வாழ்க்கையை அழிக்கும் மோடி அரசின் ஸ்மார்ட் மீட்டர்!
தமிழக அரசு தன் மவுனத்தைக் கலைத்து, ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை உறுதியாக நிராகரிக்க வேண்டும்
1. ஒன்றிய மக்கள் விரோத அரசு 2025 டிசம்பருக்குள் இந்தியாவில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டரை பொருத்த வேண்டும் என மாநில அரசுகளின் கையை முறுக்குகிறது. அதாவது இப்போது மாநில அரசுகளின் அதிகார வரம்புக்குள் இருக்கும் மின் கட்டணம், விவசாயம், கைத்தறி, சிறுதொழில், அனைத்து வீடுகளுக்கும் ஆன முதல் 100 யூனிட் மானியம் அனைத்தையும் மோ*டி ஒழிக்க உள்ளார்
2. இந்த மீட்டர்கள் prepaid அடிப்படையில் இயங்கும். இப்போது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின்துறை ஊழியர் வந்து மீட்டரை பார்த்து பயன்பாட்டு அளவை பதிவு செய்த பின் பயனாளி கட்டணத்தை செலுத்துவார். ஸ்மார்ட் மீட்டர் என்பது மொபைல் சிம் கார்ட் போல 10000, 20000 ரூபாய் முதலில் செலுத்தி recharge card விலைக்கு வாங்குவது ஆகும். அதன் பின் பயன்படுத்திய மின்சாரத்தின் அளவுக்கு ஏற்ப பண இருப்பு குறைந்து கொண்டே வரும்.
3. ஸ்மார்ட் திட்டத்தின்படி மூன்று வித கட்டணங்கள் இருக்கும்.
காலை 6 முதல் 10 மணி வரை, மாலை 6 முதல் இரவு 10 மணி வரை அதிக பட்ச யூனிட் கட்டணம் இருக்கும்.
இரவு 10 முதல் காலை 6 மணி வரை மட்டுமே சாதாரண கட்டணம் அதாவது குறைந்தபட்ச கட்டணம் இருக்கும்.
காலை 10 முதல் மாலை 6 மணி வரை சாதாரண கட்டணத்தை விட அதிக கட்டணம் இருக்கும்.
ஆக மின் மீட்டர் தானாகவே மூன்று அடுக்காக கட்டணத்தை நிர்ணயிக்கும்.
4. இந்த prepaid recharge card களும் கூட அரசின் கையில் இருக்காது, தனியார் கம்பெனிகள் ஆதிக்கம் செலுத்த போகின்றன.
5. மின்பற்றாகுறை காலங்களில் அதாவது கோடை காலங்களில் அதிக கட்டணம் செலுத்த தயாராக இருக்கும் நுகர்வோருக்கு முன்னுரிமை அடிப்படையில் மின்சாரம் வழங்கப்படுமாம்!
6. ஏற்கனவே உதய் திட்டம் என்ற ஒன்றை தீட்டி ஒட்டுமொத்தமாக மின்சார துறையை மாநில அரசுகளிடம் இருந்து பிடுங்கி அம்பானி, அதானிகளின் கையில் கொடுப்பது என மோ*டி திட்டம் வைத்துள்ளார். இதன் மூலம் மாநில அரசுகளின் அதிகாரம் பறிக்கப்படும். ஏற்கனவே கல்வி, மருத்துவம் ஆகியவற்றை ஒன்றிய அரசு பிடுங்கி விட்டது.
7. இது நுகர்வோருக்கு எதிரானது மட்டும் அல்ல. அடிப்படையான கட்டமைப்பு ஆன மின் துறையை ஒழிப்பதும் பணியாற்றும் பல ஆயிரம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்வதற்கு வழி வகுப்பதும் ஆகும்.
8. அரசின் மின்துறையை அழிப்பது என்பது பெருமுதலாளிகளை வளர்ப்பது ஆகும்.
9. இப்போது மாநில அரசு மின்கட்டணத்தை உயர்த்தினால், நுகர்வோருக்கு பாதகமான திட்டங்களை நடைமுறை படுத்தினால் அதற்கு எதிராக அரசியல் கட்சிகள், ஜனநாயக இயக்கங்கள் போராடவும் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் முடியும். இந்த ஜனநாயக நெறிமுறைகளை, உரிமைகளை முற்றாக ஒழிப்பதுதான் ஒன்றிய அரசின் திட்டம். ஸ்மார்ட் மீட்டர் என்பது நுகர்வோர் அறியாமல் நுகர்வோரின் அனுமதிக்கு காத்திராமல் அரசு அல்லது குறிப்பிட்ட தனியார் நிறுவனம் எவ்வளவு பணத்தையும் எடுத்துக்கொள்ள முடியும். யாரிடம் சென்று முறையிடுவது?
10. ஸ்மார்ட் மீட்டர் என்பது நுகர்வோரின் நலனுக்கு எதிரானது, மாநில அரசின் உரிமையை பறிப்பது, மின்துறையை அழிப்பது, மின்துறை ஊழியர்களின் பணிக்கு வேட்டு வைப்பது, சிறுதொழில்கள், விவசாயம், நெசவாளர் வாழ்வை அழிப்பது. அரசின் 100 யூனிட் இலவசத்தை ஒழிப்பது.
11. இந்த சூழ்ச்சியை புரிந்துகொண்டு கேரள இடதுசாரி அரசு ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை நிராகரித்து தம் மாநிலத்தில் நடைமுறை படுத்த மாட்டோம் என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
12. தமிழக முதல்வர் அவர்கள் ஒன்றிய அரசின் நிர்ப்பந்தத்தை அரசின் நலத்திட்டங்களுக்கு உறுதுணையாக நிற்கும் சக அரசியல் கட்சிகள், மக்களின் துணையுடன் முறியடிக்க வேண்டும், இத்திட்டத்தை நிராகரிக்க வேண்டும்.
07/11/ 2023
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக