திருவங்காடு கிருஷ்ண குறுப்பு எழுதுகின்றார்:
சோழமண்டலத்தைச் சேர்ந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சீர்காழி என்ற இடத்தில் சம்பந்தமூர்த்தி என்ற பேச்சாற்றலும் திறமையும் வாய்ந்த வைதீக பார்ப்பனர், கி.பி.640 இல் பாண்டியநாட்டின் தலைநகரான மதுரை வந்தார். பாண்டிய மன்னரின் அமைச்சரை அவர் முதலாவதாக வசீகரித்தார். அமைச்சர் மூலமாக பட்டத்து ராணியையும் இவர்கள் இருவர் மூலமாக மன்னரையும் விரைவிலேயே கவர்ந்தார். ...
மதுரையின் மேற்குப் பாகத்தில் இருந்த எட்டு மலைகளிலும் வாழ்ந்துவந்த எட்டாயிரம் சமணத்துறவிகளையும் பாண்டிய படைவீரர்களை அனுப்பி மதுரைக்கு அழைத்து வரச்செய்தார். பட்டத்து அரசியும் அமைச்சரும் சம்பந்தனும் சேர்ந்து மன்னரைத் தூண்டியதன்படி மன்னர் இந்த சமணத்துறவிகளை சம்பந்தருடன் மதவிவாதத்தில் ஈடுபடச்செய்தார். விவாதத்தில் தோல்வியுறும் கட்சியினர் கொல்லப்படுவர் என்பது ஒப்பந்தம். வாதத்தில் சம்பந்தன் தோற்றான். ஆனால் சில செப்படி வித்தைகளைக் காட்டியதன் விளைவாக சமணத்துறவிகள் தோற்றதாக தீர்ப்புக்கப்பட்டது. சம்பந்தனின் தலைமையில் எவ்வித தயக்கமும் இன்றி மதுரை வைகை நதிக்கரையில் சூலங்களை நட்டு, 8,000 சமணத்துறவிகளையும் உயிரோடு ஏற்றிக் கொன்றனர். தேவாரத்தில் சம்பந்தன் எழுதிய 'ஆலவாய் பதிகம்' இந்நிகழ்ச்சியைத் தான் பாடுகின்றது. மிகக்கொடிய இந்தச் சித்ரவதையின் நினைவாக, வைதிக பார்ப்பனர்கள் ஒன்று சேர்ந்து ஆண்டுதோறும் மதுரையில் 'கழுவேற்றித் திருவிழா' என்று இதனைக் கொண்டாடி வருகின்றனர்.... .... ....அடுத்தது வரலாற்றறிஞர் ரொமிலா தாப்பரின் பதிவு:"சமுதாய, பொருளாதார வாழ்க்கையின் மய்யம் - குறிப்பாக கிராமங்களில் கோயில் தான். கோவில்கள் பெரும்பாலும் மன்னர்களால் அளிக்கப்பட்ட கொடைகளே. எனவே அவை பெரும்பாலும் தலைநகரில் அமைந்தவை, அரண்மனையுடன் தொடர்பு கொண்டவை. தஞ்சாவூரில் உள்ள ராஜராஜேஸ்வரம் கோயில் அப்படிப்பட்டதே. இவை கிராம வாழ்வின் மய்யமாக விளங்கின. கிராமக் கூட்டங்கள் கூடுகின்ற இடமும் கிராமப் பாடசாலையும் அதனுடன் இணைந்திருந்தன.பெரியகோவில்கள் கட்ட பல்லாண்டுகள் தேவைப்பட்டன. பிற்காலத்திய பெரிய நிறுவனங்களுக்கான ஒப்பானவருவாயைக் கொண்டிருந்தன இந்தக் கோயில்கள். ஒருவேளை மிகப்பெரிய கோவில் தஞ்சாவூரில் உள்ளதாகவே இருந்திருக்கலாம். 500 ராத்தலுக்கும் அதிகமான கற்களும், 600 ராத்தல் வெள்ளியும் இக்கோயிலின் வருமானம் நன்கொடைகள், வசூல் ஆகியவற்றின் வழியாகவே அவை கிடைத்தன. நூற்றுக்கணக்கான கிராமங்களிலிருந்து கிடைத்த வருமானத்திற்குமேல் இவை கிடைத்தன. போக போக்கியங்களுக்காக 400 பெண்(தேவதாசி )களையும் 212 ஊழியர்களையும் 57 பாட்டுக்காரர்களையும் நியமித்திருந்தனர்.தேவதாசிகள் (கடவுளுடைய அடிமைப்பெண்கள்) சோழ காலகட்டத்தில் எல்லாக் கோயில்களிலும் காணப்பட்டனர். பிறந்தவுடனோ குழந்தைப்பருவத்திலோ கடவுளுக்காக அர்ப்பணிக்கப்பட்டனர். அதிக திறமையுள்ளவர்களை பரதநாட்டிய ஆய்வுக்கு தேர்ந்தெடுத்தனர். ஆனால் இதன் பிறகு பெரும்பாலான கோயில்களிலும் தேவதாசிகள் வஞ்சிக்கப்பட்ட வேசிகளாக தரம்தாழ்ந்தனர்.""நூல் : பிராமண மதம், ஜோசப் இடமருகு, அலைகள் வெளியீட்டகம், 1995... .... ....(2)"சோழர் காலத்தில் நிலவுடைமை முறைகளில் செய்த மாறுதல்களின் தன்மைகள்...வெள்ளான் வகையில் சிறு நிலச் சொந்தக்காரர்களின் உடைமையைப் பறித்து கோவில் தேவதானமாகவும் இறையிலி நிலமாகவும் மாற்றினார்கள். உழவர்கள் தம் உரிமையை இழந்தார்கள். உழுதுண்போரின் நிலங்களின் பலவற்றைப் பிரமதேயம் (பிராமணர்களின் உடைமை) ஆக மாற்றினார்கள். ஆகவே நிலவுடைமை கோவிலுக்கோ கோவில் நிர்வாகத்தில் ஆதித்தம் செலுத்திய மேல்வர்க்கங்களுக்கே மாற்றப்பட்டது. இதனால் உழுதுண்போர் நிலை தாழ்ந்தது. இது மட்டுமல்ல, போர்களுக்கும் கோவில் செலவுகளுக்கும் அரசனது அரண்மனை ஆடம்பரச் செலவுகளுக்கும் சாதாரண மக்கள் மீது வரிகள் விதிக்கப்பட்டன. வரி கொடுக்க முடியாத ஏழைகளைக் கொடுமைப்படுத்தினார்கள். வரி கோவிலுக்கென்று வசூலிக்கப்பட்டதால் வரிகொடாதவர்களுக்கு 'சிவதுரோகி' என்று முத்திரை குத்தி நிலங்களைப் பறிமுதல் செய்தார்கள். அல்லது நிலத்தின் ஒரு பகுதியை விற்று 'தண்டம்' என்ற பெயரால் கோவிலுக்கு எடுத்துக்கெண்டார்கள். இத்தகைய சுரண்டல் முறையை படைகளின் பாதுகாப்போடும் மதக்கொள்கைகளின் அனுசரணையுடனும் சோழ மன்னர்கள் பாதுகாத்தனர்.இச்சுரண்டல் முறையை மக்கள் எப்போதும் சகித்துக்கொண்டிருந்தனர் என்று சொல்ல முடியாது. துயரங்களும் கொடுமைகளும் அளவு மீறும்போது அவர்கள் போராடினர். அவை வர்க்கப் போராட்டங்களே.தஞ்சாவூரில் புஞ்சை என்ற கிராமத்தில் கிடைத்த கல்வெட்டு கூறுவது:அக்கோவிலில் பணியாட்கள் சிலர் இருந்தனர். அவர்களுக்கு ஜீவிதமாக அளிக்கப்பட்டநிலத்தை ஊர்ச்சபையார் கைக்கொண்டு வேலையாட்களை வெளியேற்றினர். அவர்கள் அதிகாரியிடம் முறையிட்டுப்பார்த்தனர். பயனில்லை. அவ்வநீதியை எதிர்க்க அவர்கள் கோயில் முன் தீ வளர்த்து தீயில் இறங்கி உயிர்த்தியாகம் செய்தனர்........தேவரடியார்களில் இருவகையினர் உண்டு. அரச குடும்பம், வணிகர் குடும்பம், அதிகாரிகள் குடும்பத்தினரை சேர்ந்த பெண்கள் பெருஞ்செல்வத்தோடு கோயில் பணிக்குத் தங்களை அர்ப்பணித்துக்கொண்டனர். இவர்களது பெயர்களுடன் அதிகாரிகளின் பட்டங்களும் சேர்த்து வழங்கப்படும்.இன்னொரு வகையினர் ஏழைப்பெண்கள். பஞ்சக் காலத்தில் நிலம் இழந்தவர்களும் வெள்ளக்காலத்தில் நிலம் இழந்தவர்களும் தங்களுடைய பெண்களைக் கோவில்களுக்கு விற்றுவிடுவார்கள். அவர்களுக்கான விலையை நிலமாக அவர்களுக்கே ஜீவிதமாகக் கொடுப்பார்கள். இப்பெண்களின் தந்தையோ தமையனோ உறவினனோ அதனைக்காணியாக அனுபவிப்பர். இவர்களுடைய எண்ணிக்கை அதிகமாகும்போது கோவில் செலவு அதிகமாகும். அதனைக்குறைக்க சபையாரும் அரசனும் முயற்சி செய்வார்கள்.அவர்களுடைய ஜீவிதங்களைப் பறித்து கோயில் செலவில் உணவு மட்டும் அளிக்க முற்படுவர். அச்சமயங்களில் உழவர்களான தேவரடியாரின் உறவினர்கள் நிலமிழப்பார்கள்.இக்கொடுமையை எதிர்த்து நடந்த ஒரு நிகழ்வை கல்வெட்டு ஒன்று குறிப்பிடுகின்றது: தேவரடியாரது ஜீவித நிலங்களைக் கைப்பற்றிக்கொள்ளும்படி நாடாளும் சோழ மன்னனின் அதிகாரி கட்டளை அனுப்ப, சபையாரும் கட்டளையை நிறைவேற்றினர். இதனை எதிர்த்து உழவர்கள் போராட்டம் தொடங்கினர். இவர்களை ஆதரித்து ஏழைத் தேவரடியார் ஆன 'திருவீதிப்பணி செய்வாரும் 'திரண்டனர். தமது போராட்டத்துக்கு மக்கள் ஆதரவைத்திரட்ட சதுரிமாணிக்கம் என்ற தேவரடியாள் முன்வந்தாள். தனது வர்க்கத்தாரின் உரிமையை நிலைநாட்ட கோவில் கோபுரத்தின் மேல் ஏறி விழுந்து உயிர்விட்டாள்.......ஆட்சியின் அநீதியையும் நில உடைமையாளரின் கொடுமையையும் எதிர்க்க மக்கள் ஆயுதம் தாங்கிப் போராடியும் இருக்கிறார்கள். அரசனது ஆணைகளும் சபையாரின் முடிவுகளும் கோவில் சுவர்களில் எழுதிவைக்கப்பட்டு இருந்ததால் இந்த முடிவுகளை எதிர்ப்பதற்கு அடையாளமாக சில நேரங்களில் மக்கள் கோவில் சுவர்களை இடித்து கல்வெட்டுக்களை அழித்திருக்கிறார்கள்.நூல்: தமிழர் வரலாறும் பண்பாடும், நா.வானமாமலை, என்.சி.பி.எச்., 1996
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக