1914 முதல் உலகப்போர், 1939 இரண்டாம் உலகப்போர். இரண்டிலும் போரின் முகம், போரின் விளைவுகள், எதிர்கால சந்ததிகள் மேல் போர்கள் ஏற்றிய சுமைகள் ஆகியவற்றை நேரடியாக
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான், இத்தாலி, ஜெர்மனி, ரஷ்யா, சோவியத் ஒன்றியம், ஐரோப்பிய நாடுகள், கிழக்கே மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளின் மக்கள் இந்தப் போர்களின் தாக்குதலை, உயிர் உடைமை இழப்பை நேரடியாக உணர்ந்தார்கள். இப்போதும் அதன் வெப்பம் நீங்கிய பாடில்லை. குறிப்பாக holocaust.
இந்தியா இரண்டாம் உலகப் போரின்போது பிரிட்டனின் காலனிய நாடாகத்தான் இருந்தது. அதாவது ஒரு சுதந்திர நாட்டின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாக இரண்டாம் உலகப்போரை அன்றைய ( பிரிட்டிஷ் ) அரசு அல்லது இந்திய மக்கள் நடத்தவில்லை.
துல்லியமாகச் சொன்னால் பர்மா மணிப்பூர் வழியாக ஒருவேளை அச்சு நாடுகளின் படை இந்தியாவுக்குள் நுழைந்து இருந்தால் அது இந்திய மண்ணில் போரின் முகத்தை மாற்றி இருக்கும். போரின் கோர முகத்தை இந்தியர்கள் உணர்ந்து இருப்பார்கள். அன்றைய இந்தியா என்பது இன்றைய பாகிஸ்தானும் சேர்ந்த நாடு என்ற கவனத்தையும் கோருகிறேன். இரண்டாம் உலகப்போரின்போது அந்தமான் தீவுகளை ஜப்பானியர் கைப்பற்றி தமது அதிகாரத்தின் கீழ் வைத்து இருந்தார்கள். நேதாஜிசுபாஷ் சந்த்ர போஸ் அப்போது போர்ட் ப்ளேருக்கு வந்து இருக்கிறார். நான் அந்தமான் தீவுகளுக்கு 2015ஆம் ஆண்டு சென்று இருந்தபோது ராஸ் தீவில் ஜப்பானிய பதுங்கு குழிகளை பார்த்தேன். பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. ஆக இந்திய நிலப்பகுதி ஒன்றை அச்சு நாடுகளில் ஒன்றான ஜப்பான் கைப்பற்றியது எனில் அது அந்தமான் மட்டுமே. போருக்குப்பின் அது மீண்டும் இந்தியா வசம் வந்தது.
...
இந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் அல்லது இயக்குனர்கள் அதிக பட்சம் பார்த்தது 1970 க்கு பின் ஆன மேற்கு எல்லையில் நிகழ்ந்த ஒரு போர். அதன் பின் கார்கில். கார்கில் என்பது உண்மையில் ஒரு போரே அல்ல. அது அன்றைய வாஜ்பேயி அரசு தனது சூரத்தனத்தை காட்ட வேண்டும் என்றே மேற்கில் உள்ள நாட்டின் படைகளை ஊடுருவ அனுமதித்து நிகழ்த்திய ஒரு நாடகம். அதாவது வெற்று முண்டா தட்டுதல். அதன் பின் நிகழ்த்தப்பட்ட நாடகம் புல்வாமா. அதுவும் ஒரு போர் அல்ல. தேர்தல் ஆதாயத்தை தேடி நடத்தப்பட்ட நாடகம். அதில் உயிரை இழந்த 49 பேரும் சாமானிய உழைக்கும் மக்களின் குடும்பங்களில் இருந்து வேலைக்கு சென்ற அப்பாவி சிப்பாய்கள். இந்த சிப்பாய்களில் ஒருவர் கூட அம்பானி, அதானி, அத்வானி, அமித் ஷா, மோடி, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், நட்டா, மோகன் பகத், சுப்ரமண்ய ஸ்வாமி, கிரண் ரிஜிஜு ஆகியோரின் குடும்பங்களில் இருந்து வேலைக்கு சென்றவர்கள் இல்லை.
இந்திய மக்கள் சந்தித்த ஆகப்பெரும் பேரழிவு அல்லது சேதம் எனில் அது 1947க்கு பிறகான பிரிவினைதான். அதையும் மேற்கு- வடமேற்கில் பஞ்சாப் மக்கள்தான் அனுபவித்தார்கள். கிழக்கே வங்கம் இரண்டு முறை பிரிக்கப்பட்ட போது வங்க மக்கள்தான் அதே துயரங்களை அனுபவித்தார்கள். இதுதான் உண்மையான அரசியல்.
வட இந்திய, குறிப்பாக டெல்லி, பஞ்சாப், வங்க இலக்கியங்கள், சினிமாக்கள், எழுத்தாளர்களின் கலை வடிவங்களின் மையமாக Partition இருப்பதன் காரணம் இதுதான்.
தமிழ்நாட்டில் இருக்கும் மணி ரத்னம், கமலஹாசன் போன்ற மொண்ணைகளும் மொக்கைகளும் போர், பிரிவினை, ராணுவம் என்று பேசுவது, படம் ஆக்குவது எல்லாம் மேற்படி கொடுமைகளை முதலீடாக ஆக்கி பணம் திரட்டும் கேவலமான முயற்சி, அவ்வளவுதான்.
ரோஜா, விஸ்வரூபம், அமரன் உள்ளிட்ட தமிழ் படங்களும் பல ஹிந்தி மொழி படங்களும் பேசும் பொய் அரசியல் இதுதான். பச்சையாக சொன்னால் ஸ்டார் ஹோட்டலில் உட்கார்ந்து போர் பற்றி பேசி எழுதி காசு சம்பாதிக்கும் கேவலமான பொழைப்பு. இவர்களை பொறுத்த மட்டில் இரத்தம் என்பது இரண்டு ரூபாய் சிவப்பு மை மட்டுமே. பதினோராவது அவதார character க்கான make up.
...
உண்மையில் இந்தியா சந்தித்த ஒரே போர் 1962 யுத்தம்தான்.
மணி ரத்னம், கமலஹாசன் போன்றோர் இந்திய சீன யுத்தம் பற்றி படம் எடுக்க முன்வர வேண்டும்.
...
1914இல் மெட்ராஸ் ஹை கோர்ட் சுவரில் ஜெர்மனி எம்டன் கப்பல் போட்ட குண்டு இப்போதும் சென்னை கோட்டை மியூசியத்தில் காட்சி பொருளாக உள்ளது. அதை வைத்துக்கொண்டு சென்னை மக்கள் முதலாம் உலகப்போர் காலத்தில் தீவிரமான பங்கு பெற்றார்கள் என்று சொன்னால் அது எந்த அளவுக்கு நகைச்சுவையாக இருக்குமோ அதற்கு சற்றும் குறைந்தது அல்ல கார்கிலும் புல்வாமாவும். இரண்டும் இந்திய மக்களுக்கு தொடர்பு இல்லாத நிகழ்வுகள், போர்கள் அல்ல. இரண்டுமே பிஜேபி ஆட்சி காலத்தில் அதுவும் கிழக்கில் இல்லாமல் மேற்கில் ஏன் நிகழ்ந்தன என்ற கேள்வி முக்கியமானது.
தவிர எம்டன் குண்டு சென்னையில் விழுந்த உடன் இனிமேல் இந்தியாவை ஹிட்லர் கைபற்றி விடுவான் என்று முடிவு செய்து, அவனது ஆட்சியில் சேவகர்களாக சேவை செய்யும்பொருட்டு மாம்பலம், மைலாப்பூர் பகுதிகளில் வாழ்ந்த குறிப்பிட்ட சாதியினர் ஜெர்மன் மொழி படிக்க ஓடியதாகவும் வரலாறு சொல்கிறது. மணி ரத்னம், கமலஹாசன் போன்றோர் அது பற்றி அடுத்த படங்களை எடுக்க வேண்டுகிறேன்.
12.11.24

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக