
ஜப்பானியப் படைக்குவிப்பில் மிகப்பெரியதும் மிகப்பலம் வாய்ந்ததுமான இராணுவப்பிரிவு மஞ்சூரியாவில் குவிக்கப்பட்டிருந்த குவாண்டுங் இராணுவம்தான். படைவீரர்கள் மட்டுமே பத்து லட்சத்துக்கும் மேல். இது தவிர ஆயிரக்கணக்கான பீரங்கிகள், டாங்குகள், விமானங்கள்... ஆசியாவில் தங்களது ஆக்கிரமிப்பை விரிவுபடுத்த ஜப்பானிய ஏகாதிபத்தியம் இப்படையின் மீதுதான் பெரும் நம்பிக்கை வைத்திருந்தது.
1945 ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 2 வரை
நடைபெற்ற போட்ஸ்டாம் மாநாட்டுக்குப் பிறகு, ஆகஸ்ட் 9 முதல் சோவியத் யூனியன்
ஜப்பானுக்கு எதிராக யுத்தத்தில் இறங்கும் என்று பிரகடனம் (ஆகஸ்ட் 8)
செய்தது. “...ஜெர்மனி அனுபவித்ததைப்
போன்ற அபாயங்கள், பேரழிவுகளில் இருந்து தப்பிக்கவும் ஆன வாய்ப்பை ஜப்பானிய
மக்களுக்கு அளிக்கவும் வல்ல ஒரே வழி இதுதான் என்று கருதுவதாக” அப்பிரகடனம்
கூறியது.
ஆகஸ்ட் 9 அன்று உயர்மட்ட இராணுவ
கவுன்சில் கூட்ட்த்தில் ஜப்பானியப்பிரதமர் கண்டாரோ கட்சுகி கூறியது: “இன்று
காலையில் சோவியத் யூனியன் போரில் இறங்கியதானது, இனி மேற்கொண்டு நாங்கள் யுத்த்த்தை
தொடர முடியாத நம்பிக்கையற்ற சூழலில் எங்களை தள்ளியுள்ளது”.

ட்ரூமனும் அவரது இராணுவமும்
வகுத்த திட்டம் இதுதான்: போட்ஸ்டாம் மாநாடு நடந்து முடிந்தவுடன் ஜப்பான் மீது ஒரு
அணுகுண்டை வெடிப்பது; உலகப்போரை முடிவுக்கு கொண்டு வந்ததில் சோவியத் யூனியனின்
மகத்தான பங்கையும், தூரக்கிழக்கு நாடுகளில் சோவியத்தின் பங்கையும் இருட்டடிப்பு
செய்வது, சிறுமைப் படுத்துவது; ஆனால் தட்பவெப்ப நிலை அல்லது தொழினுட்பக்
காரணங்களால் இது தடைப்படும் எனில் ஜப்பானின் க்வாண்டுங் படைகள் மீது சோவியத் தாக்குதலைத் தொடங்கும் முன்பாகவே
முந்திக்கொண்டு ஜப்பான் மீது அணுகுண்டை வெடிப்பது.
இதற்கு மேலும் சந்தேகம் எழுப்புவோர்க்கு ட்ரூமன் தனது
நாட்குறிப்பில் (டைரி) எழுதியதே சரியான சான்று. பெர்லினில் இருந்து (போட்ஸ்டாம்
மாநாட்டில் இருந்து) புறப்பட்ட பின்னர் ட்ரூமன் தன் நாட்குறிப்பில் எழுதியது:
“போட்ஸ்டாம் மாநாட்டில் நான் கற்றுக்கொண்ட்து என்னவெனில் ஜப்பானியருக்கு எதிரான
போரில் அவர்களது (ரஷ்யாவின்) கை ஓங்கிவிட அனுமதிக்கக் கூடாது என்பதுதான். அடி
கொடுத்தால் மட்டுமே அவர்கள் (ரஷ்யர்கள்) உணர்வார்கள்.
பிரிட்டனின் சர்ச்சில்,
அமெரிக்காவின் ஐசன்ஹோவர், மேற்கத்திய நாடுகளின் பிரபலப்புள்ளிகள் அனைவருமே ஒரு
விசயத்தை ஒத்துக்கொள்கின்றார்கள் – அமெரிக்க மக்களைக் காப்பதற்காகவோ நீண்டகாலப்
போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காகவோ ஜப்பான் மீது அணுகுண்டு வீசப்படவில்லை.
ட்ரூமன் கூறிய பேரழிவு விளைவிக்கும் அந்தப் ‘புதிய ஆயுதத்தை’ (At Potsdam Conference, however, President Truman chose to tell Stalin only that the U.S. possessed "a new weapon of unusual destructive force - http://www.dannen.com/decision/potsdam.html) கையில்
ஏந்திக்கொண்டு முக்கியமாக சோசலிச சோவியத்தையும் உலக நாடுகள் அனைத்தையும்
மிரட்டவும், தனது ஏகாதிபத்திய எல்லைகளை விரிவுபடுத்தவுமே ஐந்து லட்சத்திற்கும்
மேற்பட்ட அப்பாவி ஜப்பானிய மக்களின் விலைமதிப்பற்ற
உயிர்கள் அமெரிக்காவுக்கு தேவைப்பட்டது.
18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ப்ரெஞ்சு அறிஞன் மாண்டெஸ்க்யூ,
ஒரு ராணுவ சர்வாதிகாரி பற்றி இப்படிக் கூறினான்: ”அவன் நினைத்துக்
கொள்கின்றான், வரலாற்றில் இருந்து அவன் பிரிக்கப்பட முடியாதவன் என்று’ எனவேதான்
அவன் எங்கே நின்று விடுகின்றானோ அங்கேயே வரலாறும் முற்றுப்பெற்று விடுவதாக
கற்பனையில் மிதக்கின்றான்”.
இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹிட்லரும் இப்படித்தான்
நினைத்துக் கொண்டிருந்தான். ஆனால் அவனது முடிவை இறுதியில் அவனேதான் தேடிக்கொண்டான்.
அமெரிக்காவின் அதிபர்களும் இப்படித்தான் நினைத்துக்கொண்டிருக்கின்றார்கள், தாங்கள்
இயங்கும் போது இந்த உலகம் இயங்குவதாகவும், தாங்கள் நின்றுவிடும்போது இந்த உலகமும் நின்றுவிடுவதாகவும்.
ஹிட்லரின் வரலாற்றை அவர்கள் வாசிக்க வேண்டும்.
(புகைப்படத்தில் சர்ச்சில்,ரூஸ்வெல்ட்,ஜோசப் ஸ்டாலின்)
(முற்றும்)
3 கருத்துகள்:
மூத்த தோழர் காஸ்யபன் அவர்கள் தனது கருத்தாக இவ்வாறு தெரிவித்துள்ளார்:
இக்பால் அவர்களே! ஆஸ்திரேலியாவின் கான்பெராவில் காமன்வெல்த் மாநாடு நடந்தது. தென் ஆப்பிரிக்க சுதந்திரம் அப்போது முக்கிய பிரச்சினை! ஆனால் பிரிட்டன் சண்டித்தனம் செய்தது! அவர்கள் தென் ஆப்பிரிக்கா என்று கூட உச்சரிகமாட்டார்கள்.தெற்கு ஆப்பிரிக்க பிரச்சினை என்றுதான் குறிப்பிடுவார்கள்.கருப்பினமக்களின் விடுதலைக்காகவே தாங்கள் அங்கிருப்பதாக பாசாங்கு கூறினர்! இந்த மாநாட்டில் பிரதமர் இந்திரா பெசினார்! " இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியால் எற்பட்ட அழிவு சொல்லமுடியாத அளவுக்கு எற்பட்டது. ஜெர்மனியின் மீது அணுகுண்டு போடப்படவில்லை. ஜெர்மனியனின் தோல் வெள்ளை நிறம் குண்டு போட்டால் பாதிக்கப்படுபவர்கள் அண்டை நாடுகளில் வசிக்கும் வெள்ளை நிறத்து ஐரோப்பியர்கள். சரணாகதியடைந்த பிறகும் . ஜப்பான் மீது அணு குண்டை வீசினீர்கள் . ஏனென்றால் அவர்கள் வெள்ளை நிறத்தவர்கள் அல்ல" ...என்று அம்மையார் கூறினார்!---காஸ்யபன்.
தோழர் அவர்களுக்கு நன்றி!
உங்களின் எழுத்து அருமை நண்பரே
எப்போதும் ஒரு வரலாற்றுக்களஞ்சியமாக நாம் அறியாத மிக சுவாரசியமான அல்லது திடுக்கிடும் தகவல்களை தந்து கொண்டே இருக்கின்ற தோழர் காஸ்யபன் அவர்களுக்கும் அருமை நண்பர் செந்தில் அவர்களுக்கும் நன்றி!
கருத்துரையிடுக