
(புனாவில் உள்ள கோபால் கோட்சேவின் வீட்டில், நாதுராம் கோட்சேவின் சாம்பல் ஏன் இன்னும் கரைக்கப்படாமல் கலயத் தில் உறங்குகின்றது என்று பேச வேண்டியுள்ளது; 'ராமருக்கு கோவில் கட்டுவதாக மசூதியை இடித்தவர்கள், ஐந்து வருடம் முழுமையாக ஆட்சியில் இருந்தபோதும் ஏன் கட்டவில்லை?' என்று கேட்க வேண்டியுள்ளது; கடந்த ஐந்து வருடங்களாக காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த பல தேசவிரோத, மக்கள் விரோத மசோதாக்களை நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் அப்படியே நிறைவேற்றும் வண்ணம் அவையில் கூச்சல் குழப்பத்தை உண்டுபண்ண பாரதீய ஜனதாக் கட்சி காங்கிரஸ் கட்சியிடம் இருந்து ஒவ்வொரு கூட்டத்தொடரிலும் எவ்வளவு அன்பளிப்பாகப் பெறுகின்றது என்பது பற்றியும், இரண்டு கட்சிகளுக்கும் இடையே திரைமறைவில் இருக்கின்ற கள்ள உறவு பற்றியும் பேச வேண்டியிருக்கின்றது)

2001 செப் 11 அமெரிக்காவில் அல்-காய்தா தாக்குதலுக்கு பின்பு "நியூஸ் வீக்" (24.9.2001) பத்திரிகை இப்படி எழுதியது: "சி.ஐ.ஏ. வின் மிக முக்கிய அதிகாரிகள் செப்.11 அன்று காலையில் திட்ட மிடப்பட்டிருந்த தமது பயணங்கள் அனைத்தையும் ரத்து செய்தார்கள். பாதுகாப்புக் காரணங்களுக்காக என்று மட்டும் கூறப்பட்டது". "வாஷிங்டன் போஸ்ட்" (மே 2002) இப்படி எழுதியது: "2001 கோடைகாலத்தில், அமெரிக்க அட்டர்னி ஜெனரல் ஜான் ஆஷ்க்ராப்ட், இனிமேல் பொதுவான பயணிகள் விமானத்தில் பயணம் செய்யக்கூடாது என அமெரிக்க அரசு முடிவு செய்தது - பாதுகாப்புக் காரணங்களுக்காக என்று மட்டும் கூறப்பட்டது". அவையன்றி, அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளிகளான இஸ்ரேல், ஜெர்மனி ஆகியவற்றுடன், எகிப்து, ரஷ்யா ஆகிய நாடுகளும், 2001 செப்டம்பர் மாதத்துக்கு வெகுமுன்பே, "அமெரிக்காவில் தீவிரவாதிகளின் தாக்குதல் நடத்தப்படலாம், ஒரு பயணிகள் விமானம் இதற்காகப் பயன் படுத்தப்படக்கூடும்"என்றே அமெரிக்க அரசை எச்சரிக்கை செய்திருந்தார்கள் (தகவல்: www.wsws.org). அப்படியெனில், அல்-காய்தா தன் நாட்டின் மக்களைக் கொல்லட்டும் என்று ஜார்ஜ் புஷ் ஏன் காத்திருந்தார், உள்நோக்கம் என்ன என்ற மையமான கேள்விக்கு விடை கண்டால் மட்டுமே உலகளாவிய பயங்கரவாதம் குறித்து மேற்கொண்டு பேச முடியும்.
அதேபோல், மும்பை மீது தாக்குதல் நடத்தப்படும் என்ற உளவுத்துறை தகவல் கிடைத்த பின்னும் இந்திய ராணுவமோ போலீஸ் துறையோ, இன்று வெற்றுச்சவால்களை அள்ளி வீசும் டெல்லி சூரப்புலிகளோ ஏன் தற்காப்பு எச்சரிக்கை நடவடிக்கை களை மேற்கொள்ளவில்லை, உள்நோக்கம் என்ன என்ற மையமான கேள்விக்கு விடை கண்டால் மட்டுமே இந்தியாவில் பயங்கரவாதம் குறித்து மேற்கொண்டு பேச முடியும்.
புனாவில் உள்ள கோபால் கோட்சேவின் வீட்டில், நாதுராம் கோட்சேவின் சாம்பல் ஏன் இன்னும் கரைக்கப்படாமல் கலயத் தில் உறங்குகின்றது என்று பேச வேண்டியுள்ளது;'ராமருக்கு கோவில் கட்டுவதாக மசூதியை இடித்தவர்கள், ஐந்து வருடம் முழுமையாக ஆட்சியில் இருந்தபோதும் ஏன் கட்டவில்லை?' என்று கேட்க வேண்டியுள்ளது; கடந்த ஐந்து வருடங்களாக காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த பல தேசவிரோத, மக்கள் விரோத மசோதாக்களை நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் அப்படியே நிறைவேற்றும் வண்ணம் அவையில் கூச்சல் குழப்பத்தை உண்டுபண்ண பாரதீய ஜனதாக் கட்சி காங்கிரஸ் கட்சியிடம் இருந்து ஒவ்வொரு கூட்டத்தொடரிலும் எவ்வளவு அன்பளிப்பாகப் பெறுகின்றது என்பது பற்றியும், இரண்டு கட்சிகளுக்கும் இடையே திரைமறைவில் இருக்கின்ற கள்ள உறவு பற்றியும் பேச வேண்டியிருக்கின்றது. விடுதலை பெற்ற அடுத்த வருடமே,காங்கிரஸ்காரர்கள் காஷ்மீரில் ராணுவ ஜீப் வாங்கிய விசயத்தில் சுதந்திர இந்தியாவின் முதல் ஊழலைத் தொடங்கி வைத்து காந்தியடிகளுக்கு மகத்தானஅஞ்சலி செலுத் தினார்கள். பாரத் மாதாவின் நேரடி வாரீசுகளான ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. தீவிரவாதிகளோ கார்கில் போரில் இறந்துபோன இந்திய ராணுவ வீரர்களின் உடல்களை எடுத்து வர சவப்பெட்டி வாங்கியதில் செய்த ஊழலும், டெஹல்கா பத்திரிகையாளர் களால் கேமராவில் படம் பிடிக்கப்பட்ட, பி.ஜே.பி.தலைவர் பங்காரு லட்சுமணனும் பதவியில் இருக்கின்ற ராணுவ அதிகாரிகளும் கூட்டணி அமைத்து கட்டுக்கட்டாக பணத்தை அமுக்கியதைக் காட்டும் ஆயுதபேர ஊழலும் தெருவுக்கு தெரு நாறியது. இவர்களின் லஞ்சலாவண்யப் பட்டியல் பக்கம் பக்கமாகப் போகும். இது ஒரு பானைச் சோற்றில் ஒரு சோறு மட்டுமே. தனித்தனியே கொள்ளை அடித்தது போதாது என்று, 2008 ஜூலை மாதம் நாடாளுமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, காங்கிரஸ், பி.ஜே.பி. இரண்டு பேருமே ரிலையன்ஸ் முதலாளி அம்பானியின் பணத்தை நாட்டுமக்களுக்குத் தெரியும்படி பகிரங்கமாகப் பங்கு போட்டுக்கொண்ட நேரடி ஒளிபரப்பை இந்திய மக்கள் பார்த்து "இவங்க எவ்வளவு நல்லவங்க" என்று பரவசம் அடைந்தார்கள். ஆக இரண்டு பேருமே தேஷ்பக்தி வேஷம் போட்டுக்கொண்டே இந்தியக்குடிமகனின் ஒவ்வொரு பைசாவையும் கூச்சநாச்சமின்றி நக்கித் தின்கிறவர்கள் என்பது வெட்டவெளிச்சம். இந்த லட்சணத்தில் இவர்கள்தான் பயங் கரவாதத்தை ஒழித்துவிடுவோம் என்று தெருத்தெருவாக ஓலமிடுகின்றார்கள்! நாம் நம்ப வேண்டுமாம்!
....தொடரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக