ஆப்கானிஸ்தானும் அமெரிக்க ஜனநாயகமும் - இந்திய இஸ்லாமிய சமூகம் புரிந்துகொள்ள வேண்டியது:
இந்திய வலதுசாரி இந்துத்துவா தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தான் தலிபான் தீவிரவாதிகள் - இவர்கள் அடிப்படையில் சமமான பிற்போக்குவாதிகள், நாட்டின் முன்னேற்றத்துக்கும் அறிவியல் கோட்பாடுகளுக்கும் சமூக முன்னேற்றத்துக்கும் எதிரானவர்கள்.
இந்திய இசுலாமிய சமூகம் இதனை புரிந்துகொள்ள வேண்டும்.
சோவியத் யூனியனை எதிர்ப்பதாக நினைத்துக்கொண்டு பாப்ரக் கார்மல் தலைமையில் ஆன ஆப்கான் அரசை கவிழ்க்க தாலிபான்களை உருவாக்கி ஊக்குவித்தது அமெரிக்காதான். பாப்ரக் கர்மலை தெருவிளக்கு கம்பத்தில் தூக்கில் போட்டு கொண்டாடியது தாலிபான்கள் மட்டும் அல்ல, அமெரிக்காவும்தான்.
சீனா பாகிஸ்தான் இந்தியா ஆகிய மூன்று பெரும் ஆசிய சக்திகளையும் எண்ணெய் வளமிக்க அரபு பிராந்தியத்தையும் தொடர்ந்து கண்காணிக்கவும் தன் பார்வையில் தொடர்ந்து வைத்துக்கொள்ளவும் அமெரிக்காவுக்கு வசதியாக கிடைத்த இடம்தான் ஆப்கானிஸ்தான். அப்படியான பூகோள அமைப்பை கொண்ட இடத்தில் ஆப்கானிஸ்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதே பிராந்தியத்தில் தன் வளர்ப்பு கிடாவாக ஒசாமா பின் லேடனை வளர்த்து கொம்பு சீவி கலகம் செய்து அமைதியை சீர்குலைக்கும் வேலையை செய்ததும் அமெரிக்காவே. அதே கிடா தன் மார்பில் முட்டிய போது ஒசாமா தீவிரவாதி ஆனான், உலகறிந்த கதை.
இப்போது ஆப்கானிஸ்தானில் நடப்பதும் அதுவே. தலிபான்களை அழித்து அமைதியை நிலைநாட்ட அமெரிக்கா அங்கே 20 வருடங்களாக இருந்தது என்றால் அது உலகை ஏமாற்றுவது அன்றி வேறில்லை. உலக சமுதாயம் அமெரிக்காவை கேள்வி கேட்க வேண்டிய நேரம் இது, 20 வருடங்களாக அமெரிக்கா அங்கே செய்தது என்ன?
ஆப்கானிஸ்தான் அமெரிக்காவுக்கு மிக முக்கியமான கேந்திரம், ஏனெனில் எண்ணெய் வளமிக்க அரபு பிராந்தியத்தில் எப்போதும் தன் தலையீட்டை உறுதி செய்யவும் அரபு பிராந்தியத்த்தை தொடர்ந்து கண்காணிக்கவும் ஆப்கானிஸ்தான் போன்று ஒரு மையமான இடம் ஆசிய பகுதியில் வேறில்லை.
குடியரசு கட்சியோ ஜனநாயக கட்சியோ, உலக அமைதியை சீர் குலைப்பது, எண்ணெய் வளமிக்க அரபு பிராந்தியத்தில் தொடர்ந்து 100 வருடங்களாக தன் செல்வாக்கு குறைந்து விடாமல் இருப்பதை உறுதி செய்வது, இந்த இரண்டு விஷயங்களும் அமெரிக்க ஜனாதிபதிகளுக்கு பொதுவானவை. வரலாறு தொடர்ந்து அதை நிரூபித்து வருகின்றது.
44ஆவது இரட்சகர் ஆக தேர்தலில் போட்டியிட்ட ஒபாமா, க்வாண்டநாமோ வளைகுடாவில் உள்ள உலகின் மிக மோசமான அமெரிக்க சித்ரவதை முகாமை ஒழிப்பேன் என்று தேர்தல் வாக்குறுதி அளித்தார், வென்றார், 45ஆவது இரட்சகர் ஆக மீண்டும் அவரே வந்தார். தொடர்ந்து 46, 47ஆவது இரட்சகர்களாக பதவிக்கு வந்த ட்ரம்பும் சரி, பிடேனும் சரி, க்வாண்டநாமோ பே பற்றி வாய் திறக்காமல் இருப்பதற்கு ஆன காரணம் சில நூறாண்டுகள் பழமையானது. ஸ்பானிய மன்னனின் வேட்டை நாய் ஆன கொலம்பசிடமும் ஆயிரக்கணக்கில் கொலையுண்ட அரவாக் செவ்விந்திய பழங்குடி மக்களிடமும்தான் கேட்க வேண்டும்.
வலதுசாரி இந்துத்துவா தீவிரவாதிகளை இங்கே எப்படி ஆதரிக்க முடியாதோ அதே போல் தாலிபான்களையும் ஆதரிக்க முடியாது, இரண்டுமே நிராகரிக்கப்பட வேண்டியவை. கொண்டாட ஏதும் இல்லை என்பதை அங்கே நடக்கும் நிகழ்வுகள் காட்டுகின்றன.
சதாம் உசேனை முற்றாக ஆதரிக்க முடியாதுதான், ஆனால் அரபு பிராந்தியத்தில் கல்வியிலும் குறிப்பாக பெண்கள் கல்வியிலும் விஞ்ஞானம் பொருளாதாரம் உள்ளிட்ட பல முற்போக்கான தளங்களிலும் ஒப்பீட்டளவில் இராக்கை அவர் முன்னால் வைத்து இருந்தார் என்பது உண்மைதான்.
சதாமின் ஆட்சியை கவிழ்த்து விட்டு அவரையும் தூக்கில் தொங்கவிட்ட பின் உலகம் பார்க்கின்ற மோசமான இராக்குக்கு அமெரிக்காதான் பதில் சொல்ல வேண்டும். ஆப்கானிஸ்தானின் கதியும் அவ்வாறே என்பதை வரும் நாட்கள் காட்டும்.
இந்திய இஸ்லாமிய சமூகம் புரிந்துகொள்ள வேண்டும்.
...
16.8.2021
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக