37) முற்றத்திறப்புவிழாவில் “யாயும் யாயும் யாராகியரோ” என்ற குறுந்தொகைப்பாடலின் நவீன வடிவமாக பிஜேபியின் பொன்.ராதாகிருஸ்ணனை தாயப்பன் இப்படி வரவேற்றாராம்:
”நீங்கள் காவி, நாங்கள் கருப்பு
உங்களுக்கு அயோத்தி, எங்களுக்கு ஈரோடு
உங்களுக்கு ராமன், எங்களுக்கு ராமசாமி
இருந்தாலும் நாம் இருவரும் தமிழன் எனும் வகையில் ஒன்று கலந்தோமே”.
ஆஹா! பெரியாரைக் கேவலப்படுத்துவதில் ஆர் எஸ் எஸ்-காரர்களையும் மிஞ்சுகின்றார்கள் இனமானக்காவலர்கள். மலக்குடல் நாற்றம் தாங்கமுடியவில்லை.
38) பிஜேபி ஆள்கின்ற மத்தியப்பிரதேசத்தில் உள்ள சாஞ்சிக்கு மகிந்த ராஜபக்சே வந்தபோது, அங்கே போராட்டம் நடத்த நேரடியாக சென்ற வைகோவின் கழுத்தில் தொப்புள்கொடிகள் கன்னாபின்னாவென சிக்கிக்கொண்டன. சிக்கியது அது ஒன்றும் முதல் முறை அல்ல. தேசிய ஜனநாயக முன்னணியின் ஆட்சியில் ம.தி.மு.க, பா.ம.க, தி.மு.க மூன்று கட்சிகளை சேர்ந்தவர்கள் வாஜ்பாய் அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்தார்கள் (காங்கிரசோ பிஜேபியோ தேசிய முன்னணியோ வேறு எதுவுமோ...திமுக அந்த அமைச்சரவையில் நிச்சயம் இருக்கும், அது என்ன தொப்புள்கொடியோ!). 2000 ஏப்ரலில் சிங்கள இராணுவத்தை புலிகள் முற்றுகை இட்டார்கள்; உதவி கேட்ட இலங்கை அரசுக்கு ஆதரவாக வாஜ்பாய், ”புலிகள் இந்த முற்றுகையை விலக்கிக் கொள்ள வேண்டும், அவர்களை விடுவிக்க வேண்டும், இல்லையென்றால் இங்கிருந்து இந்திய படைகள் அனுப்பப்படும்” என்று எச்சரித்தார். அவ்வாறே புலிகள் விலகினார்கள். இந்த உடன்பாட்டுக்கு உதவிய தொப்புள்கொடிகள் யார் யார் என்ற கேள்வியும் இக்கட்டுரையைப் பொருத்தவரை இரண்டாம்பட்சம்.
39) 2014 நாடாளுமன்றத்தேர்தல் (குறைந்த பட்சம்) அடுத்த ஐந்து வருடங்களுக்கு இந்தியாவின் அரசியல்-பொருளாதார தலைவிதியை நிர்ணயம் செய்யும். 1991ஆம் ஆண்டு நடந்த தேர்தலை சற்றே நினைவில் கொள்வோம்.
40) 1989ஆம் ஆண்டு விஸ்வநாத் பிரதாப் சிங் அவர்களின் தலைமையில் ஆன ஒரு கூட்டணி அரசு அமைந்தது; இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டுக்கு வழி செய்யும் மண்டல் குழு அறிக்கையை வி.பி.சிங் அமலாக்கினார்; இது பார்ப்பனீய சக்திகளுக்கும் அவர்களின் இயக்கமான பிஜேபி ஆர் எஸ் எஸுக்கும் உவப்பானதாக இல்லை; மேலும் ரத யாத்திரை என்ற பெயரில் நாடெங்கும் ஒரு ரத்தக்களறியை ஏற்படுத்தி டெல்லி நாற்காலிக்கு குறிவைத்து அத்வானி நடத்திய ரத யாத்திரைக்கு பிஹாரில் லாலுபிரசாத் முற்றுப்புள்ளி வைத்தார்; விளைவு வி.பி.சிங் அரசுக்கான ஆதரவை பிஜேபி விலக்கிக்கொண்டது, வி பி சிங் அரசு கவிழ்க்கப்பட்டது; அதன் பின் காங்கிரஸ் ஆதரவுடன் சில மாதங்களுக்கு பிரதமராக இருந்த சந்திரசேகர் 1991 மார்ச் ஆறாம் நாள் பதவி விலகினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக