வீழ மாட்டேன் மானிடரே!
தேடிச் சோறு நிதம் தின்று - பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவம் யெய்தி
கொடுங் கூற்றுக்கிரை எனப் பின்
மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல
நானும் இங்கு வீழ்வேன் என்று நினைத்தாயோ!
- மகாகவி சுப்பிரமணிய பாரதி
4 கருத்துகள்:
என்னுடைய அலைபேசியிலேயே மகாநதி படத்தில் கமல்ஹாசன் குரலில் வரும் பாரதியின் இந்தக் கவிதையைத்தான் ஒலிப்பு மணியாக வைத்துள்ளேன். பாரதியின் வசன கவிதையை படிக்கும் போது இயற்கை மீது பாரதி கொண்ட காதல் புரியும். பகிர்விற்கு நன்றி.
-சித்திரவீதிக்காரன்
என் தந்தை காலத்து காங்கிரசிலிருந்து இப்போது நடக்கும் காங்கிரஸ் ஊழல் வரை தெளிவுபடுத்தியமைக்கு நன்றி ..என் மகா கவியின் பாடலை பதித்தமைக்கும் நன்றி..
சித்திரவீதிக்காரன்@ எந்த சமூகம் முன்னேறி முன் செல்ல வேண்டும் என்று பாரதி வருந்தி வருந்திப் பாடினானோ அதே சமூகம் அவனைப் புறக்கணிக்கும்போது அவன் நிமிர்ந்து நின்று ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ, அற்ப மானிடா?’ என்று மீறும்போதுதான் நம் வழிகாட்டியாகின்றான்! புறக்கணிப்பின் வலி கொடிது மிகக் கொடிது!
தென்காசித் தமிழ்ப் பைங்கிளி@ இந்திய வரலாற்றை ஊன்றிப் படிப்போம்! ‘எழுதப்பட்ட வரலாறெல்லாம் ஜெயித்தவர்கள் எழுதிய வரலாறே’ என்பது சத்தியமான உண்மை அல்லவா? பாடப்புத்தகங்களுக்கு வெளியேதான் உண்மையான வரலாறு, தோற்றவர்களின் வரலாறு அல்ல, தோற்கடிக்கப்பட்டவர்களின் வரலாறு உள்ளது! நன்றி!
கருத்துரையிடுக