ஞாயிறு, செப்டம்பர் 08, 2024

இலங்கை வானொலியும் பாகிஸ்தானின் கைபர் மெயில் ரயிலும்

இலங்கை வானொலியில் ஒலித்த 'மணிக்குரல் ஒலித்ததே' என்ற பாடல் உருவான கதை பற்றி ஒரு பதிவு எழுதி இருக்கிறேன். 

இந்த பதிவு குளிரும் நிலவினிலே இரு பறவை... என்ற பாடல் பற்றி.

பாகிஸ்தானின் பிரபல இசையமைப்பாளர் Sohail Rana. 1938இல் ஆக்ராவில் பிறந்தவர். 1947க்கு பிறகு பாகிஸ்தான் சென்று விட்டார். தந்தை ராணா அக்பராபாதி உருது கவிஞர்.

திரைப்படங்களுக்கு இசை அமைத்ததுடன் கஜல் ஆல்பங்கள், தனி கருவி இசை ஆல்பங்கள் என பல வடிவங்களில் இசை வழங்கி புகழ்பெற்று விளங்குகிறார். நவ்சாத் அலியும் அவரும் 25 வருடங்களுக்கு மேலாக கடிதம் வழியே உரையாடி இருக்கிறார்கள்.

... ...

இலங்கை வானொலியின் மூத்த கலைஞர் ஆன எஸ் கே பரராசசிங்கம் அவர்கள் ஈழத்து பாடல்கள் உருவாக்கி தனியே வெளியிட ஆர்வம் கொண்டபோது Sohail Rana இயற்றி வெளியிட்ட khyber mail என்ற ஆல்பத்தில் இருந்து Al-vida என்ற இசை கோர்வையை எடுத்து அதற்கொப்ப பாட விரும்பினார். பாடலை தமிழில் என் சண்முகலிங்கன் எழுத பரராசசிங்கம் பாடினார். குளிரும் நிலவினிலே இரு பறவை... என்ற அந்தப் பாடல் இலங்கை வானொலியில் அந்த நாட்களில் மிகவும் பிரபலம். கேட்டு மகிழ்ந்தவர்களில் நானும் ஒருவன்.

பரராசசிங்கம் அவர்கள் சென்னை கிறித்துவ கல்லூரியில் பயின்றவர்.

Khyber mail ஆல்பத்துக்கு 1974ஆம் ஆண்டின் EMI தங்க இசைத்தட்டு விருதை சொஹைல் ராணா வென்றார்.

Sohail Rana வின் அசல் இசைக்கோர்வை, பரராஜசிங்கம் பாடிய குளிரும் நிலவினிலே இரண்டுமே யூடியூபில் உள்ளன. இரண்டு தொடுப்புகளையும் கீழே தருகிறேன். 

விருப்பம் உள்ளோர் 1970களுக்கு பயணம் செய்யலாம். Al vida என்ற உருது சொல்லுக்கு ' இனிமேல் என்றுமே பார்க்க வாய்ப்பு இல்லாத ஒருவருக்கு தரும் பிரியாவிடை ' என்று,பொருளாம். இசையை கேளுங்கள், புரியும்.

https://youtu.be/GWs_Bew113Q?si=wE_nNx0R9022uibm

6.8.2024 இரவு 12மணி

கருத்துகள் இல்லை: