ஞாயிறு, ஆகஸ்ட் 02, 2026

2026 கால்பந்து போட்டி: கடவுளர்களான கால்பந்து வீரர்களும் கண்டனங்களில் சிக்கிய ஃபிஃபா அமைப்பும்

2026 உலககோப்பை கால்பந்து போட்டி:

17.6.2026 அன்று நடந்த போட்டியில் அல்ஜீரியாவுக்கு எதிரான மெஸ்ஸியின் முதல் இரண்டு கோல்கள் பாராட்டுக்கு உரியன. மெஸ்ஸி தலை சிறந்த கால்பந்து வீரர்தான். ஆனால் 
மூன்றாவது கோல் off side இல்லையா? அர்ஜென்டினா அணியின் 25ஆம் எண் வீரர் off side இல்லையா? இந்த வீடியோ பதிவின் ஸ்கிரீன் ஷாட் பாருங்கள்.

அதே போட்டியில் அல்ஜீரிய அணியின் தலைவரும் முன்னணி தடுப்பாட்ட வீரரும் ஆன Aissa Mandi ஐ அவரது பின் பக்கம்  இருந்து ஜெர்கினை பிடித்து இழுத்து அவரது கெண்டைக்காலின் மீது தனது ஸ்பைக் காலணியால் மிதித்து மோசமான தப்பாட்டம் ஆடியவர் வேறு யாரும் இல்லை, மெஸ்ஸிதான். அவரது இந்த தப்பாட்டத்துக்கு சிவப்பு அட்டை கொடுத்து வெளியேற்றி இருக்க வேண்டும். நடுவர் கண்டுகொள்ளவில்லை. ஆட்டத்திற்கு பிறகு அல்ஜீரிய கால்பந்து சங்கம் தனது ஆட்சேபனையை எழுத்து வடிவில் FIFA விடம் சமர்ப்பித்தது. ஆனால் ஃபிஃபா அதை கண்டுகொள்ளவில்லை. மட்டுமின்றி நடுவரின் அலட்சியம் உலகளாவிய கண்டனத்துக்கு ஆளானது.

இருபது நாட்களுக்குப் பின் ஜுலை 7 அன்று எகிப்துக்கு எதிராக அர்ஜென்டினா விளையாடிய போட்டியும் சர்ச்சையில் முடிந்து கண்டனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. எகிப்து அணியின் ஒரு கோலை செல்லாது என்று நடுவர் அறிவித்தார். அர்ஜென்டினா அணியின் அலெக்சி மாக் செய்த தவறுக்கு எகிப்து அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்க வேண்டும், ஆனால் V A R நடுவர்கள் கண்டுகொள்ளவில்லை என்று எகிப்து அணி குற்றம்சாட்டுகிறது. ஆட்டம் முடிந்தபின் நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட எகிப்து அணியின் பயிற்சியாளருக்கு மஞ்சள் அட்டை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

2025இல் நடந்த 2026 உலககோப்பை சர்வதேச போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டம் ஒன்றில் விளையாடியபோது அயர்லாந்து வீரர் ஓஷியா மீது மோசமான வகையில் மோதி விளையாடியதற்காக போர்ச்சுகலின் வீரர் ரொனால்டோவுக்கு சிவப்பு அட்டை தண்டனை கொடுக்கப்பட்டதுடன் அடுத்த மூன்று ஆட்டங்களுக்கு அவர் விளையாட தடை செய்யப்பட்டது. இங்கே கவனிக்க வேண்டியது என்னவெனில் இந்த அடுத்த மூன்று ஆட்டங்கள் எனில் நேராக அவர் 2026 இறுதிப் போட்டிகளில் விளையாட முடியாது என்று அர்த்தம்! ஃபிஃபா என்ன செய்தது? மூன்று போட்டிகள் தடை என்பதை மாற்றி அடுத்து அவர் ஆடக்கூடிய முதல் போட்டிக்கு மட்டும் தடை, மீதம் உள்ள இரண்டு போட்டிகளில் அவர் விளையாடலாம், அவரது 'நடத்தை' இந்தக் காலத்தில் கண்காணிக்கப்படும் (under probation) என்று முடிவை மாற்றியது. சரியாக சொல்ல வேண்டும் எனில் 2026 உலககோப்பை இறுதி சுற்று விளையாட அவருக்கு வழி செய்தது ஃபிஃபா!

உலககோப்பை நாக் அவுட் சுற்றுக்களில் 2002ஆம் ஆண்டு மெக்சிகோ அணியை வென்று அடுத்த கட்டத்துக்கு சென்ற அமெரிக்கா அதன் பிறகு நடந்த எந்த போட்டியிலும் அடுத்த கட்டத்துக்கு சென்றதில்லை. இப்போது 2026இல் போஸ்னியா-ஹெர்செகோவினா அணிக்கு எதிராக நடந்த போட்டியில் அமெரிக்க வீரர் Folarin Balogunனுக்கு சிவப்பு அட்டை கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதன் பொருள் அடுத்த போட்டியில் அவர் பங்குபெற முடியாது. இந்தப் போட்டியில் அமெரிக்கா 2-0 என்று வெற்றி பெற்றதால் அடுத்த போட்டியில் பெல்ஜியத்தை எதிர்கொள்ள வேண்டி இருந்தது.

போஸ்னியா-ஹெர்செகோவினா அணி குறித்தும் அந்த அணி எத்தகைய நெருக்கடியின் பின்னணியில் இந்தப் போட்டிகளுக்கு வந்துள்ளது என்பது குறித்தும் தனியாக எழுத வேண்டிய அவசியம் உள்ளது. இங்கே எழுதினால் பதிவின் நோக்கம் திசை திரும்பும்.

இங்கேதான் போட்டிக்கு தொடர்பு இல்லாத இன்டெர்னேசனல் ஜேம்ஸ்பாண்ட் டொனால்ட் ட்ரம்ப் நுழைகிறார். தனது நெருங்கிய நண்பர் ஆன ஃபிஃபாவின் தலைவர் ஆன இன்ஃபான்டினொவை தொலைபேசியில் அழைக்கிறார். அவ்வளவுதான். ஏதோ ஒரு விதியை தேடி எடுத்து Folarin Balogunனுக்கு வழங்கப்பட்ட அடுத்த ஆட்டத்தடை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. அதாவது பெல்ஜியம் அணிக்கு எதிராக அவர் விளையாட அனுமதிக்கப்பட்டார்!

இது பற்றி பெல்ஜிய கால்பந்து கழகம் தனது கண்டனத்தை ஃபிஃபியாவுக்கு எழுதி தெரிவித்துள்ளது. ஃபிஃபா கண்டுகொள்ளவில்லை. ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் சம்மேளனம் ஃபிஃபாவின் இந்த முடிவை கண்டனம் செய்துள்ளது. பெல்ஜியத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் முன்னாள் கால்பந்து நடுவராக பணி செய்தவர். ஃபிஃபாவின் இந்த முடிவு பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது என்று வெளிப்படையாக அதிருப்தி தெரிவித்துள்ளார். 

ஆனால் பெல்ஜியம் அந்தப் போட்டியில் அமெரிக்காவை துவைத்து எடுத்து போட்டியிலிருந்து வெளியேற்றிவிட்டது என்பது வேறு கதை!
...

F I F A வும் வணிகமயம் (மையம்) ஆகிவிட்டது என்பதும், விளையாட்டின் பரபரப்பையும் கூட்டத்தையும் அதிக டிக்கெட் விற்பனையையும் உறுதிப்படுத்த குறிப்பிட்ட சில பிராண்ட் வீரர்கள் ஃபிஃபாவின் செல்லப் பிள்ளைகளாக வளர்க்கப் படுகிறார்கள். 

இந்த குறிப்பிட்ட சில நட்சத்திர வீரர்கள், ஸ்பைக், பந்து, மட்டை, உடல் அணிகலன்கள் உள்ளிட்ட விளையாட்டு சாதனங்கள் உற்பத்தி செய்யும் மிக மிக பெரிய corporate கம்பெனிகளின் பிராண்ட் விற்பனை விளம்பர நட்சத்திரங்கள் ஆக இருக்கிறார்கள் என்பதும் இந்த கம்பெனிகளுக்கும் ஃபிஃபாவுக்கும் இடையே ஆன மறைமுகமான பண உறவு ரகசியம் இல்லை என்பதும் மீண்டும் உறுதி ஆகிறது.

மெஸ்ஸி, பிரபல விளையாட்டு சாதன கம்பெனி ஆன அடிடாஸ், விளையாட்டு சாதனம், நகைகள், கடிகாரம், ஆடைகள் உள்ளிட்ட பொருட்களை உற்பத்தி செய்யும் Louis Vuitton ஆகிய கம்பெனிகளின் பிராண்ட் விளம்பர நட்சத்திரம் ஆவார்.

ரொனால்டோ, பிரபல விளையாட்டு சாதன கம்பெனி ஆன நைக், TAG Heuer, கடிகார கம்பெனி ஆன ஜேக்கப் அண்ட் கொ ஆகிய கம்பெனிகளின் பிராண்ட் விளம்பர நட்சத்திரம் ஆவார். நைக் கம்பெனியுடன் அவர் தன் வாழ்நாள் முழுவதும் ஒப்பந்தம் செய்துள்ளார்.

கிலியன் எம்பாபெ, பிரபல விளையாட்டு சாதன கம்பெனி ஆன நைக், கடிகார கம்பெனி ஆன Hublot ஆகிய கம்பெனிகளின் பிராண்ட் விளம்பர நட்சத்திரம் ஆவார்.

இவை சில உதாரணங்கள் மட்டுமே.

தனிப்பட்ட விளையாட்டு வீரர்களின் திறமை என்பது வேறு, இந்தப் போட்டியில் உள்ளூர புதைந்து கிடக்கும் கார்பொரேட் அரசியல் என்பது வேறு.

தொடக்கம் முதலே, அதாவது தகுதி சுற்றி போட்டிகள் நடக்கும் போதே அல்ஜீரியாவுக்கும் அர்ஜென்டினாவுக்கும் நடந்த போட்டியில் மெஸ்ஸி செய்த தவறுக்கு ரெட் கார்டு கொடுத்திருக்க வேண்டும். 

அதன் பின் நடந்த போட்டிகளில் அர்ஜென்டினா அணிக்கு சாதகமான நடுவர்களின் கண்டுகொள்ளாமை உலகம் எங்கும் பலத்த விமர்சனங்களுக்கு உள்ளானது.

மட்டுமின்றி அமெரிக்க வீரருக்கு கொடுக்கப்பட்ட ரெட் கார்டு டொனால்ட் ட்ரம்பின் தலையிட்டால் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்ட ஃபிஃபாவின் முடிவு என்பது நியாயமானது அல்லவே!? 

Nike, adidas போன்ற மிகப்பெரிய ஸ்போர்ட்ஸ் சாதனங்களின் பிராண்ட் விளம்பரதாரராக ரொனால்டோ, மெஸ்ஸி, ம்பாபே, போன்றவர்கள் இருப்பது, இன்பான்டினோவின் சர்வதேச அரசியல் தலைவர்கள் பிரதமர்கள் ஜனாதிபதிகள் உடனான குறிப்பாக ட்ரம்ப் உடனான நெருக்கமான உறவு, நடந்த போட்டிகளில் நடுவர்களின் ஒருதலைப்பட்சமான refereeing என பல நேர்மையற்ற காரணிகள் நடந்து முடிந்த இந்த போட்டிகளில் நம்பகத்தன்மையை கேள்விக்குறி ஆக்கின. 

வணிகமயம் ஆக்கப்பட்டு விட்ட போட்டிகளில் தொய்வு ஏற்படுத்த அல்லது நீண்ட ஒரு மாதம் போட்டிகள் நடக்கவுள்ள நிலையில் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிற எதிர்பார்ப்பு அல்லது பரபரப்பை பணம் ஆக்கும் முயற்சியில் தடங்கல் ஏற்படுத்த ஃபிஃபா தலைமை விரும்பாது என்பதை விடவும் மேற்படி கார்பொரேட் கம்பெனிகளின் கோபத்தை சம்பாதிக்க ஃபிஃபா தயாராக இல்லை என்பதுதான் உண்மை.
...

இவையெல்லாம் தாண்டி விளையாட்டு என்பது நாடுகளின் எல்லைகளை கடந்தது, இன வேறுபாடுகளை கடந்தது, மத வேறுபாடுகளை கடந்தது போன்ற உயரிய கோட்பாடுகள் அனைத்தும் நடந்து முடிந்த போட்டிகளில் காலில் போட்டு மிதிக்கப்பட்டன. இந்த ஆரவாரத்தில், பெருங்கூச்சலில், ஸ்டார் விளையாட்டு வீரர்களின் வெளிச்சத்தில் ஈரான் அணிக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அவமானமும் அநீதியும் வரலாற்றில் மறக்க முடியாது, மறுக்க முடியாதது. சர்வதேச போட்டி ஒன்றில் விளையாடுவதற்காக மட்டுமே  அமெரிக்காவில் இறங்கியுள்ள  ஈரான்   கால்பந்து அணி மீது அமெரிக்க ஏகாதிபத்தியம் திணித்துள்ள கெடுபிடிகள் நிபந்தனைகள் மிக மிக கேவலமானவை, சர்வ தேச நியதிகளை, அடிப்படை மனிதாபிமான நெறிகளை மீறுபவை.

குறைந்தபட்ச மனிதாபிமானம் கூட இல்லாத அளவுக்கு அமெரிக்க ஏகாதிபத்தியமும் போட்டியை நடத்துகின்ற ஃபிஃபாவும் ஈரான் விசயத்தில் நடந்துகொள்கின்றன. போட்டி முடிந்தவுடன் விளையாட்டு வீரர்கள் தங்களது ஓய்வறைக்கு சென்று தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்வது எங்கும் இருக்கிற நடைமுறை, குறைந்த பட்ச தேவையும் கூட. ஆனால் ஈரான் கால்பந்து அணி போட்டி முடிந்த மறு நிமிடமே நேராக விமான நிலையம் சென்று விமானம் ஏறி மெக்சிகோ சென்றாக வேண்டும், அமெரிக்காவில் அவர்கள் சற்று நேரம் கூட இருக்கக் கூடாது என்று மிக கேவலமாக அமெரிக்க ஏகாதிபத்தியம் கெடுபிடி செய்தது.

ஒலிம்பிக் கமிட்டிக்கு அடுத்த பெரிய சர்வதேச விளையாட்டு சம்மேளனம் என்ற பெருமையை கொண்டுள்ள ஃபிஃபா தலைமைக்கு இது அவமானம் மட்டுமல்ல, எதிர்காலத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியம் தனக்கு விருப்பம் இல்லாத அல்லது தன் எதிரி என்று முடிவு செய்யும் எந்த ஒரு நாட்டின் மீதும் இது போன்ற கெடுபிடிகளை விதிக்க இது மோசமான முன்னுதாரணமாக இருக்கப் போகிறது என்பதை ஃபிஃபா உணரவில்லை.

ஏற்கனவே ஃபிஃபா அமைப்பின் தலைவர் மீது பல முறைகேடுகள் குறித்த புகார்கள் இருக்கின்றன. அவர் தன் பதவியில் வலுக்கட்டாயமாக ஒட்டிக் கொண்டு இருக்கிறார் என்பதுதான் உண்மை. சர்வதேச அரசியல் தலைவர்கள், பிரதமர்கள், ஜனாதிபதிகள் உடன் ஆன அவரது வெளிப்படையான நெருக்கம் அவரது நேர்மை, நடுநிலைத் தன்மை குறித்து பல கேள்விகளை எழுப்பி இருக்கிறது. குறிப்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உடன் ஆன அவரது நெருக்கம் சர்ச்சைக்கு உள்ளாகி இருப்பது ரகசியம் அல்ல. 
 ...

ஜூலை 20ஆம் தேதி நடந்த இறுதிப்போட்டி ஸ்பெயினின் ஆகச் சிறந்த ஆட்டத்தால் ஒளிர்ந்தது. அர்ஜென்டினா அணியின் கள வியூகங்கள் அனைத்தையும் சரியாக கணித்து நேற்று அவர்கள் விளையாடினார்கள் என்பதை பார்க்க முடிந்தது. ஸ்பெயின் அணி ஒரே ஒரு கோல் அடித்து கோப்பையை வென்றது. ஒரு கோல் கூட போட இயலாமல் அர்ஜென்டினா சோர்ந்து வெளியேறியது.

வேடிக்கைக்காக சொல்கிறேன், அர்ஜென்டினா வீரருக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்ட போது கேலரியில் உட்கார்ந்து இருந்த டிரம்ப் தலையிட்டு உடனடியாக அந்த ரெட்கார்டை வாபஸ் வாங்க சொல்லி உத்தரவிட்டு விடுவாரோ என்று நான் பயந்தேன்!!! ஃபிஃபாவின் நம்பகத்தன்மை கேள்விக்குரிய ஒன்றாகி விட்டது. உண்மையில் தனது பதவி காலம் முடிந்தும் கூட technical ஆக பேசி இன்பான்டிநோ அந்த நாற்காலியில் பசை போட்டு ஒட்டிக் கொண்டிருக்கிறார் என்பது உலகறிந்த விஷயம்.

1986 தொடங்கி அனைத்து போட்டிகளையும் நான் பார்த்து வருகிறேன். எந்த ஒரு குறிப்பிட்ட அணியின் மீதும் அல்லது குறிப்பிட்ட விளையாட்டு வீரர்களின் மீதும் தனிப்பட்ட வெறுப்பும் இல்லை, விருப்பும் இல்லை எனக்கு.

இன்பான்டினோ போன்ற நேர்மையற்ற அயோக்கியப் பேர்வழிகள் இது போன்ற அமைப்புகளில் நீடிப்பது கால்பந்து விளையாட்டு மீதான நம்பிக்கையை தகர்க்கிறது. இந்திய கிரிக்கெட் கேவலப்பட்டு சந்தி சிரிப்பது போல.

20.7.25
...

கிரிக்கெட்டில் ஒவ்வொரு பந்துக்கும் உலகளாவிய  சூதாட்டம் இருப்பது பெரிய ரகசியம் இல்லை. கால்பந்துப் போட்டிகளில் களத்தில் சூதாட முடியாது; ஆனால் நடுவர்களால் அதை செய்ய முடியும் என்பது இப்போது அம்பலம் ஆகி வருகிறது. ஆனால் தீர்ப்பு அளிக்க வேண்டிய இடத்தில் இருக்கிற ஃபிஃபா அமைப்பும் அதன் தலைமை பீடமும் விளையாட்டின் போக்கை திசை திருப்புகிறார்கள்.

இறுதியாக சொல்ல வேண்டியது இதுதான்: ஐரோப்பாவை தாண்டி கோப்பை வெளியே சென்றுவிடக் கூடாது. இல்லையேல், தமது விளம்பர ப்ராண்ட் நட்சத்திரங்கள் பங்கு பெறும் அணி கோப்பையை வெல்ல வேண்டும். இதுதான் ஃபிஃபாவும் கார்பொரேட் கம்பெனிகளும் திட்டமிட்டுள்ளது. அப்படிப் பார்த்தால் அர்ஜென்டினா அல்லது ஃப்ரான்ஸ் இரண்டில் ஒன்று கோப்பையை வெல்ல வேண்டும். போர்சுகல் வெளியே சென்றுவிட்டது (இறுதிப்போட்டிக்கு முன் எழுதப்பட்ட பகுதி இது).

தனிப்பட்ட விளையாட்டு வீரர்களின் திறமை என்பது வேறு. இவர்களின் விளையாட்டுத்திறனை கார்பொரேட் கம்பெனிகளின் வளர்ச்சிக்கு பணத்தை வாங்கிக்கொண்டு விளம்பர நட்சத்திரங்களாக இருப்பதை தாண்டி, அது வேறொரு பரிமாணம் எடுத்து அத்தகைய கார்பொரேட் கம்பெனிகளுக்கும் ஃபிஃபாவுக்கும் இடையே ஆன கள்ள உறவாக மாறி இருக்கிறது. இதை கண்டுகொள்ள மாட்டோம், இந்த கள்ள உறவின் பங்குதாரர்களாக நாங்கள் இருப்போம் என்று நட்சத்திர வீரர்கள் கண்டுகொள்ளாமல் போவார்கள் எனில் அவர்கள் வெறும் வியாபாரிகள் மட்டுமே, அவர்கள் எத்தனை பெரிய உயரத்தில் இருந்தாலும். காசை எண்ணும் கடவுளர்க்கு நீதி என்ன நேர்மை என்ன? இப்படி நேர்மை அற்ற வழியில் வந்த பணத்தில் நீ ஆயிரம் தான தர்மம் செய்தால் என்ன செய்யாமல் போனால் என்ன?

8.7.2026
#FIFA


M e ஸ் si குறித்து நான் இட்ட பதிவுகள் யார் கண்ணிலும் படவில்லை! F I F A வும் வணிக மையம் (மையம்) ஆகிவிட்டது என்பதும், விளையாட்டின் பரபரப்பையும் கூட்டத்தையும் அதிக டிக்கெட் விற்பனையையும் உறுதிப்படுத்த குறிப்பிட்ட சில பிராண்ட் வீரர்கள் f I F a வின் செல்லப் பிள்ளைகளாக வளர்க்கப் படுகிறார்கள்; மார்க்கும் உடந்தைதான்!

இந்த குறிப்பிட்ட சில நட்சத்திர வீரர்கள், ஸ்பைக், பந்து, மட்டை, உடல் அணிகலன்கள் உள்ளிட்ட விளையாட்டு சாதனங்கள் உற்பத்தி செய்யும் மிக மிக பெரிய corporate கம்பெனிகளின் பிராண்ட் விற்பனை விளம்பர நட்சத்திரங்கள் ஆக இருக்கிறார்கள் என்பதும் இந்த கம்பெனிகளுக்கு ம் f I F a வுக்கும் இடையே ஆன மறைமுகமான பண உறவு ரகசியம் இல்லை என்பதும் மீண்டும் உறுதி ஆகிறது.

ஏற்கனவே f I F a அமைப்பின் தலைவர் மீது பல முறைகேடுகள் குறித்த புகார்கள் இருக்கின்றன. அவர் தன் பதவியில் வலுக்கட்டாயமாக ஒட்டிக் கொண்டு இருக்கிறார் என்பதுதான் உண்மை. சர்வ தேச அரசியல் தலைவர்கள் பிரதமர்கள் ஜனாதிபதிகள் உடன் ஆன அவரது நட்பு, அவரது நேர்மை, நடுநிலை தன்மை குறித்து பல கேள்விகளை எழுப்பி இருக்கிறது.

மெ s si யின் fo u l விளையாட்டுக்கு சி வ ப்பு அட்டை கொடுத்து அவரை வெளியேற்றி இருக்க வேண்டும். நடுவர் கண்டுகொள்ளாமல் போனதற்கு காரணம் மேற்கூறிய அனைத்தும்தான். வேறு ஒரு அணியின் வீரர் அவ்வாறு செய்து இருந்தால் உடனடியாக அவர் வெளியேற்றப் பட்டு இருப்பார். 

வணிக மயம் ஆக்கப் பட்டு விட்ட போட்டிகளில் தொய்வு ஏற்படுத்த அல்லது இன்னும் நீண்ட ஒரு மாதம் போட்டிகள் நடக்கவுள்ள நிலையில் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிற எதிர்பார்ப்பு அல்லது பரபரப்பை பணம் ஆக்கும் முயற்சியில் தடங்கல் ஏற்படுத்த f I F a தலைமை விரும்பாது என்பதை விடவும்
மேற்படி கார்பொரேட் கம்பெனிகளின் கோபத்தை சம்பாதிக்க f I F a தயாராக இல்லை என்பதுதான் உண்மை.

ஈரான் கால்பந்து அணி மீது அமெரிக்க ஏகாதிபத்தியம் திணித்துள்ள கெடுபிடிகள் நிபந்தனைகள் மிக மிக கேவலமானவை, சர்வ தேச நியதிகளை, அடிப்படை மனிதாபிமான நெறிகளை மீறுபவை.

இவற்றை கண்டிக்காமல், கண்டுகொள்ளாமல் போகும் ஃபிஃபா நிர்வாகத்தை கண்டனம் செய்கிறேன். ஏற்கனவே ஃபிஃபா தலைவரும் தலைமையும் அமெரிக்கா உள்ளிட்ட செல்வாக்கு மிக்க நாடுகளுடனும் அவற்றின் அரசியல் தலைவர்களுடனும் நெருக்கமாகவும் மறைமுகமான பல சலுகைகளை பெறுவதாகவும் கடுமையான குற்றச்சாட்டுகள் இருக்கின்ற நிலையில் ஈரான் மீதான அமெரிக்க கெடுபிடிகள் ஃபிஃபாவின் சட்டங்கள், நெறிகளை மதிக்காமல் இருப்பது பெரிய அதிசயம் இல்லை. 

ஆனால் ஒலிம்பிக் கமிட்டிக்கு அடுத்த பெரிய சர்வதேச விளையாட்டு சம்மேளனம் என்ற பெருமையை கொண்டுள்ள ஃபிஃபா தலைமைக்கு இது அவமானம் மட்டுமல்ல, எதிர்காலத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியம் தனக்கு விருப்பம் இல்லாத அல்லது தன் எதிரி என்று முடிவு செய்யும் எந்த ஒரு நாட்டின் மீதும் இது போன்ற கெடுபிடிகளை விதிக்க இது மோசமான முன்னுதாரணமாக இருக்கப் போகிறது என்பதை ஃபிஃபா உணரவில்லை.


தனிப்பட்ட விளையாட்டு வீரர்களின் திறமை என்பது வேறு, இந்த போட்டியில் உள்ளூர புதைந்து கிடக்கும் கார்பொரேட் அரசியல் என்பது வேறு என்ற புரிதலுடன் இந்த பதிவை இடுகிறேன். ஹீரோ வழிபாட்டு மனநிலையில் இருக்கின்ற யாரும் இந்த பதிவை தொடர்ந்து வாசிக்காமல் அல்லது மவுனமாக கடந்து செல்ல வேண்டுகிறேன்.
#வ்க்க்க்க்க்


M e ஸ் si குறித்து நான் இட்ட பதிவுகள் யார் கண்ணிலும் படவில்லை! F I F A வும் வணிக மையம் (மையம்) ஆகிவிட்டது என்பதும், விளையாட்டின் பரபரப்பையும் கூட்டத்தையும்வ் அதிக டிக்கெட் விற்பனையையும் உறுதிப்படுத்த குறிப்பிட்ட சில பிராண்ட் வீரர்கள் f I F a வின் செல்லப் பிள்ளைகளாக வளர்க்கப் படுகிறார்கள்; மார்க்கும் உடந்தைதான்!

இந்த குறிப்பிட்ட சில நட்சத்திர வீரர்கள், ஸ்பைக், பந்து, மட்டை, உடல் அணிகலன்கள் உள்ளிட்ட விளையாட்டு சாதனங்கள் உற்பத்தி செய்யும் மிக மிக பெரிய corporate கம்பெனிகளின் பிராண்ட் விற்பனை விளம்பர நட்சத்திரங்கள் ஆக இருக்கிறார்கள் என்பதும் இந்த கம்பெனிகளுக்கு ம் f I F a வுக்கும் இடையே ஆன மறைமுகமான பண உறவு ரகசியம் இல்லை என்பதும் மீண்டும் உறுதி ஆகிறது.

ஏற்கனவே f I F a அமைப்பின் தலைவர் மீது பல முறைகேடுகள் குறித்த புகார்கள் இருக்கின்றன. அவர் தன் பதவியில் வலுக்கட்டாயமாக ஒட்டிக் கொண்டு இருக்கிறார் என்பதுதான் உண்மை. சர்வ தேச அரசியல் தலைவர்கள் பிரதமர்கள் ஜனாதிபதிகள் உடன் ஆன அவரது நட்பு, அவரது நேர்மை, நடுநிலை தன்மை குறித்து பல கேள்விகளை எழுப்பி இருக்கிறது.

மெ s si யின் fo u l விளையாட்டுக்கு சி வ ப்பு அட்டை கொடுத்து அவரை வெளியேற்றி இருக்க வேண்டும். நடுவர் கண்டுகொள்ளாமல் போனதற்கு காரணம் மேற்கூறிய அனைத்தும்தான். வேறு ஒரு அணியின் வீரர் அவ்வாறு செய்து இருந்தால் உடனடியாக அவர் வெளியேற்றப் பட்டு இருப்பார். 

வணிக மயம் ஆக்கப் பட்டு விட்ட போட்டிகளில் தொய்வு ஏற்படுத்த அல்லது இன்னும் நீண்ட ஒரு மாதம் போட்டிகள் நடக்கவுள்ள நிலையில் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிற எதிர்பார்ப்பு அல்லது பரபரப்பை பணம் ஆக்கும் முயற்சியில் தடங்கல் ஏற்படுத்த f I F a தலைமை விரும்பாது என்பதை விடவும்
மேற்படி கார்பொரேட் கம்பெனிகளின் கோபத்தை சம்பாதிக்க f I F a தயாராக இல்லை என்பதுதான் உண்மை.

ஈரான் கால்பந்து அணி மீது அமெரிக்க ஏகாதிபத்தியம் திணித்துள்ள கெடுபிடிகள் நிபந்தனைகள் மிக மிக கேவலமானவை, சர்வ தேச நியதிகளை, அடிப்படை மனிதாபிமான நெறிகளை மீறுபவை.

இவற்றை கண்டிக்காமல், கண்டுகொள்ளாமல் போகும் ஃபிஃபா நிர்வாகத்தை கண்டனம் செய்கிறேன். ஏற்கனவே ஃபிஃபா தலைவரும் தலைமையும் அமெரிக்கா உள்ளிட்ட செல்வாக்கு மிக்க நாடுகளுடனும் அவற்றின் அரசியல் தலைவர்களுடனும் நெருக்கமாகவும் மறைமுகமான பல சலுகைகளை பெறுவதாகவும் கடுமையான குற்றச்சாட்டுகள் இருக்கின்ற நிலையில் ஈரான் மீதான அமெரிக்க கெடுபிடிகள் ஃபிஃபாவின் சட்டங்கள், நெறிகளை மதிக்காமல் இருப்பது பெரிய அதிசயம் இல்லை. 

ஆனால் ஒலிம்பிக் கமிட்டிக்கு அடுத்த பெரிய சர்வதேச விளையாட்டு சம்மேளனம் என்ற பெருமையை கொண்டுள்ள ஃபிஃபா தலைமைக்கு இது அவமானம் மட்டுமல்ல, எதிர்காலத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியம் தனக்கு விருப்பம் இல்லாத அல்லது தன் எதிரி என்று முடிவு செய்யும் எந்த ஒரு நாட்டின் மீதும் இது போன்ற கெடுபிடிகளை விதிக்க இது மோசமான முன்னுதாரணமாக இருக்கப் போகிறது என்பதை ஃபிஃபா உணரவில்லை.


தனிப்பட்ட விளையாட்டு வீரர்களின் திறமை என்பது வேறு, இந்த போட்டியில் உள்ளூர புதைந்து கிடக்கும் கார்பொரேட் அரசியல் என்பது வேறு என்ற புரிதலுடன் இந்த பதிவை இடுகிறேன். ஹீரோ வழிபாட்டு மனநிலையில் இருக்கின்ற யாரும் இந்த பதிவை தொடர்ந்து வாசிக்காமல் அல்லது மவுனமாக கடந்

கருத்துகள் இல்லை: