நந்தன் நீலகேணி யார்?
நீட் மோசடிகளுக்கு எதிரான மாணவர்கள் இளைஞர்கள் டெல்லி போராட்டத்துக்கு பிறகு ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலக்கி தன்னை காப்பாற்றிக்கொண்டார் மோடி.
இதன் பிறகு இந்தியாவில் நுழைவுத் தேர்வு மோசடிகளை தடுப்பதற்காக என்று ஒரு கமிட்டியை அறிவிக்கிறார் பிரதமர் மோடி ஜூலை 26 அன்று. அதன் தலைவராக இந்த நந்தன் நீலக்கேணியையும் உறுப்பினர்களாக சோமநாத், காமகோடி, தாப்பன் டெக்கா, அனிதா கார்வால், அமரித் லால் மீனா ஆகியோரையும் நியமிக்கிறார்.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மூத்த அதிகாரியாக இருந்த நபர் இந்த நந்தன் நீலகேனி. காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஆக இருந்தவர்! தேர்தலில் போட்டியிட்டார்.
கார்கில் போருக்கு பின்னர் அன்றைய கார்கில் பரிசீலனை குழு என்ற ஒரு கமிட்டி தேச பாதுகாப்பை முன்வைத்து எல்லைப் பகுதிகளில் வாழும் இந்திய குடிமக்களுக்கு ஒரு அடையாள அட்டையை கொடுக்கலாம் என்று பரிந்துரை செய்தது.
அதன் பின்னர் 2001- 2003 காலகட்டத்தில் ஒன்றிய அமைச்சர்கள் அடங்கிய ஒரு குழுவானது இந்த பரிந்துரையை ஏற்ற பின்னர் 2003இல் குடிஉரிமை திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் முக்கிய அம்சம், மக்களுக்கு தேசிய அடையாள அட்டை ஒன்றை கட்டாயம் ஆக்கியது. அப்போதும் காங்கிரஸ் கட்சி ஆட்சிதான்.
காலப்போக்கில் இது தேச பாதுகாப்பு என்ற எல்லையைத் தாண்டி மக்களுக்கான நலத்திட்டங்களுடன் இந்த அட்டையை இணைப்பதில் வந்து நின்றது. அப்போதும் காங்கிரஸ் கட்சி ஆட்சிதான்.
ஆக ஆதார் அடையாள அட்டை என்ற கொடுமையை பரவலாக்கியது காங்கிரஸ் கட்சி ஆட்சிதான்.
அதற்கு என ஒரு அலுவலகத்தை திறந்து அதற்கு UIDAI என்று பெயரும் வைத்தது. உண்மையில் இந்த நிறுவனத்தில் வேலை செய்த எல்லாரும் தனியார் காண்ட்ராக்ட் தொழிலாளர்கள், நந்தன் நீலகேணி உட்பட! கண்காணிக்க மட்டும் சில அரசு அதிகாரிகள் இருந்தார்கள்.
உண்மையில் அன்றைய நாடாளுமன்ற நிலைகுழுவால் நிராகரிக்கப்பட்ட ஒரு திட்டம் ஆதார்.
ஞாபகம் இருக்கிறதா? எரிவாயு மானியத் தொகையை உங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்க என்றுதான் ஆதாரை நமது வீட்டுக்குள் வம்படியாக கொண்டு வந்து திணித்தார்கள். எந்த மானியம்?
இப்போது எரிவாயு சிலிண்டர் மானியம் என்பது 25 ரூபாய்க்கு கீழே!
அதன் பிறகு இந்திய மக்களை இவர்கள் படுத்திய கொடுமை நீங்கள் எல்லாம் அறிந்த ஒன்றுதான்! சுடுகாட்டுக்கு போனாலும் செத்த பிணத்தை தட்டி எழுப்பி ' ஆதார் எங்கே? ' என்று கேட்கிற அளவுக்கு அரசுத்துறை, தனியார் துறை, பப்ளிக் கக்கூஸ் நிர்வாகம் அனைத்துக்கும் அதிகாரத்தை கொடுத்த கொடுமையை காங்கிரஸ் ஆட்சிதான் தொடங்கி வைத்தது, அதன் பின்னர் வந்த பிஜேபி அதை மேலும் மேலும் இறுக்கி பிடித்து மக்களை வன்கொடுமை செய்கிறது. இப்போது நிலைமை என்ன?
ஆதார் இல்லாத ஒரு நபர் செத்த பிணத்துக்கு சமம் அல்லது அதைவிட கேடான ஒரு பிறவி, உயிர் வாழ்வது பயனற்ற ஒன்று என்ற அளவுக்கு கொடுமை படுத்திய பிஜேபி அரசு SIR கணக்கெடுப்பு படிவத்தில் ஆதார் அடையாளத்தை சேர்க்க மறுத்தது என்பதை மறக்க முடியுமா?
இப்போதும் கூட UIDAI அதிகாரப்பூர்வ தளத்தை பாருங்கள், இந்தியாவில் ஆதார் என்பது ஒரு கட்டாயமான அட்டையை அல்ல என்று உறுதியாக சொல்லப்பட்டிருக்கும். மட்டுமின்றி மிக பரவலாக எல்லோரும் நினைப்பது போல் ஆதார் என்பது குடியுரிமைக்கான அடையாட்டை அல்ல, அது குடி இருப்பவர்க்கான அடையாள அட்டை மட்டுமே.
...
நிற்க.
அதே நந்தன் நீலகேணி என்ற தனியார் நபரைத்தான் எதிர்கால இந்தியாவில் நுழைவுத் தேர்வுகளில் மோசடி நடக்காமல் தடுப்பது எப்படி என்று ஆராய்ச்சி செய்ய மோடி அரசு நியமித்து இருக்கிறது. National testing agency என்று சொல்லப்படுகின்ற தேசிய நுழைவுத் தேர்வு முகமை அரசு நிறுவனம் என்று சொல்லப்பட்டாலும் அது அரசாங்கத்தால் நேரடியாக கட்டுப்படுத்த முடியாத ஒரு சுதந்திரமான அமைப்பு, ஒரு சொசைட்டி. அவ்வளவுதான்.
ஜூன் மாத நீட் மோசடிகளில் தொடர்புடைய ராஜஸ்தான் பிவால் குடும்பம் பிஜேபியுடன் தொடர்புடையது. அந்த குடும்பத்தில் ஆறு பேர் நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்று டாக்டராக படித்து வருகிறார்கள்! படித்து முடித்த அடுத்த நாள் இந்தியாவின் எல்லைப்புற கிராமங்களில் ஆரம்ப சுகாதார மருத்துவ மனைகளில் சேர்ந்து மக்களுக்கு சேவை செய்வார்கள் என்று எதிர்பாருங்கள்.
நந்தன் நீலகேணியின் சொத்து மதிப்பு விக்கி தகவல் படி 240 கோடி அமெரிக்க டாலர். இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 23000 கோடி.
அதே விக்கி தகவல் படி நந்தன் நீலகேனியின் மகன், மகள் இருவரும் அமெரிக்காவில் யேல் பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள், இந்தியாவில் அல்ல.
இவர்தான் நீட் தேர்வு மோசடிகளை ஒழுங்குபடுத்துவார் என்று மோடி அரசு நம்புகிறது. நாமும் நம்புவோம்.
#abolish_NEET
27.7.26

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக