ஞாயிறு, செப்டம்பர் 11, 2011

மனிதம் காலி...மிருகம் மீதி...பாகம் 2


மனிதம் காலி...மிருகம் மீதி...பாகம் 2





(பொடா, தடா, அடாபுடா போன்ற சட்டங்களின் கீழ்ஏராளமான முஸ்லிம் இளைஞர்களை விசாரணை ஏதும் இன்றி வருடக்கணக்காய்சிறையில் அடைத்து மனநோயாளி களாக்கியபோதும் கூட மாண்புமிகு நீதிமன்றங்கள்பதட்டம் ஏதுமின்றி அமைதியாகத்தான் இருக்கின்றன.அரசு எந்தி ரமோ ஒரு நட்டு, போல்ட்டு, ஸ்க்ரூ கூட கழன்றுவிடாமல் எப்போதும்போல்கழுவப்படாத சிமெண்டு கலவை மெசின் போல சுழன்றுகொண்டேதான் இருக்கின்றது)



வெளிப்புறக்காட்சிகள், ஆடம்பரமான செட்டுக்கள், பாடல் போன்றவற்றைமிகக்கவனமாகத் தவிர்த்து, தமது இந்துத் துவா அரசியலை சீனுவாச ராமானுஜன்என்னும் பாத்திரம் வாயிலாக வெளிப்படுத்துவது என்ற ஒரே நோக்கில், வசனங் களுக்குமட்டுமே முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள்.


சீனுவாசன் காட்சிப்படுத்தப்படும் விதம் மிகமிக கவனமாகக் கையாளப்பட்டுள்ளது.நாயகன் காலையில் காய்கறி வாங்க வெளியே வந்தவன், மாலை ஆறுமணிக்குள் தனதுதிட் டத்தை நிகழ்த்திவிட்டு பதட்டம் ஏதும் இன்றி மிக சாதாரண மனிதனாக வீடுதிரும்புகின்றான். முதல் காட்சியில் அவனது இரண்டுகைகளிலும் பைகள் உள்ளன;பைகள் நிறைய பல சரக்கு, காய்கறிகள். அவனுடைய கால இலக்கான மாலை ஆறுமணிக்கு வீடு திரும்பும்போது அதே பைகள். பதட்டம் இல்லாத நிதானமான நடவடிக்கைககள். மிகமிக அற்புத மான உத்தி. "லவுகீக வாழ்வில் வேலைக்குப்போவது,கடைக்குப்போவது, சாப்பிடுவது, மலஜலம் கழிப்பது, துணி துவைப்பது" போன்றஅன்றாடக் கடமைகளைப் போலவே அல்லது அக்கடமைகளில் ஒன்றாகவே சமூகத்தை'தூய்மை'ப்படுத்துவதும் ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமை என்று அந்தக்காய்கறிப்பைகளும் மாலை ஆறு மணிக்கு வீடுதிரும்பும் ஒரு சாதாரண ஊழியனின்முகபாவ மும் பார்வையாளருக்கு போதிக்கின்றன. மூன்றுபேரை வெடிவைத்துக்கொன்ற பின்னும், ஒரு 'தூய்மை'ப்படுத்து பவன் எந்தவிதமான பதட்டமும் இன்றிநிதானமாக இருக்க வேண்டும் என்று நீரஜ் பாண்டேயும் கமலஹாசனும் நமக்குசொல்கின்றார்கள். கொலம்பஸ், ஹிட்லர், கோட்சே, அத்வானி, மோடி, ஜார்ஜ் புஷ்...எனவரலாறு நெடுகிலும் 'தூய்மை'ப்படுத்தப் புறப்பட்டவர்கள் இப்படித்தான் பதட்டமின்றிஇருந்தார்கள், இருக்கின்றார்கள்.


ஆயிரக்கணக்கான அரவாக் இன பழங்குடிகளைத் தீயில் இட்டு எரித்த கொலம்பசும்,யூதர்களை லட்சக்கணக்கில் சாக டித்த ஹிட்லரும், அரபுப்பிராந்தியத்திலும் இராக்கிலும்ஆப்கனிலும் ஒரு நூற்றாண்டாக அமெரிக்காவும் அதன் சகாக் களும் இப்படித்தான்பதட்டம் ஏதுமின்றி மனிதப்படு கொலையை செய்துகொண்டே இருக்கிறார்கள். காந்தியாரை சுட்டு வீழ்த்தியபோதும் கோட்சேயும் அவனது சகாக் களான வீரசவர்க்கார்கும்பலும் பதட்டமின்றி அமைதியாகத் தான் இருந்தார்கள். அயோத்தி, ஒரிசா, குஜராத்,பிஹார், மும்பை, மாலேகான், ஹைதராபாத், ராஜஸ்தான், தென் காசி, குல்பர்க்சொசைட்டி ஆகிய இடங்களில் முஸ்லிம், கிறித்துவ மக்களை உயிரோடு கொளுத்தியும்குரல்வளை களை அறுத்த போதும், முஸ்லிம்-கிறித்துவப் பெண்களை வல்லுறவுசெய்தபோதும் நிர்வாணமாக ஊர்வலம் வரச் செய்தபோதும் அவர்கள்பதட்டமின்றித்தான் இருந்தார்கள், நிதானமாக 'தூய்மை'ப்படுத்தினார்கள். ஸ்டெயின்ஸ்பாதிரி யாரையும் அவரது இரண்டு மகன்களையும் ஜீப்பில் வைத்துக் கொளுத்தி'தூய்மை'ப்படுத்தியபோதும், சொரா புதீன் ஷேக், இஷ்ரத் ஜெஹான் போன்றஇசுலாமியக்குப்பை களை போலி என்கவுன்டர்களில் சுட்டு வீழ்த்தியபோதும்பதட்டமின்றிதான் இருந்தார்கள்.  'வாட்டர்' படப்பிடிப்பின் போது மீராநாயரையும் அவரதுகுழுவினரையும் கங்கைக் கரையில் ஓடஓட விரட்டியபோதும் பதட்டம் இன்றிதான்இருந்தார்கள்.


மீராநாயரை விரட்டிவிட்டு, கங்கையிலும் காசியிலும் மொட்டை அடித்து தெருவில்அநாதைகளாகவும் விபச்சாரிகளாகவும் விரட்டப்பட்ட இந்து மதப்பெண்களின்'புனித'த்தைக் காப்பாற்றினார்கள். குஜராத்தில் சாயாஜி பல்கலைக்கழக மாணவர்சந்திரசேகரையும், பேராசியர் பணிக்கரையும் விரட்டி அடித்து சிறையில் தள்ளியபோதும், 94 வயதாகும் ஓவியர் எம்.எப்.ஹுசேனை அவரது வீடு புகுந்து தாக்கி அவரைவெளிநாட்டுக்குத் துரத்தி அடித்த போது, கர்நாடகாவில் இளம்பெண்களை அடித்துநொறுக்கி அவமதித்து 'பாரதப் பண்பாட்டை'க் கட்டிக்காத்தபோதும் பதட்டம் இன்றித்தான்இருந்தார்கள். ஆமிர்கானின் 'பானா' திரைப்படத்தை குஜராத்தில் திரையிட்டஅரங்குகளை எல்லாம் அடித்து நொறுக்கி குஜராத்தில் தடை செய்த போதும்பதட்டமின்றி அமைதியாகத்தான் இருந்தார்கள். காஷ்மீரில் முஸ்லீம் பெண்களைவல்லுறவுக்காளாக்கிய போதும், முஸ்லீம் சிறுவர்களை போலி என்கவுன்டரில்சுட்டுக்கொலை செய்து பதவிஉயர்வு பெற்றபோதும் இந்திய ராணுவத்தினர் பதட்டமின்றிநிதானமாகத்தான் இருக்கின் றார்கள். பொடா, தடா, அடாபுடா போன்ற சட்டங்களின் கீழ்ஏராளமான முஸ்லிம் இளைஞர்களை விசாரணை ஏதும் இன்றி வருடக்கணக்காய்சிறையில் அடைத்து மனநோயாளி களாக்கியபோதும் கூட மாண்புமிகு நீதிமன்றங்கள்பதட்டம் ஏதுமின்றி அமைதியாகத்தான் இருக்கின்றன.
அரசு எந்தி ரமோ ஒரு நட்டு, போல்ட்டு, ஸ்க்ரூ கூட கழன்றுவிடாமல் எப்போதும்போல்கழுவப்படாத சிமெண்டு கலவை மெசின் போல சுழன்றுகொண்டேதான் இருக்கின்றது.


கர்ப்பிணிப்பெண்ணின் பிறப்புறுப்பு வழியே கையை நுழைத்து கருப்பைக்குள் இருந்தகருவைக் கலைத்து கரு வறுத்தார்கள் என்று சீனுவாச ராமானுஜன் கண்ணில் நீர் வழியகூறுகின்றான். 'கருவறுத்தார்கள்' என்று இரண்டு முறை கூறுகின்றான். உண்மைதான்!முஸ்லிம் கர்ப்பிணிப் பெண்களைத் தேடி, வயிற்றை சூலாயுதங்களால் கிழித்து, உள்ளேஇருந்த சிசுக்களை தீயில் போட்டு வாட்டிய கொடுமையும் நடந்ததே! எங்கே? குஜராத்தில். செய்தவர்கள் யார்? நரேந்திரமோடியும் போலிசும் சங்பரிவார் கும்பலும் தானே!அல்-காய்தா, இராக், அமெரிக்கா, கத்திரிக்கா, புடலங்கா என்று பேசும் நீரஜ்பாண்டேயோகமலஹாசனோ குஜராத்தில் இந்தக்கொடுமைக்காரர்களைப் பற்றி படம் நெடுகிலும்ஓர்இடத்திலும் குறிப்பாகவோ அடையாளத் தாலோ கூட உணர்த்தாதது ஏன்?அப்புறப்படுத்தப்பட வேண்டிய 'குப்பை'களான அமானுல்லாவும் அவன் சகாக்களும்தான்அவற்றை செய்தார்கள் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டுமா? படம் நெடுகிலும்முஸ்லிம் களை தீவிரவாதிகளாக சித்தரித்துவிட்டு, இந்தக் கொடுமை களைப் பற்றிகண்ணில் நீர்வழியப் பேசும்போது, இவற்றை யும் முஸ்லீம்கள்தான் செய்தார்கள் என்றுபார்வையாளர்கள் புரிந்துகொள்ள வேண்டுமா?


நீரஜ்பாண்டேயும் கமலஹாச னும் யாருக்கு எதிராக, யாருக்கு ஆதரவாகபேசுகின்றார்கள்? படத்தின் தொடக்கக்காட்சியில் பின்னணியில் 'சம்பவாமி யுகே யுகே'என்ற கீதை வசனம் சங்கொலியுடன் ஒலிக்கிறது. அதாவது 'அதர்மம் தலைதூக்கும்போதெல்லாம் ஒவ்வொரு யுகத்திலும் நான் அவதரிப்பேன்' என்று பகவான் ஸ்ரீக்ருஷ்ணர்கீதையில் 'டிக்ளேர்' செய்கிறார். இந்தியாவில் 'இஸ்லாமிய அதர்மக் குப்பைகளை'அகற்ற, பகவான் ஸ்ரீக்ருஷ்ணர் சீனுவாச ராமானுஜன் உருவத்தில் அவதரிக்கின் றார்என்று நீரஜ் பாண்டேயும் கமலஹாசனும் 'டிக்ளேர்' செய் கிறார்கள். படத்தின்இறுதிக்காட்சியில் கமிஷனர் மரார் சொல்கின்றார்: "நடந்தது எல்லாம் நல்லபடியாத்தான்நடந்தது". இதுவும் பகவத்கீதை வசனம்தான். ஆம், பதட்டம் ஏதும் இன்றி இந்துத்துவாதீவிரவாதிகள், முஸ்லிம், கிறித்துவ குப்பைகளை நல்லபடியாகத்தான் 'தூய்மை'ப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.


"இது தேவை இல்லாதது, இடையூறு விளைவிப்பது" என்று முடிவு செய்வதுதூய்மைப்படுத்துபவர் சார்ந்த விசயம். நீரஜ் பாண்டேயும் கமலஹாசனும், 'இந்தியசமூகத்துக்கு இஸ்லா மியக் குப்பைகள் தேவையில்லாதவை, இடையூறு விளைவிப்பவை. இந்தக்குப்பைகளை அப்புறப்படுத்தி சமூகத் தைத்'தூய்மை'ப்படுத்தும்கடமையை கோட்சேயைப் போல், மோடியைப் போல் நிதானமாக, பதட்டமின்றிசெய்யவேண்டும்' என்ற இந்துத்துவா அரசியலை வெட்கம் ஏதுமின்றி 'பாஞ்ச ஜன்ய'சங்கு எடுத்து ஊதுகின்றனர். தனது வர்த்தக லாபங்களுக்காக உலகெங்குமுள்ளஇஸ்லாமியர்களை திட்டமிட்டே 'தீவிரவாதி' களாக ஆக்கும் உலகளாவிய அமெரிக்கபயங்கரவாதமும், வர்த்தக லாபங் களுக்காக இந்திய இஸ்லாமிய மக்களை திட்டமிட்டே'தீவிரவாதி'களாக ஆக்கும் பார்ப்பன, பனியா மேல்சாதி இந்துத்வா தீவிரவாதமும், இந்தஅஜெண்டாவை செயல் படுத்தும் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., காங்கிரஸ் கள்ளக்கூட்டணியும், இந்த மாபெரும் நெட்வொர்க்கின் பிரச்சார ஏஜெண்டுகளாக அச்சு,எலக்ட்ரானிக், திரைப்பட ஊடகங்களும் இயங்குகின்றன. இந்த பிரச் சார அரசியலின்ஒருபகுதியாக சீனுவாச ராமானுஜன் என்ற பெயரில் கமலஹாசன் வீதிக்கு வந்துள்ளார்.


பொதுவாக சமூகத்தில் சுத்தமானவர்கள், முற்போக்கானவர்கள் என்று 'அறியப்பட்ட'வர்களின் அசைவுகள், வார்த்தைகளை பொதுவெளி யில் உள்ள சமூகம் எப்போதும்அவதானித்துக் கொண்டே இருக்கிறது. அவர்கள் கூறும் வார்த்தைகளின் உள்ளே புகுந்துஉண்மையைத் தேடுவதை விட்டுவிட்டு வார்த்தைகளையே உண்மை எனநம்பிவிடுகின்றது. ஒரு அன்றாடக்கூலி இந்தி யனுக்கு ஒவ்வொரு அரிசிமணியும்தக்காளியும் மிக முக்கிய மான விசயங்கள். கமிஷனர் மராரும் சீனுவாச ராமானுஜனும்சந்திக்கின்ற அந்தக் கடைசிக் காட்சி மிக முக்கியமானது. அவனது பையில் இருந்து ஒருதக்காளி தரையில் விழ, மிகக் கவனமாக அதை எடுத்து பையில் போடும் சீனுவாசராமானுஜன் எண்பது விழுக்காடு சாமானிய இந்தியர்களோடு இக்காட்சியில் மிகநெருங்குகின்றான். இப்படி யான ஒரு பொறுப்பான சாமானியக் குடும்பத் தலைவன் படம்நெடுகிலும் பேசிய வார்த்தை களிலும் செய்த செயல்களிலும் நிச்சயம் ஏதோ நியாயம்இருப்பதாக சாமானிய பார்வையாளர் களை முடிவு செய்யத் தூண்டும் இந்த இறுதிக்காட்சி மிக அபாயமானது.


"அமைதிக்காலங்களில்தான் எதிர்கால வகுப்புக் கலவரங்களுக்கான விதைகள்சத்தமின்றித் தூவப் படுகின்றன, ஆனால் நாம் அப்போது சும்மா இருக்கின்றோம்" என்றச.தமிழ்ச்செல்வனின் கவலையை இங்கே பதிவு செய்வது பொருத்தம். ஒருமுற்போக்காளராக, வித்தியாசமான திரைப் படங்களைத் தருகின்றவராகபொதுவெளியில் அறியப்பட்டுள்ள கமலஹாசன், இந்துத்துவா தீவிரவாதத்தில் நியாயம்இருப்பதாக சாமானிய மக்கள் உணரக்கூடிய வகையில் நுட்பமாக ஒரு படத்தை இயக்கிவெளியிட்டுள் ளார். கமலஹாசன் யார் என்பதைக் கேள்வி கேட்க வேண்டிய அவசியம்உள்ளது. வெறுமனே அவர் ஒரு சினிமா வியாபாரி என்பதை நம்பமுடியாது.சீனுவாசராமானுஜன் "நானும் ஒரு தீவிரவாதிதான்" என்று சொல்கின்றான், ஆனால்அவன் பச்சையாக "நான் ஒரு இந்துத்துவா தீவிரவாதிதான்" என்று சொல்லியிருக்கலாம்.முழுக்க நனைஞ்ச பின்னே கோவணம் எதுக்கு? சீனுவாச ராமானுஜன்கோட்சேயைப்போல் ஒருவன், நம்மால் பதற்றமின்றி இருக்க முடியாது.

கருத்துகள் இல்லை: