ராம்தேவ் துபே ஆகிய நான் காலை 7 மணி அளவில் ஜன்மபூமிக்கு சென்றபோது அயோத்தியா காவல் நிலையத்தின் கான்ஸ்டபிள் மாதா பிரசாத் என்னிடம் சொன்னது என்னவெனில் 50 முதல் 60 பேர் கொண்ட ஒரு கும்பல் பாபர் மசூதியின் சுற்றுசுவரின் பூட்டை உடைத்துவிட்டு மசூதிக்குள் புகுந்தனர், மேலும் சுற்றுசுவரின் மேலும் படிக்கட்டுகளின் மேலும் கூட ஏறி உள்ளே புகுந்தனர். ஸ்ரீ பகவானின் சிலை ஒன்றை அங்கே வைத்து சீதா, ராம்ஜி மற்றும் பலரின் படங்களை காவி, மஞ்சள் வண்ணங்கள் கொண்டு மசூதியின் சுவர்களில் வரைந்தனர். ஹன்ஸ்ராஜ், கான்ஸ்டபிள் எண் 70, அந்த கும்பல் நுழையும்போது அப்போது அங்கே பணியில் இருந்தார். அவர் அவர்களை உள்ளே நுழைய விடாமல் தடுத்து நிறுத்தினாலும் அந்த கும்பல் அவரை அலட்சியம் செய்தது. அங்கே நிறுத்தப்பட்டு இருந்த மாகாண ஆயுதப்படையின் Provisional Armed Constabulary உதவி கோரப்பட்டது. ஆனால் அக்கும்பல் ஏற்கனவே மசூதிக்குள் சென்று விட்டது. மூத்த மாவட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து செயலில் இறங்கினார்கள். அதன் பின் 5 முதல் 6 ஆயிரம் பேர் கொண்ட கூட்டம் அங்கே திரண்டு மசூதிக்குள் நுழைய முயற்சி செய்தது, மத அடிப்படையில் ஆன கோஷங்களை எழுப்பியது, கீர்த்தனைகள் பாடியது. ஆனால் வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்ததால் ஒன்றும் நடக்கவில்லை. அபிராம் தாஸ், சகல் தாஸ், சுதர்சன் தாஸ் ஆகியோரும், பெயர் அறியப்படாத 50 -60 பேரும் கலகம் செய்து மசூதிக்குள் அத்துமீறி நுழைந்து சிலையையும் அங்கே வைத்ததன் மூலம் மசூதியை களங்கப்படுத்தி உள்ளார்கள். அங்கே பணியில் இருந்த அதிகாரிகளும் பொதுமக்கள் பலரும் நடந்தவற்றை பார்த்தார்கள். நிகழ்ச்சி நடந்தது உண்மையா என ஆய்வு செய்யப்பட்டது. நடந்தது உண்மை என உறுதியானது.
Prologue, Ayodhya the dark night - the secret history of Rama's appearance in babri masjid, Krishna Jha and Dhirendra K Jha, HarperCollins.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக