ஞாயிறு, செப்டம்பர் 08, 2024

இலங்கை வானொலியில் சிட்டிபாபு வீணையிசை உருமாறிய கதை


இது இலங்கை வானொலி நினைவு மீட்பு.

வீணை சிட்டிபாபு 1972இல் musings of a musician என்ற வீணை இசை தொகுதியை வெளியிட்டார். wedding bells என்ற மெட்டு அப்போது இலங்கை வானொலியின் திரு.பரராஜ சிங்கம் அவர்களை கவர்ந்தது. அவர் புதிய முயற்சி ஒன்றை செய்து பார்க்க விரும்பினார். அவர் கல்லூரியில் விஞ்ஞான ஆசிரியர் பணி செய்தார், கர்நாடக இசையை முறையாக பயின்றவர் என அப்துல் ஹமீத் தன் நூலில் சொல்கிறார்.

அது என்ன முயற்சி?

Wedding bells மெட்டில் ஓ... மணிக்குரல் ஒலித்ததே என்ற பாடலை அங்கையன் கைலாசநாதன் எழுதி குமார் கனக ரத்தினத்தின் தொழினுட்ப திறனில் சிட்டிபாபு அவர்களின் ஒரிஜினல் வீணை இசையை அப்படியே பின்னணி இசையாக வைத்துக்கொண்டு

பரராஜ சிங்கம் அவர்களே பாடி இலங்கை வானொலியில் ஒலிபரப்பான அந்தப் பாடல் அன்று மிக பிரபலம். 

அப்படி கேட்டு மகிழ்ந்தவர்களில் நானும் ஒருவன்.

பாடலின் தொடுப்பை கீழே தருகிறேன், கேட்டு மகிழுங்கள். அநேகமாக 40 வருடங்களுக்கு பிறகு கேட்கிறேன்.

https://youtu.be/Y5CreEr3ZGw?si=221PsfJ49XGZbhD4


படம்: ஹமீத் அவர்களின் வானலைகளில் ஒரு வழிப்போக்கன் என்ற நூலில் இருந்து.

கருத்துகள் இல்லை: