1) 2014ஆம்
ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்றத்தேர்தலுக்கான அணிசேர்க்கை தீவிரம் அடைந்துள்ளது.
இதுவரை இந்தியா கண்டிராத ஒண்ணாம் நம்பர் ஊழல் அரசாக, மக்கள் விரோத அரசாக தற்போதைய
காங்கிரஸ் கூட்டணி அரசு பெயரும் புகழும் பெற்றுள்ளது. காசு கொடுத்தால் ஓட்டு
தானாகவே வந்து விழும் என்ற கொள்கையில் நம்பிக்கை வைத்து தொடர்ந்து இந்த அரசை
காங்கிரஸ் நடத்திக்கொண்டு போவதாகவே படுகின்றது.
2) தனது
அணியில் இருந்து இரண்டு கட்சிகளைத் தவிர அனைத்துக் கட்சிகளும் தன்னைக் கைகழுவிவிட்ட
நிலையில் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலைக்கு ஆர் எஸ் எஸ்சின்
கொடுக்கான பிஜேபி வந்துள்ளது என்பதை நரமாமிச மோடிதான் பிரதமர் என்று
அறிவித்துவிட்டு இப்போது திரும்பிய திசையில் எல்லாம் எதிர்வரும் பல கேள்விகளுக்கு
பதில் சொல்ல முடியாமல் பிஜேபி திணறுவதில் இருந்து தெரிகின்றது. கார்ப்பொரேட்டுக்களின்
பணப்பெட்டிகள் எப்போதும் திறந்தே இருப்பது, அச்சு ஊடகம், டிவி ஊடகம் என்ற இரண்டு
பிரதான கருவிகளும் வெளிப்படையாகவோ பல்வேறு பினாமிகள் பெயரிலோ இதே
கார்பொரேட்டுக்களின் கையில் இருப்பது, இந்த ஊடகங்களின் வழியே ஒரு பொய்யை பத்து
முறை சொல்லி உண்மையாக ஆக்கிவிடலாம் என்ற ஆர் எஸ் எஸ்+பிஜேபியின் தத்துவ ஆசான்
ஹிட்லரின் ஒண்ணாம் நம்பர் தத்துவம் ஆகிய மூன்று பெரும் நம்பிக்கைகள் மட்டுமே கார்ப்பொரேட்டுக்களின்
கனவு நாயகனும் ’வளர்ச்சி
புருஷ’னும்
ஆன நரமாமிச மோடிக்கு தினமும் தூக்கத்தை தரும் அரும் மருந்துகள் என்பதில்
சந்தேகத்துக்கே இடமில்லை. ஆனால்
இந்தியாவில் தேர்தல் முடிவுகளை கார்ப்பொரேட்டுக்களும் கூடுகின்ற கூட்டமும் மட்டுமே
நிர்ணயித்துவிடவில்லை என்பதை கடந்த காலத்தில் மக்கள் மெய்ப்பித்துள்ளார்கள். தன் குடும்ப
உறுப்பினர் எண்ணிக்கையே பத்து இருக்க, உள்ளூர் கவுன்சிலர் தேர்தலில் வெறும் ஐந்து,
ஆறு வாக்குகள் மட்டுமே பெற்று குடும்பச்சண்டை நாறிய வேட்பாளர்களும் இருக்கின்றார்கள்
என்பது வேறு எதைக் காட்டுகின்றது?
3) பிஜேபி தலைமையில் ஆன தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த
20க்கும் மேற்பட்ட கட்சிகள் இப்போது பிஜேபியை விட்டு விலகிய நிலையில் தமிழகத்தில்
திமுக (காங்கிரஸை விட்டு திமுக விலகாது, 2ஜி தொப்புள்கொடி கன்னாபின்னாவென
கழுத்தைச் சுற்றிக் கிடக்கின்றது. மத்தியில் மந்திரிசபையில் இருந்து விலகியபோதும்
நாடாளுமன்றத்தில் காங்கிரஸுக்கு ஆதரவாகத்தான் திமுக இப்போதும் நடந்து வருகின்றது),
அ இ அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளோடும் தேர்தல் உறவுக்கு வாய்ப்பில்லை என்று
உறுதியான பின், உணர்ச்சிமயமான இலங்கை விசயத்தைக் கையில் எடுத்து இங்கே அரசியல்
நடத்த பிஜேபி முயற்சி செய்து, தமிழருவி மணியனை முதலில் கைக்குள் போட்டது; அவர்
வழியே வைகோவை வளைத்தது; பிஜேபியின்
இந்துத்துவா தீவிரவாதத்துக்கு முற்றிலும் உடன்பாடான சாதீயக்கோட்பாட்டுக்கு தமிழகத்தில் முழுப்பாதுகாவலராக உள்ள ராமதாசு, 2104
தேர்தலுக்கான கூட்டணி திமுகவுடனும் இல்லை அ இ அதிமுகவுடனும் இல்லை என்று தெளிவான
நிலையில் இலங்கைப்பிரச்னையை கையில் எடுத்துக்கொண்டு இயல்பாக இந்த அணியில்
இணைகின்றார். ஆக ஒரு புதிய தொப்புள்கொடி
உறவுக்கு தமிழகத்தில் கால்கோள் இடப்பட்டுள்ளது. இந்த புதிய தொப்புள்கொடி அணி
சேர்க்கையின் பின்னால் பிஜேபி உள்ளது என அன்றாடம் செய்தித்தாள் வாசிக்கின்ற எந்த
ஒரு சாமானியனுக்கும் தெரியும். அவ்வாறிருக்க ஏதோ இலங்கைத்தமிழர், தொப்புள்கொடி,
ஈழம் போன்ற உணர்ச்சிமிகு வார்த்தைகளைப்போட்டு முள்ளிவாய்க்கால் முற்றம் என்ற
பெயரில் 2014 தேர்தலை மனத்தில் கொண்டு தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சியின்
அணிசேர்க்கைக்கு பந்தக்கால் நடும் நெடுமாறன், வைகோ, தமிழருவி மணியன், சீமான்
போன்றோர் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது. தொடர்ந்து விஜயகாந்த் வருவார்
என்றும் சொல்கின்றார்கள்.
தொடரும்...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக