகையில் ஆஸ்பத்திரி முதலாளிக்கு சப்போர்ட் பண்ற மாதிரி இருக்கு; மக்கள் பணத்துல சம்பளம் வாங்குற செக்ரட்டரி ஆஸ்பத்திரி முதலாளிக்கு வேலை செய்றாரு.
அரசாங்க எந்திரமும் ஊழியர்களும் சாலைகளில் தண்ணீரை வெளியேற்றி சாலைகளை ரிப்பேர் செய்த பின் கோயம்பேட்டின் கொள்ளையர்களான ஆம்னி பஸ் முதலாளிகள் வெளியூர்களுக்கு 3000 முதல் 6000 வரை கொள்ளையடிக்கிறாய்ங்களாம். அதே சமயம் இன்று முதல் 4 நாட்களுக்கு 3 மாவட்டங்களில் அரசுப்பேருந்துகளில் பயணம் இலவசம் என அரசு அறிவித்துள்ளது.
ஆந்திரா சென்ற இரண்டு மாணவிகள் கையில் பணம் இல்லை, போகும் வழியில் ஏடிஎம்மில் எடுத்து தருகின்றோம் என்று அழுது புரண்டபின் வழியில் பஸ்ஸை நிறுத்தி ஆயிரக்கணக்கில் கொடுத்ததை இன்றைய the hindu பத்திரிக்கை சொல்கின்றது.
ஆவின் பால் வினியோகத்தை அரசு உறுதிப்படுத்த நடவடிககை; அதே சமயம் அரை லிட்டர் பாலை 200 300 ரூபாய் வரைக்கும் ப்ரைவேட் கொள்ளையர்கள் ‘விற்கின்றார்கள்’.
’ப்ரைவேட் ஈஸ் ப்ரைவ்வேட்...ஒண்டர்ஃபுல் யா..கீப் இட் அப்’

சென்னைப்பெருவெள்ளம் (4) அல்லது ‘ப்ரைவேட் ஈஸ் ஒண்டெர்ஃபுல் யா!’

MIOT 'International' standard - 18 பேர் சாவு - தனியார் மருத்துவமனைகளின் ’பிணமாபிமானம்:

உயிர்போகும் எமர்ஜென்சி நிலையிலும் அட்மிசன் போட ஒரு லட்சம் ரெண்டு லட்சம் கவுண்டரில் கட்டினால்தான் உள்ளே அனுமதிப்பார்கள்;
உள்ளே அட்மிசன் ஆகி விட்டால் டாக்டர்கள் வச்சதே சட்டம்; அந்த டெஸ்ட் இந்த டெஸ்ட், ‘இந்த மருந்துகளை எங்க மெடிகல் ஷாப்பில் வாங்கிட்டு வா’... இப்படி நாம் வாங்கும் ஆயிரக்கணக்கான ரூபாய் மருந்துகளை உண்மையில் நோயாளிக்கு பயன்படுத்துகின்றானா அல்லது அப்படியே மீண்டும் அவன் மெடிகல் ஷாப்புக்கே மறு விற்பனைக்கு போகுமா, அவனுக்கே வெளிச்சம்.
இத்தனை கொள்ளைக்கும் பிறகும் செத்துப்போனால் ‘ரெண்டு லட்சம் கட்டிட்டு பாடியை எடுத்துட்டு போஙக’ என்று சொல்வான்.
அதுவும் அரசு ஊழியர் அட்மிட் ஆனால் செம கொண்டாட்டம்தான் ஆஸ்பத்த்ரி முதலாளிக்கு. ஏனெனில் போடப்படும் பில்லின் தொகையை அரசு கட்டி விடும்; கொடுமை என்னவெனில் குறிப்பிட்ட நோய்க்கு அரசு ஒரு லட்சம்தான் தரும் எனில், தனியாக ரெண்டு லட்சம் ரூபாய்க்கு பில் போடுவான் ஆஸ்பத்திரி முதலாளி, அந்த இரண்டு லட்சத்தை அரசு உழியர் தன் சேமிப்பில் இருந்து அல்லது கடனை வாங்கி கட்டித்தொலைய வேண்டும், இல்லையேல் வெளியே விடமாட்டான்.இது மாத ஊதியம் பெறும் ஊழியரின் கதி என்றால் அன்றாடக்கூலிகளின் நிலை?
’இறுதி’யாக: நேற்று செத்துப்போன 14 பேரையும் டெட் பாடியாக அரசு மருத்துவமனையில் கொண்டு வந்து போட்டுவிட்டுப்போன மியாட் முதலாளியையும் அவன் டாக்டர்களையும் தேடிக்கொண்டு இருக்கின்றார்கள் செத்தவர்களின் உறவுகள்.
‘வாவ்..ப்ரைவேட் ஈஸ் ப்ரைவேட்யா’

சென்னைப்பெருவெள்ளம் (3) அல்லது ‘ப்ரைவேட் ஈஸ் ஒண்டெர்ஃபுல் யா!’


1) திருவொற்றியூரில் இருந்து சோழிங்கனல்லூர் வரை பரந்துபட்ட வெள்ளத்தின் பேரழிவில் இருந்து மக்களை மீட்க இன்றுள்ள அரசு எந்திரத்தின் பலமும் ஊழியர்களின் எண்ணிக்கையும் போதாதுதான்; தனிமனிதர்களும் குழுக்களும் தம் உயிரை துச்சமென மதித்து களத்தில் மக்க்ளுக்காக நிற்கின்றார்கள். கடற்படை, தீயணைப்புத்துறை, காவல்துறை, மின்சாரத்துறை, மாநகராட்சி, முனிசிபல் ஊழியர்கள், மருத்துவமனை டாக்டர்கள் ஊழியர்கள் 24 மணி நேரமும் இயங்குகின்றார்கள், எல்லாம் அரசுத்துறைதான், ப்ரைவேட் அல்ல.
2) ப்ரைவேட் இண்டெர்னேசனல் ஸ்டாண்டர்ட் மியாட் ஆஸ்பத்திரியில் 14 பேர் ஆக்சிஜன் இன்றி சாவு; மத்திய அரசு ஊழியர்களை CGHS திட்டத்தின் கீழ் இந்த மருத்துவமனை படுத்தும்பாடும் கொடுமையும் (அரசு ஊழியரிடம் இருந்து மக்கள் வரிப்பணத்தை கட்டணம் என்னும் பேரில்) அடிக்கும் கொள்ளையும் சொல்லி அடங்காது, அரசு மருத்துவமனையில் இது நடந்திருந்தால் ப்ரைவேட் சானல்கள் கூப்பாடு கூட்டி ‘.....அவரது உறவினர் சொல்வதை கேட்போம்’ என மைக்கை நீட்டியிருப்பார்கள்; 
மியாட் முதலாளிக்காக அடக்கி முனகுகின்றார்கள்.

3) இப்போதும் கூட அரசுப்பேருந்துகள், அரசு ரயில்கள்தான் இயன்றவரை இயக்கப்படுகின்றன; சென்னை கடற்கரை, திருவள்ளூர், அரக்கோணம் ஸ்டேசன்களில் இருந்து தென் மாவட்டங்கள், வட மானிலங்களுக்கு ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது;

’ஃபோன் செயதாப்போதும்’ என பீற்றிக்கொண்ட கால்டாக்சி கம்பெனிகள் எங்கே போயின? கோயம்பேட்டின் கொள்ளைக்கார கும்பலான ஆம்னி முதலாளிகள் செத்துப் போனார்களா?

4) பொதுத்துறை நிறுவனமான பிஎஸ் என் எல் ஐந்து நாட்களுக்கு இலவச சேவை அறிவித்துள்ளது, பில் கட்டுவதற்கான நாளை நீட்டித்துள்ளது; தனியார் செல்ஃபோன் சிக்நல் நாசமாகி மூணு நாள் ஆச்சு; பில் கட்ட மெசேஜ் தவறாமல் வரும், சந்தேகம் இல்லை.

5) அரக்கோணம் ராஜாளி கடற்படை தளத்தில் இருந்து இண்டியன் ஏர்லைன்ஸ் தமிழ்நாட்டுக்குள் 1000 ரூபாய், வெளிமானிலங்களுக்கு 2000 ரூபாய்க்கு சர்வீஸ் அறிவித்துள்ளது.

எல்லாம் அரசுத்துறையில் இருப்பதால் சாத்தியம்.
ப்ரைவேட் கார்பொரேட்டுகள் எங்கே போனார்கள்?
வெள்ளம் வடிந்தபின் ஈசிஆர் பெர்முடாஸ் பேர்வழிகள் ‘வாவ்...ப்ரைவேட் ஈஸ் ப்ரைவேட்யா..ச்யர்ஸ்’ என்று மீண்டும் பீர் பாட்டில் ஓப்பன்பண்ணி பொழந்தால் நாசமாப் போவீர்கள்

சென்னைப்பெருவெள்ளம் (2)


ஆதாரும் சேதாரும்...



புராணத்தில் வாசித்ததுபோல், இத்தனை மழைவெள்ளப்பேரழிவிலும் (பள்ளி கல்லூரி சர்டிஃபிகேட்டுகள், ரேசன் கார்டுகள், புத்தகங்கள், ஓட்டுனர் உரிமம், வீட்டுப்பத்திரம், இன்னும் இன்னும்...) எல்லாம் அடித்துக்கொண்டு போனபின்னும் ஆதார் கார்டுகள் மட்டும் வெள்ளத்தின் எதிர்த்திசையில் ஆக்ரோசமாக    நீந்தி 
 வானில் பறந்து,நேற்று வெளிநாட்டில் இருந்து வந்து  
முக்கா மணி நேரம் சென்னையில் பறந்த ஒரு விஐபியின் 
ஹெலிகாப்டரில் ஒட்டிக்கொண்டதாய் நந்தன்நீலகேணி சற்றுமுன் சொன்னார்.

சென்னைப்பெருவெள்ளம் (1)


சென்னைக்கு மிக அருகில், 20 அடியில் சுவையான குடிநீர்...

கல்லூரிகளில் பொறியியல் படிக்காத நமது முன்னோர்கள் எல்லா ஊர்களிலும் ஏரிகள் குளங்களை வெட்டி வைத்தார்கள்; படித்த நமது தலைமுறை ஆட்சியாளர்களும் பெரீய எஞ்சினியர் ஐயாக்களும் கலெக்டர்துரைகளும் ஏரி ஸ்கீம் என்று போட்டு ஏரிகளில் வீடு கட்ட அனுமதிக்கின்றார்கள்; என்னே விஞ்ஞானப்பார்வை!
சமீப காலங்களில் தினசரிகளின் சனி ஞாயிறு பதிப்புக்களில் முதல் 6 பக்கங்கள் ராட்சச விளம்பரங்கள் ரியல் எஸ்டேட் பிசினஸ் கம்பெனிகள் கொடுப்பவை! பெரும்பாலான காஸ்ட்லி ஏரியாக்களாக சொல்லப்பட்டவை சென்னையின் விளிம்பான வேளச்சேரி, ஓஎம் ஆர், தாம்பரம், பெருங்களத்தூர் ஏரியாக்கள். பழைய காஸ்ட்லி ஏரியாவான அண்ணாநகர் உண்மையில் வயற்காடுகள்தான். இன்றைய மழை வெள்ளம் நிரூபித்துவிட்டது, இந்த ஏரியாக்கள் எல்லாம் ஏரிகள், குளங்கள், குட்டைகள், கண்மாய்கள் என்று! ரியல் எஸ்டேட் முதலைகள்+ஆட்சியாளார்கள்+அதிகாரவர்க்கம் என்ற கூட்டணி சாமானிய மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றுகின்றது என்பதை இயற்கை அம்பலப்படுத்துகின்றது!

இந்துத்வா தீவிரவாதிகளின் தீவிர மாட்டுத்தோல் பிசினஸ் அரசியல்














இந்துத்வா தீவிரவாதிகளின் தீவிர மாட்டுத்தோல் பிசினஸ் அரசியல்:

டன் கணக்கில் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்து காசுபார்க்கும் கோட்சே கும்பலுக்கு மாடுகளின் மீதுதான் எத்தனை பரிவு!
’கோமாதா என் குலத்தை வாழ வைக்கும் குலமாதா’ - பிஜேபி இந்துத்வா தீவிரவாதிகளின் மாட்டிறைச்சி வியாபாரம்! the hindu நாளிதழ் அம்பலம்!
சங்கீத் சிங் சோம், பிஜேபி இந்துத்வா தீவிரவாதி. 65 பேர் கொல்லப்பட்ட செப் 2013 முசாஃபர்னகர் கலவரங்களை தூண்டிவிட்டதாக இவர் மீது 2 FIR உள்ளன; தாத்ரி படுகொலைக்கு முன் பிஷாரா கிராமத்தில் கொலைவெறியூட்டும் ‘மாட்டிறைச்சிக்கு எதிரான’ பிரச்சாரத்தை இதே நபர் செய்துள்ளார்.
இந்த pro-இந்துத்வா anti-மாட்டிறைச்சி தீவிரவாதி, அல்-டுவா, அல்-அனாம் என்ற இரண்டு மாட்டிறைச்சி பதப்படுத்தல் & ஏற்றுமதி கம்பெனிகளில் இயக்குனராக இருக்கின்ற விசயத்தை the hindu நாளிதழ் அம்பலப்படுத்தியுள்ளது!

மாட்டுத்தோலால் ஆன காலணிகளை தயாரித்து ஏற்றுமதி செய்யும் பிரபல தொழிற்சாலைகளின் அதிபர்கள் மாட்டுக்கறி சாப்பிடாத உயர்சாதி பிராமணர்கள், பனியாக்கள். மாடுவித்த காசு முட்டவா போகுது!
அவ்வை சண்முகி படத்தில் சண்முகி, ஜெமினிகணேசனை ஒரு காட்சியில் இதையேதான் கேட்பாள். 
(
லோக்கல் இந்துத்வா தீவிரவாதிகளான ஹெச்.ராஜா, கல்யாணராமன், ராமசுப்ரமணியன், ராமகோபாலன், தமிழிசை, இல.கணேசன், அர்ஜூன்சம்பத் ஆகியோர் சங்கீத் சிங் சோமை உடனடியாக தொடர்புகொண்டு பிசினஸ் பார்ட்னராக சேரலாம்! பொழுதுபோனா கெடைக்காது!)

கல்யாணராமன் என்ற லோக்கல் இந்துத்வா தீவிரவாதி தந்தி டிவியில் சொல்கின்றான்: ‘அந்த வீட்டில் இருந்த 17 வயதுப்பெண்ணை கற்பழிக்காமல் விட்டார்களே, அது பெருந்தன்மை இல்லையா?’ (தாத்ரி படுகொலை குறித்த விவாதத்தில்).
உ.பி.யில் தலித் குடும்ப பெண்களை நடுவீதியில் துகிலுரித்த கோர நிகழ்வை ‘அவர்களாகவே கிழித்துக்கொண்டார்கள்’ ‘அப்படி எதுவும் நடக்கவில்லை’ என்று முந்திக்கொண்டு முகநூலில் ஆர் எஸ் எஸ் தீவிரவாதிகள் பதிவிடுகின்றார்கள், யாரைக் காப்பாற்ற?

இன்னொரு இந்துத்வா தீவிரவாதியோ தாத்ரி படுகொலை சம்பவத்தை கண்டிக்காமல் இந்துமுஸ்லிம் சேர்ந்து வறுமையை ஒழிக்க பாடுபடவேண்டும் என கூவுகின்றான்.

ஜைனர்களின் திருவிழாவுக்காக மராட்டிய அரசு இறைச்சி விற்க தடை விதித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

நாடெங்கிலும் வெடிகுண்டுகள் வைத்து இஸ்லாமிய மக்கள் மீது பழி சுமத்தியவர்கள்; மஹாராஷ்ட்ராவில் ஆயுதப்பபயிற்சிப்பள்ளி நடத்தியவர்கள் (அதாவது வெடிகுண்டுகள் துப்பாக்கிகள் செய்வது எப்படி, அவற்றை சாமானிய மக்கள் மீது பிரயோகிப்பது எப்படி என்ற பயிற்சி); குஜராத்திலும் முசாஃபர்நகரிலும் இஸ்லாமிய மக்களை உயிரோடு தீயிட்டும் வெட்டியும் கொலை செய்தவர்கள்; செத்துப்போன மாட்டின் தோலை உரித்த தலித் மக்களை ஹரியானாவில் கொன்றவர்கள்; ஸ்டெயின்ஸ் பாதிர்யாரையும் அவரது மகன்களையும் உயிரோடு தீயில் எரித்தவர்கள்; இந்தக் கொலைகாரர்களுக்கு மனுசக்கறியை விடவும் மாட்டுக்கறி மேல்தான் எத்தனை கரிசனம்!


இத்தனை ஆயிரம் வருசங்களில் சாதியையும் ஊறுகாயையும் தவிர ஒரு மயிரையும் கண்டுபுடிக்க வக்கும் இல்லை வகையும் இல்லை; மாட்டுக்கறியும் பன்றிக்கறியும் தின்றவர்கள் கண்டுபிடித்த ஆயிரக்கணக்கான விஞ்ஞான சாதனங்களை ஒவ்வொரு வினாடியும் பயன்படுத்திக்கொண்டு திரிகின்ற அறிவிலிகளுக்கு மாடுகளின் மீதுதான் எத்தனை பாசம் பரிவு!

கேரள மக்களின் இறைச்சி ’அரசியல்’:

கேரள மக்களின் இறைச்சி ’அரசியல்’:


கொச்சி என்ற எர்ணாகுளத்தில் பணியில் இருந்தபோது சென்னைக்கு வரும்போதெல்லாம் எர்ணாகுளம் வடக்கு ரயில்வேஸ்டேசன் எதிரே உள்ள உணவகத்தில் இரண்டு பெரிய சப்பாத்திகளும் மாட்டுக்கறி கொத்துக்கறியும் பார்சல் செய்து வாங்கி, இரவு 8 மணிக்கு மேல் ரயிலில் சாப்பிடுவது வழக்கம். சுவையோ சுவை! ஆட்டிறைச்சியில் அத்தனை சுவை இருக்கவே இருக்காது என்பது உறுதி. நினைத்தாலே இனிக்கும்....

கேரள மக்களில் 80 விழுக்காட்டினர் (இந்துக்கள் இசுலாமியர்கள் கிறித்துவர்கள் என அனைவரும்) மாட்டிறைச்சி உண்பது சர்வசாதாரணம். ஓட்டல்களில் மாட்டிறைச்சி சாதாரணம், ஆட்டுக்கறி கிடைப்பதுதான் அரிது. காலை உணவே பரோட்டா மாட்டுக்கறி என்பது மிகச்சாதாரணம் அங்கு. கேரள பிஜேபியினரும் இதில் அடக்கம் என்பதை அகண்டபாரதக்கனவில் இருப்போர் அவசியம் தெர்ந்துகொள்ளவேண்டும். கேரள மக்களின் இறைச்சி உணவில் 40 விழுக்காட்டுக்கும் மேல் இடம் பெறுவது மாட்டிறைச்சியே. கேரளாவில் கோழி இறைச்சி வருடவிற்பனை 1.51 மெட்ரிக் டன் எனில் மாட்டிறைச்சியின் வருட விற்பனை 2.3 மெட்ரிக் டன்.
மஹாராஷ்ட்ர மாநில அரசு இறைச்சிக்கு தடை விதித்தபோது கேரள மக்கள் (மீண்டும் சொல்ல வேண்டியுள்ளது, இந்துக்கள் இஸ்லாமியர்கள் எல்லோரும் சேர்ந்து) பொது இடத்தில் மாட்டிறைச்சி சமைத்து மகிழ்வுடன் உண்டார்கள் என்பது செய்தி.

பிள்ளையாரும் நானும்...


பிள்ளையாரும் நானும்...



என் சிறு வயதில் இருந்தே விநாயகர் சதுர்த்தி அன்று அக்கம்பக்க வீடுகளில் இருந்து சுண்டல், கொழுக்கட்டை, சக்கரப்பொங்கல்...என ஏகப்பட்ட நல்லவிசயங்கள் வந்துவிடும், திகட்டத்திகட்ட; ஆனால் கொண்டு வந்து தரும் எவரும் பிள்ளையார் பேரைச்சொல்லி கொடுத்துவிட்டு சென்றதாக சத்தியமாக நினைவில் இல்லை; இன்றும் அப்படியே. அவரவர் பிள்ளையார் அவரவர் வீட்டுக்குள்; சுண்டலும் கொழுக்கட்டையும் வீடுகளைத்தாண்டி. 

ஆனால் இன்று பிள்ளையார் வீதிகளில் இருக்கின்றார்; நெடுஞ்சாலைகள் மட்டும் இன்றி குறுகலான  முட்டுச்சந்துகளில் கூட என காவிக்கொடிகள் பத்தடிக்கு ஒன்றாக பறக்கின்றன; ஃப்ளெக்ஸ் போர்டுகளில் பல ...ஜிக்கள் சிரித்தபடி போஸ் கொடுக்கின்றார்கள்; இந்து தர்மபரிபாலன சபை, விஸ்வ ஹிந்து பரிஷத், ஆர் எஸ் எஸ், இந்து முன்னணி... என பல பெயர்களில் பல பேர் நெற்றிகளில் குங்குமத்துடன் சிரிக்கின்றார்கள்; ’இந்தியா இந்துதேசமாகும் நாள் வெகுதொலைவில் இல்லை, அது உன்னால்தான் முடியும்’ என யாரோ ஒரு ...ஜி ஃப்ளெக்ஸ் போர்டில் சிரிக்கின்றார். களிமண்ணால் ஆன சின்னப்பிள்ளையாரை வீட்டுக்குள் வைத்து கும்பிடுவார்கள், நானும் கூட நின்று கும்பிட்டிருக்கின்றேன் சிறுவயதில். மறுநாள் பிள்ளையார் காணாமல் போயிருப்பார், அடுத்த வருசம்தான் வருவார்.

இப்போது நெடுஞ்சாலைகளிலும் முட்டுச்சந்துகளிலும் கூட 10, 20 அடி உயர பிள்ளையாரை வைத்து மைக்செட்டுக்களில் ‘வாருங்கள் வாருங்கள்’ என அறைகூவி அழைக்கின்றார்கள். அந்த ‘உன்னால்தான்...’ என்பது யாரை? சின்ன வயசில் இருந்தே என் குடும்பத்தார் சுவைத்துக்கொண்டிருக்கும் சுண்டலும் கொழுக்கட்டையும் பக்குவமாய் செய்து என் வீட்டுக்கு கொண்டு வந்து கொடுத்தானே, என் பக்கத்துவீட்டுக்காரனையா?

அப்துல் கலாம் (5) - ஒரு மதிப்பீடு


அப்துல் கலாம் (5) - ஒரு மதிப்பீடு





15. அப்துல்கலாம் அடிப்படையில் அவர் ஒரு விஞ்ஞானி மட்டுமே அல்லர், தனது ஆயுட்காலத்தின் பெரும்பகுதியை மிகப்பலம் வாய்ந்த அரசு அதிகாரியாக கழித்தவர்; மன்மோகன் சிங் என்ற பொருளாதார நிபுணர் அடிப்படையில் ஒரு அரசு அதிகாரியாக இருந்தவர்; பிற்பாடு அவர் நிதி அமைச்சராக, பின்னர் பிரதமராக இருந்தபோதுதான் இத்தேசம் ஆகப்பெரும் பொருளாதாரச் சீரழிவை சந்தித்தது; விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய அளவில் இருந்த இந்தியக்கோடீசுவரர்களின் எண்ணிக்கை அவர் நிர்வாகத்தில்தான் பல நூறுகளைத் தாண்டியது; விவசாய நாடான இந்தியா பல லட்சம் விவசாயிகளின் தற்கொலையை கண்ணுற்றது.
கடந்த 25 வருடங்களில்தான் இந்தியாவில் கோடீசுவரர்களின் எண்ணிக்கை பல நூறுகளைத்தாண்டியுள்ளது; அதே நேரம் ஏழைகளின் எண்ணிக்கை, குறிப்பாக இரண்டு வேளை உணவு உறுதியாக உண்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது; பொருளாதார ஏற்றத்தாழ்வு பெருமளவு உயர்ந்த சமுதாயமாக இந்திய சமூகம் சீரழிந்துள்ளது; விவசாய நாடு என அறியப்படும் இந்தியாவில் விவசாயம் தொடர்ந்து அழிந்து வருகின்றது; சில லடசம் விவசாயிகளை தற்கொலைக்கு தூண்டியதாக அரசின் கொள்கைகள் சில கார்பொரேட்டுக்களால் வடிவமைக்கப்ப்டுவது வெளிச்சம்.

இத்தகு நிலையில் எந்த ஒரு துறையில் நிபுணத்துவம் பெற்ற விஞ்ஞானிக்கும் தெளிந்த சமுகப்பார்வை, சமூக அக்கறை இல்லையெனில் அவரது அறிவாற்றலால் எத்தகைய பயனும் இந்த தேசத்துக்கு இருக்கப்போவதில்லை என்பது உறுதி. சமூகத்தின் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் குறித்த எந்த அக்கறையும் இல்லாமல் கருத்துக்கள் இல்லாமல் வெறுமனே கனவுகள் மட்டும் காணும் இத்தகைய விஞ்ஞானிகளுக்கும் தெருவோரம் சைக்கிள் டயரை பஞ்சர் ஒட்டி வாழ்க்கை நடத்தும் சிறு தொழிலாளிக்கும் எந்த வேறுபாடும் கோட்பாடு ரீதியாக இல்லை.

குறிப்பிட்ட துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள் இந்தியாவில் பல லட்சம் பேர் உள்ளார்கள்; மிகப்பெரிய அரசியல் பதவிகளான குடியரசுத்தலைவர், பிரதமர் போன்ற பொறுப்புக்களுக்கு ஒருவர் ஒரு குறிப்பிட்ட துறையில் நிபுணராக இருப்பது மட்டும் போதாது; அரசியல் கோட்பாடுகளில் தெளிவான பார்வை, முதிர்ச்சி, தொலைநோக்குப் பார்வை, உள்ளதை உள்ளதென்று சொல்லும் நேர்மை, துணிச்சல், உள்நாட்டு, வெளிநாட்டுக் கொள்கைகளின்பால் இத்தேசம் பல பத்தாண்டுகளாகக் கடைப்பிடித்து வந்த அணிசேராக்கொள்கை, ஏகாதிபத்திய எதிர்ப்பு, அணுஆயுத ஒழிப்பு ஆகியவற்றைப் பற்றி நிற்றல், அரசியல் சட்ட்த்தின் உயரிய கோட்பாடுகளுக்கு மதிப்பளித்தல், அக்கோட்பாடுகளின் பாதுகாவலானாக தன் நிலையை உறுதிப்படுத்தும் நெஞ்சுரம் ஆகியன குடியரசுத்தலைவர், பிரதமர் போன்ற பொறுப்புக்களை வகிப்பவர்களின் தலையாய தகுதிகள் என்பதை இந்தியாவின் அரசியல்போக்குகள் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றன.

(முற்றும்)

அப்துல் கலாம் (4) - ஒரு மதிப்பீடு


அப்துல் கலாம் (4) - ஒரு மதிப்பீடு

12. அப்துல்கலாம் என்ற ஏவுகணை விஞ்ஞானி, இந்தியாவை அணுஆயுதம் ஏந்திய ஒரு முரட்டு நாடாக மாற்றுவதில் பெரும் ஆர்வம் கொண்டவராக இருந்தார், அதில் வெற்றியும் பெற்றார்.
பாகிஸ்தானின் ஜனாதிபதியாக இருந்த முஷாரஃப், அப்துல்கலாம் இருவருமே ‘அணு ஆயுத நாடுகளாக இருப்பது இந்தியா பாகிஸ்தான் இரு நாடுகளுக்கும் இடையே போரைத் தவிர்த்திருக்கின்றது’ என்று சொல்லி இருக்கின்றார்கள்; 1998 மே மாதம் கார்கில் அணுவெடிப்பு சோதனைக்குப்பின் ”3000 வருடங்களாக இந்தியாவுக்கு வெளியே இருந்து வந்த அச்சுறுத்தல் பொக்ரான்-2க்குப் பிறகு அகன்றது” என கலாம் பெருமைப்பட்டுக்கொண்டார்; ஆனால் பாகிஸ்தானும் ஒரு அணுஆயுதத்தை வெடித்தபின்னர் நிலைமை மோசமானதே தவிர அமைதியில் முன்னேற்றம் ஏதும் இல்லை; ”அணு ஆயுதம் வைத்திருக்கும் நாடுதான் வல்லரசு” என்று இங்கே தோள் தட்டினால், மறுநாள் எல்லைக்கு அப்பால் மற்றொருவன் தோள் தட்டினான். அதனைத் தொடர்ந்துதான் கார்கிலில் போர் வெடித்தது; கலாமும் பிஜேபியும் (முஷாரஃபும்) மார்தட்டிக்கொண்டது போல் அணுஆயுதத்தை வைத்து ஒன்றும் செய்யமுடியவில்லை. 
அப்துல்கலாம் ஒரு தொழினுட்பாளராக இருந்தார் என்பதை ஒப்புக்கொள்ளலாம்; அரசியல் மதினுட்பம் வாய்ந்த ஒரு விஞ்ஞானியாக அவர் இருந்தாரா என்பது சந்தேகத்துக்கு உரியது.

13. அவருக்கு முன் ஜனாதிபதியாக இருந்தவர் கே.ஆர்.நாராயணன். குஜராத் கலவரங்கள் குறித்து தனது கவலையை வெளிப்படுத்தியவர் அவர்; பிரதமராக இருந்த வாஜ்பேயிக்கு “இந்திய சமூகத்தின், இந்தியாவின் மிக மோசமான பிரச்னை குஜராத் கலவரம்” என அவர் குறிப்பிடும் நேர்மையும் துணிச்சலும் இருந்தவராக இருந்தார்; படுகொலைகளைத் தடுத்து நிறுத்த ராணுவத்தை அனுப்புமாறு எழுதினார்.

14. காந்தி படுகொலையில் தொடர்பு உடைய ஏழு பேர்களில் ஒருவரான வினாயக் தாமோதர் சவர்காருக்கு பாரத்ரத்னா விருது வழங்க அன்றைய பிரதமர் பரிந்துரைத்த கடித்தின் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் மவுனமாக அதை கிடப்பில் போட்டதன் மூலம் தனது எதிர்ப்பை உணர்த்தியவர் நாராயணன்; பிற்பாடு ஒருநாள் அவர் வாஜ்பேயின் இல்லத்துக்கு சென்றபோது, தனது பரிந்துரையை திரும்பப்பெற்றுக்கொள்வதாக அறிவித்தார் வாஜ்பேயி.
அப்துல்கலாம் ஜனாதிபதியாக இருந்தபோது அதே சவர்க்காரின் உருவப்படத்தை நாடாளுமன்ற மத்தியமண்டபத்தில் மஹாத்மா காந்தியின் உருவப்படத்திற்கு நேர் எதிரே திறந்துவைத்து ஆர் எஸ் எஸ்-சின் மகிழ்ச்சிக்கு காரணமானார். அவர் நினைத்திருந்தால் மறுத்திருக்க முடியும்.
தொடரும்...

அப்துல் கலாம் (3) - ஒரு மதிப்பீடு


அப்துல் கலாம் (3) - ஒரு மதிப்பீடு

8. இரண்டாம் உலகப்போர் தீவிரமாக நடந்துகொண்டிருக்கின்றது. நேசநாடுகள் (அமெரிக்க முகாம்; போரின் பிற்பாதியில்தான் சோவியத் யூனியன் இப்போரில் இறங்கவேண்டியிருந்தது, அது தனியே எழுதப்படவேண்டியது), அச்சு நாடுகள் (ஹிட்லர், முசோலினி, ஜப்பானிய முகாம்) என உலகம் இரண்டாக பிளவு பட்டு நிற்கின்றது. முதலாம் உலகப்போரின் இறுதியில் ஜெர்மனிக்கு நேர்ந்த அவமானமே இரண்டாம் உலக்ப்போருக்கான காரணம் என சொல்லப்பட்டாலும் அது பொய்; ஏகாதிபத்தியங்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடுகளின் போட்டியின் விளைவே இரண்டாம் உலகப்போர்.
9. 1944ஆம் ஆண்டு ஆல்சோஸ் எனப் பெயரிடப்பட்ட திட்டமொன்று, ஜெர்மனியிடம் அணுகுண்டு உள்ளதா என்று கண்டுபிடிக்கும் நோக்கத்துடன் அமெரிக்காவால் நிறுவப்பட்ட்து. சாமுவேல் கவுட்ஸ்மிட் என்ற விஞ்ஞானியின் தலைமையிலான இக்குழு, ஜெர்மனியிடம் அணுகுண்டு இல்லை என்ற முடிவுக்கு வந்தது.


10. 1945 ஜூலை 24க்குப் பிறகு சோவியத் தலைவர் ஸ்டாலினுக்கு ட்ரூமன் ஒரு கடிதம் எழுதுகின்றார். அமெரிக்கா ஒரு ‘புதிய ஆயுதத்தை’கண்டுபிடித்துள்ளதெனவும் அது அசாதாரணமான பேரழிவு சக்திகொண்டது எனவும் கூறுகின்றார். ஆனால் ஸ்டாலின் இக்கடிதம் பற்றி மேற்கொண்டு எக்கருத்தும் கேட்டுக்கொள்ளாமல் மவுனமாக இருந்து விடுவது கண்டு ட்ரூமன் அதிர்ச்சி அடைகின்றார். ஸ்டாலின் நடப்பது என்ன என்று ஊகித்துக் கொண்டவராக அன்று மாலையே சோவியத் அணுசக்தி ஆராய்ச்சியை துரிதப்படுத்துமாறு தனது அதிகாரிகளுக்கு ஆணை இடுகின்றார்.
11. புகழ் பெற்ற விஞ்ஞானிகளான ஐன்ஸ்டீன், லியோசிலார்ட், நீல்ஸ்போர், வானெவர் புஸ், ஜேம்ஸ் கானண்ட், பொருளாதார நிபுணர் அலெக்சாண்டர் சாக் ஆகிய அனைவருமே அணு ஆயுத உபயோகத்துக்கு எதிராக குரல் கொடுத்தார்கள். நீல்ஸ்போர், அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட்டையும், பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலையும் நேரில் சந்தித்து புதிய ஆயுதத்தை மக்கள் மத்தியில் வெட்டவெளிச்சமாக்குமாறு கேட்டுக் கொண்டதுடன் ஜெர்மனியை சரணடையுமாறும் வேண்டினார்.

தொடரும்...

அப்துல் கலாம் (2) - ஒரு மதிப்பீடு

அப்துல் கலாம் (2) - ஒரு மதிப்பீடு

5. குஜராத் கலவரங்கள் அஹ்மதாபாத்தில் மிகக்கோரமான உஷ்ணத்துடன் இருந்த 2002 மார்ச்சில் அவர் குஜராத் சென்றார்; ஏவுகணைத்தொழினுட்ப வளர்ச்சிக்கான விருதைப்பெற அங்கு சென்றார். கலவரம் குறித்து ஒற்றைச்சொல்லையும் உதிர்க்காத ‘மனிதாபிமானம்’ மிக்க விஞ்ஞானியாக அவர் சென்று திரும்பினார்;
ஆக இவ்வாறு கனத்த மவுனம் காத்ததன் மூலமாக, ஆர் எஸ் எஸ்-சின் திட்டமான ‘ஒரு முஸ்லிமை இச்சமயத்தில் வேட்பாளராக அறிவித்து குஜராத் குறித்த ஒட்டுமொத்த சர்ச்சையையும் திசைதிருப்பிவிடலாம்’ என்ற திட்டத்துக்கு உடன்பட்டதன் மூலமாக, ஆர் எஸ் எஸ்-சின் மோசமான திட்டத்துக்கு துணைபோனதன் மூலம் இந்திய இஸ்லாமிய சமுதாயத்தைக் குப்புறத்தள்ளியவர் அப்துல்கலாம். இந்திய முஸ்லிம் சமுதாயம் அவரிடம் அத்தகைய ஒரு நேர்மையை, பிஜேபியின் தந்திரத்தை புரிந்து கொண்டு ஆர் எஸ் எஸ்-சின் தந்திரத்தை அம்பலப்படுத்தும் துணிச்சலை எதிர்பார்த்தது. அதில் நியாயம் இருந்தது; இந்திய சமூகத்தில் அன்றைக்கு அவருக்கு இருந்த நற்பெயரைப் பயன்படுத்தி ஆர் எஸ் எஸ்-சின் ‘கலாம் ஜனாதிபதி’ திட்டத்தை நிராகரித்திருப்பார் எனில் இந்திய அளவில் மட்டும் அல்ல, உலக அளவில் பிஜேபிக்கு அவரால் ஒரு நெருக்கடியை கொடுத்திருக்க முடியும், அதன் மூலம் குஜராத் படுகொலைகளை இந்துமத்திலேயே இருக்கின்ற கலாமை நேசிக்கின்ற அமைதிவிரும்பிகள், மதஒற்றுமையை விரும்புபவர்கள் மத்தியில் தீவிரமான விவாதத்தை தொடங்கி வைத்திருக்க முடியும்; தனது சறுக்கலால் அப்துல்கலாம் அத்தகைய ஒரு வரலாற்றுப்பொறுப்பில் இருந்து நழுவினார்.

6. தான் ஒரு சைவ உணவு விரும்பி (தாவர உணவு விரும்பி அல்ல!), அதிகாலையில் கீதை வாசிப்பவர் (அதாவது ஒரு இஸ்லாமியர் தனது புனித நூலான திருக்குரானை வாசிப்பதை விட்டுவிட்டு கீதை வாசிக்கின்றார் என்று கொள்க!), வீணை இசைப்பவர், சம்ஸ்கிருத ஸ்லோகங்களை உச்சரிப்பவர் என்று காட்டிக்கொண்ட்தன் மூலம் ஆர் எஸ் எஸ்-சின் ‘நல்ல முஸ்லிம்’ ஆனார். குடியரசுத்தலைவர் பொறுப்பேற்ற பின்னர் அவர் குஜராத் சென்றார் போன்ற வாதம் எல்லாம் செத்த பிணத்துக்கு உயிர்கொடுக்கும் முயற்சிகளே. நமது இந்தியத்திரைப்படங்களில் வரும் ‘நல்ல முஸ்லிம்கள்’ போலீஸ்காரனாக இருப்பார்கள், இவர்கள் ஆர் எஸ் எஸ்-சுக்கு உகந்த ’தேசபக்த’ முஸ்லிம்கள்; ‘கெட்ட முஸ்லிம்கள்’ வெடிகுண்டு வைப்பார்கள் என்பது நினைவுக்கு வருகின்றது.

7. புகழ்பெற்ற விஞ்ஞானக்கோட்பாடுகளைக் கண்டறிந்த விஞ்ஞானிகளும், புகழ் பெற்ற கருவிகள் எந்திரங்களைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகளும் மிகச்சிறந்த அறிவாளிகளாக மட்டும் இன்றி, மனிதாபிமானிகளாகவும் இருந்தார்கள் என்பதற்கு வரலாறு நெடுகிலும் ஏகப்பட்ட உதாரணங்கள் கிடக்கின்றன.

தொடரும்...

அப்துல் கலாம் (1) - ஒரு மதிப்பீடு


 அப்துல் கலாம் (1) - ஒரு மதிப்பீடு











1. கலாம் மறைந்துவிட்டார்; எளியவர்களின் ஜனாதிபதி என்ற பெயர் பெற்றார் என்பதை மறுப்பதற்கில்லை.

அவர் ஒரு சிறந்த தொழினுட்ப பொறியாளராக, ஏவுகணை விஞ்ஞானியாக அறியப்பட்டார், அது உண்மையே; அவர் 1998 போக்ரான் அணுவெடிப்புச்சோதனையின் பொறுப்பாளராக அல்லது ஒருங்கிணைப்பாளராக இருந்ததால் மட்டுமே அவரை அணுவிஞ்ஞானியாகவும் ஊடகங்கள் சித்தரித்தன, அது உண்மை அல்ல; 

2. ஜனாதிபதி என்ற பொறுப்பு அரசியல் பொறுப்பு வாய்ந்த பதவி; அரசியல் சட்டத்தின் பாதுகாவலர் என்ற முறையில் அவர் இந்த தேசத்தின், உலகத்தின் கடந்த கால, நிகழ்கால அரசியலை நுட்பமாகத் தெரிந்தவராக, தனது ஒவ்வொரு செயல்பாடும் தேசத்தின், உலகத்தின் எதிர்கால அரசியலை எத்திசையில் நகர்த்தும் என்பது புரிந்தவராக இருக்க வேண்டியுள்ளது; அவரது ஒவ்வொரு அசைவும் அரசியல் சட்டம் குடிமக்களுக்கு உத்தரவாதப்படுத்தியுள்ள உயரிய மரபுகளாகிய ஜனநாயகம், மதச்சார்பின்மை, இதுகாறும் இந்நாட்டில் பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்படும் மதவேறுபாடுகளைக் கடந்த ஒற்றுமை, சகிப்புத்தன்மையோடு கூடிய சகோதரத்துவம், அண்டை நாடுகளோடு நல்லுறவு, உலக அமைதி, சமாதானம் ஆகிய உயரிய கோட்பாடுகளை உயர்த்திப்பிடிப்பனவாக, உத்தரவாதப்படுத்துவனவாக உள்ளனவா என்பதும் உன்னிப்பாக கவனிக்கப்படுகின்றன. 


3. விடுதலை பெற்ற இந்தியாவின் மிகப்பெரும் மதக்கலவரங்கள் குஜராத்தில் வலதுசாரி இந்துத்துவா சக்தியான பிஜேபியின் நரேந்திரமோடி ஆட்சியில்தான் 2002ஆம் ஆண்டு நடந்தேறின.



4. மிகப்பெரும் அவப்பெயரை துடைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த பிஜேபிக்கு, முஸ்லிம் சமுதாயத்திடம் சிறு நல்ல பெயரையாவது பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்த பிஜேபிக்கு அன்றைய தினம் குடியரசுத்தலைவர் தேர்தல் ஒரு கருவியாக அமைந்தது; பிரதமர் வாஜ்பேயி சென்னையில் இருந்த அப்துல்கலாமை தொடர்பு கொண்டு அவரது தேர்வை தெரிவித்தபோது செய்தியாளர்களை சந்தித்த அப்துல்கலாம் ‘எது நடந்த்தோ அது நன்றாகவே நடந்தது; எது நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடக்கும்’ என்ற இந்துத்வா சக்திகளுக்கு உவப்பான, இந்த நாட்டின் புனிதநூலாக அறிவிக்கவேண்டும் என்று ஆர் எஸ் எஸ் தொடர்ந்து வலியுறுத்துகின்ற பகவத்கீதையின் வாசகங்களை உச்சரித்தார்; குஜராத் கலவரத்தின் உஷ்ணம் அப்போதும் அடங்கியிராதபோது, கலவரத்தில் தெருக்களில் ஓடிய குருதியின் ஈரம் காய்ந்திராத போதில் கலாம் உதிர்த்த சொற்கள் கீதையில் இருந்து; குஜராத்தில் நடந்தது கேடுகெட்ட மதக்கலவரம், அது நன்றாகவே நடந்ததா?

தொடரும்..