சனி, ஆகஸ்ட் 01, 2026

M S M E promotion council: பி.ஜே.பி. மோசடி விவகாரம்

பி ஜே பியின் லேட்டஸ்ட் மோசடி முகம்!

பூதாகரமாக உருவெடுக்கும் M S M E  promotion council மோசடி விவகாரம்!

ஒன்றிய அமைச்சர்களுக்கு பல கோடி ரூபாய் பங்கு!

அண்ணாமலை நடத்தும் பாதயாத்திரைக்கு பல கோடி ரூபாய் மோசடியில் பங்கு கொடுத்ததாக மோசடி க்ரூப் நபர் ஒப்புதல்.

ஒன்றிய அரசின் அங்கீகாரம் இல்லாத ஒரு அமைப்பு M S M E promotion council. மூணாம் கிளாஸ் படித்த முத்துராமன் என்பவர் இதன் முக்கியமான நபர். இவருக்கு தமிழ்நாட்டுக்கு வெளியிலும் தொடர்புகள் உள்ளன. குறிப்பாக பி ஜெ பி கட்சி, ஒன்றிய அமைச்சர்கள் தொடர்பு உள்ளது.

இந்த மோசடி அமைப்பு சிறு குறு நடுத்தர தொழில்கள் தொடங்க அரசு உதவி, கடன் பெற்று தருவதாக கூறி தமிழ்நாட்டில் பல பகுதிகளில் கூட்டங்களை நடத்தி வருகிறது. இந்த கூட்டங்களில், கூட்டம் நடக்கும் மேடைகளில் ஒன்றிய அரசின் சின்னம், அரசு முத்திரை, பிரதமர் படம் ஆகியவை தவறாமல் இடம் பெற்றுள்ளன. ஒன்றிய அரசின் அங்கீகாரம் இல்லாத ஒரு கும்பல் எப்படி பல வருடங்களாக இந்த மோசடியில் ஈடுபட முடிகிறது என்ற கேள்வி எழுவது இயல்பு.

இந்த கேள்விக்கு இப்போது பதில் தெரிய வருகிறது. சமீபத்தில் சேலத்தில் இந்த கும்பல் நடத்திய கூட்டத்தில் பி ஜெ பி பிரச்சார அறிவாளி நடிகை நமீதா கலந்து கொண்டார். தொடர்ந்து நடந்த செய்தியாளர் சந்திப்பில் தன் கணவர் இந்த அமைப்பின் முக்கியமான பொறுப்பில் உள்ளார் என்று வெளிப்படையாக தெரிவிக்கவும் செய்தார்.

இந்த நிலையில் சத்யம் டிவி இன்று 11.11.23 காலை நேரடியாக நடத்திய விவாத நிகழ்ச்சியில் இந்த மோசடி குறித்த மேலதிக தகவல்கள் அம்பலத்துக்கு வந்துள்ளன. MSME குறித்தும் அரசின் தொழில் கொள்கைகள், தொழில் நடத்த கடன், வங்கி கடன் கொடுப்பது, பெறுவது குறித்தும் பல வருட அனுபவம் பெற்றுள்ள சிலர் இந்த நேரலை விவாதத்தில் பங்கு பெற்றனர். அவர்கள் கூறும் விவரங்கள் அதிர்ச்சி அளிப்பவை. இவர்கள் கீழ்க்கண்ட சந்தேகங்களை எழுப்புகின்றனர்:

முத்துராமன் கும்பல் நடத்தும் இந்த க்ரூப் அரசு அங்கீகாரம் இல்லாதது என்றால் இந்த அமைப்பின் கூட்டங்களில் வங்கி அதிகாரிகள் எப்படி கலந்து கொள்ள முடியும்? எனில் இதனால் பலன் பெறுவது யார்?

அரசு அங்கீகாரம் இல்லாத ஒரு மோசடி கும்பல் நடத்தும் கூட்டங்களில் பிரதமர் படம், ஒன்றிய அரசின் சின்னங்கள், முத்திரைகள் பேனர்களில் இடம்பெறுவது எப்படி?

... ...

சத்யம் டிவி நேரலையில், பி ஜே பி அண் ணா மலை நடத்தும் பாதயாத்திரையின்போது அவர் இந்த மோசடி கும்பலிடம் இருந்து பல கோடி ரூபாய் பணம் வசூல் செய்ததாக பதிவு செய்தனர்.

மேலும் ஒன்றிய பி ஜெ பி அமைச்சர்கள் சிலருக்கு இந்த மோசடி கும்பல் பல கோடி ரூபாய் பணம் கொடுத்ததாக ஒப்புக்கொண்டதாகவும் நேரலையில் பதிவு செய்தனர்.
...

தேர்தல் பத்திரங்கள் மூலம் ஏறத்தாழ 5,500 கோடி ரூபாய் கார்ப்பரேட் முதலாளிகளிடம் இருந்து சுருட்டிய பி ஜே பி கட்சி.

அம்பானி அதானி போன்ற தன் உற்ற நண்பர்கள் கம்பெனிகளுக்கு பல லட்சம் கோடி ரூபாய் வரி விலக்கு அளிக்கிறது பி ஜே பி அரசு.

இந்த கம்பெனிகள் பொதுத்துறை வங்கிகளில் இருந்து கடனாக பெற்ற பல லட்சம் கோடி மக்கள் பணத்தை வெட்கம் இன்றி தள்ளுபடி செய்கிறது பி ஜே பி அரசு.

இதற்கு கைமாறாக அம்பானி அதானிகள் பி ஜே பி கட்சிக்கு அன்பளிப்பாக கொடுப்பதுதான் தேர்தல் பாண்டுகள் என்ற பத்திரங்கள். சுருக்கமாக சொன்னால் மக்கள் வரிப் பணத்தை மடைமாற்றி தன் கஜானாவில் நிரப்பும் கேவலமான தந்திரத்தில் பி ஜே பி பகிரங்கமாக ஈடுபடுகிறது.

கொரோனா கால நெருக்கடியை பயன்படுத்தி அரசு ஊழியர்களிடம் இருந்து வலுக்கட்டாயமாக பிடுங்கி சேர்த்த பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்துக்கு கணக்கு கேட்டால் அது தனியார் ட்ரஸ்ட், அரசுக்கும் இந்த ட்ரஸ்டுக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்று வெட்கம் இல்லாமல் பதில் சொல்கிறது பி ஜே பி அரசு.

ஆக மொத்தம் பிஜேபியின் மோசடி சாதனை பட்டியலில் இப்போது லேட்டஸ்ட் ஆக சேர்ந்து இருப்பது எம் எஸ் எம் ஈ மோசடி! இந்த விவகாரம் அம்பலத்துக்கு வந்ததால் வழக்கம்போல் மூணாம் கிளாஸ் முத்துராமனுக்கு வழக்கில் ஆஜர் ஆவது பி ஜெ பி வழக்கறிஞர் பிரிவு தலைவர்!

11.11.23

கருத்துகள் இல்லை: