வெள்ளி, டிசம்பர் 26, 2025

மத்ய ப்ரதேஷ் ஹிமாச்சல் ப்ரதேஷ் வைரஸ் ப்ரதேஷ்

மத்ய பிரதேச காங்கிராஸ் அரசை கவிழ்த்து
மார்ச் 23 2020 அன்று பிஜேபி முக்யமந்த்ரிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்த உடன் கொரோனா வைரஸ் கண்ணில் தெரிய 25 மார்ச் 2020இல் டிவியில் வந்து முதல் லாக் டவுன் அறிவித்தார் பிரதான் மந்த்ரி மோடி. முதல் அலை 2020இல் சுகாதார அமைச்சர் என்ற ஒருவர் இல்லாத ஒரே மாநிலம் பீஜேபியின் ம.பி.தான். பெருந்தொற்று பரவிய ஒரு நெருக்கடியான காலத்தில் இதுதான் மிகப்பெரிய விசித்திரம், கொடுமை!
அதைப்பற்றி ஊடகங்களில்  ஒரே ஒரு ஒற்றை சொல்லும் பேசப்படவில்லை.

அதற்கு முன்பே 2019 டிசம்பரில் சீனாவில் கொரோனா கண்டறியப்பட்டபின் உடனடியாக விமான போக்குவரத்தை நிறுத்தி இருக்கலாம். நடந்து கொண்டிருந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரை நிறுத்துமாறு எதிர்க்கட்சிகள் உச்ச ஸ்தாயியில் அலறினாலும் ப்ரதான் மந்த்ரி அதை கண்டுகொள்ளவில்லை. காரணம் வேறென்ன? ம.பி. காங் அரசை கவிழ்க்க பிஜேபிக்கு கால அவகாசம் தேவைப்பட்டது. 

ஆனால் தன் கேவலமான வியாபார அரசியலை மறைக்க டெல்லி தப்லீக் ஜமாத் கூட்டத்தை காரணம் காட்டி இந்திய இஸ்லாமிய சமூகமே கொரோனாவுக்கு காரணம் என்று டிவிக்களில் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட, மக்கள் பணத்தில் மாத சம்பளம் வாங்கும் பீலா ராஜேஷ் போன்ற அதிகாரிகள் ஆர் எஸ் எஸ் ப்ரச்சாரகர்களாக மாறி நாக்பூர்பீடம் வாந்தி எடுத்ததை தின்று மீடியாக்களில் வெட்கம் மானம் இன்றி மறு வாந்தி எடுத்தார்கள். இரண்டு வருடங்கள் கழிந்த பின் நெட்டி முறித்து கொட்டாவிவிட்டு 'தப்லீக் ஜமாஅத்தை குற்றவாளி ஆக்கியது தப்பு' என்று உ.நீ.மன்ற நீதிபதிகள் தீஈஈஈஈர்ப்பு சொல்லும்போது, இசுலாமிய சமூகம் ஏற்கனவே சந்தித்து இருந்த பொய்க்குற்றச்சாட்டு, அவமானம், சமூக ஒதுக்கல் ஆகிய சேதங்களை அத்தீர்ப்பால் நேர்செய்ய முடியவில்லை. சேதம் சேதம்தான். பீலா ராஜேஷ் போன்ற பிஜேபி அடிவருடிகள் வேறு துறைக்கு மாற்றப்பட்டு வழக்கம்போல 30ஆம் தேதி சம்பளத்தை வாங்கிகொண்டு இருந்தார்கள்.

அதன் பிறகு கும்பமேளா என்ற பெயரில் பல லட்சம் நிர்வாண ஆசாமிகள் அலஹாபாத்திலும் ஹரித்வாரிலும் கூடிய போதும், ராமர் கோவிலில் கும்பாபிஷேகம் என்ற பெயரில் பல லட்சம் கூடி கும்மாளம் அடித்தபோதும், இவற்றின் பொருட்டு ரயில்களில் வாகனங்களிலும் ஊர் ஊராக பயணித்தபோதும் கொரோனா வைரஸ் பற்றி ப்ரதான் மந்திரியும் உ.நீ.மன்றமும் ஒரு வார்த்தையும் பேசாமல் மவுனமாக இருந்தார்கள். ஏனெனில் கொரோனாவை பரப்பும் கூட்டம் எனில் அது இசுலாமியர்கள்தான் என்ற கருத்தில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள். ப்ரதான் மந்திரியின் நெருங்கிய சகாக்களான அம்பானி, அதானியின் அபான வாயுவின் சப்தத்தை மட்டுமே செய்தி என நம் வீட்டில் கொட்டும் ஊடகங்கள் அதை உறுதி செய்தார்கள்.

ஏழு முறை தொடர்ந்து ஆட்சியில் இருந்தாலும் கதி கலங்கி காய்ச்சல் கண்ட மோடி கூட்டம் குஜராத்தில் தொடர்ந்து பல்லாயிரம் பேரை திரட்டி தெரு தெருவாக ஊர்வலம் போனபோதும் சீனாவில் நிலைமை சரியில்லை என்றுதான் செய்திகள் சொன்னன. ஹிமாச்சலில் ஒருவேளை காங் ஓரிரண்டு இடங்கள் வித்தியாசத்தில் ஆட்சி அமைத்து இருந்தால் அந்த அரசை கவிழ்த்துவிட்டு பிஜேபி அரசை அமைத்து முடிக்கும் வரை இப்போது பேசும் கொரோனா அபாயத்தை பிஜேபி பேசி இருக்காது, அது வரை ராகுல் காந்தி யாத்திரையும் கண்ணுக்கு தெரிந்து இருக்காது. 2020 மார்ச் ம.பி.அரசை கவிழ்த்த கதையை மீண்டும் வாசியுங்கள். 2024 தேர்தல் வியூகங்களை, வியாபாரத்தை நடத்த இந்த புதிய வகை வைரஸ் என்ற பிரச்சாரம் பயன்படும் எனில் 2024 வரை லாக் டவுன் அறிவிக்கவும், நாடாளுமன்றத்தை முடக்கவும் பிஜேபி அவ்வாறே செய்யும். நமது நண்பர்கள் மீண்டும் மயிர் பிளக்கும் தடுப்பூசி விவாதங்களில் இறங்குவார்கள்.

இதுவன்றி வேறொரு விஷயத்தை ஊடகங்கள் தீவிரமாக பேசுவதில்லை. ஏற்கனவே நடைமுறையில் உள்ள தடுப்பூசியால் இப்போது பரவும் மாற்று வடிவ வைரஸை கட்டுப்படுத்த முடியாது என்பதே அது. அப்படியெனில் அதே தடுப்பூசியை இப்போதும் செலுத்தி கொள்ள உபதேசம் செய்வது ஏன்? 

பைசரும் மாடெர்ணாவும் ஒவ்வொரு வினாடியும் ஆயிரம் டாலர் லாபம் (வருமானம் அல்ல, லாபம்) மட்டுமே சம்பாதிப்பதாக வெளிவந்த ஆக்ஸ்பாம் அறிக்கையை ஊடகங்கள் பேசுவது இல்லை, முற்போக்கு நண்பர்களும் அது பற்றி பேசுவதில்லை.

26.12.2022

கருத்துகள் இல்லை: