ஞாயிறு, செப்டம்பர் 18, 2011


உலகின் மிக அழகிய பெண்ணொருத்தி!






சுதந்திரமாயும், அச்சமற்றும் இருப்போரின் உருவம் நான்  
இறவா ரகசியங்களின் உருவம் நான் 
இறுதிவரை போராடுபவர்களின் குரல் நான் 
கூச்சல் குழப்பங்களின் நடுவே ஆழ்ந்த பொருள் நான்


அந்த நாய்கள் எம் மக்களின் உரிமைகளை விற்றார்கள்  
எம்மக்களின் அன்றாட  உணவைப் பறித்தார்கள் 
கருத்துரிமையின் முகத்தில் கதவை அறைந்து சாத்தினார்கள் 
ஒடுக்கப்பட்ட அந்த  மக்களின் உரிமைதான் நான்


நான் சுதந்திரமானவள், என் வார்த்தைகளும் அப்படியே 
நான் சுதந்திரமானவள், என் வார்த்தைகளும் அப்படியே 
ஒரு வாய்  உணவுக்கு நாம் கொடுத்த விலையை மறக்காதீர்கள் 
நம் துன்ப துயரங்களுக்காண காரணங்கள் எவையென மறக்காதீர்கள் 
நாம் உதவி உதவி என்று கதறிய போது 
துரோகம் இழைத்து ஓடியவர்களையும் மறக்காதீர்கள்


அந்த சிகப்பு ரோஜாவின் ரகசியங்களும் நானே 
வருஷங்கள் காதலித்த  வண்ணம் 
நதிகள் தம் மடியில் புதைத்துக்கொண்ட அதன் நறுமணம் 
தீப் பிழம்பை இதழ்களாய் பிரசவிக்கும் 
சுதந்திரத்தை சுவாசிப்பவர்களை அறைகூவி அழைக்கும் 
அந்த சிகப்பு ரோஜாவின் ரகசியங்களும் நானே 
இருளில்  ஒளிரும் தாரகையும்  நானே 
கொடுங்கோலனின் தொண்டையில் சிக்கிய முள்ளும் நானே 
அக்கினியால் விசிறிவிடப்பட்ட காற்றும் நானே 
மறக்கப்பட முடியாதவர்களின் ஆன்மாவும் நானே 
என்றும் மரிக்கதாவர்களின் குரலும் நானே  நானே 

நாம் இரும்பிலிருந்து களிமண்ணை சமைப்போம் 
அதிலிருந்து எழுப்புவோம் 
பறவைகளையும், வீட்டையும், தேசத்தையும்
காற்றையும் மழையையும்    
உருவெடுக்கும் ஒரு புத்தம் புது நேயத்தையும் 
   
                                                                                     
சுதந்திரத்தை சுவாசிக்கும் பூவுலகின் அனைத்து  மனிதர்களின் ஒற்றை உருவம் நான் 
துப்பாக்கித் தோட்டாவுக்கு ஒப்பானவள் நான் 
சுதந்திரத்தை சுவாசிக்கும் பூவுலகின் அனைத்து  மனிதர்களின் ஒற்றை உருவம் நான் 
துப்பாக்கித் தோட்டாவுக்கு ஒப்பானவள் நான்
 .....

000 

  
“சுதந்திரத்தை சுவாசிக்கும் பூவுலகின் அனைத்து  மனிதர்களின் ஒற்றை உருவம் நான் ” 
ஆஹா! உலகின் மிக அழகிய பெண்ணொருத்தி இவள்.  இவள் பாடுவதை இங்கே பாருங்கள், கேளுங்கள்...
http://www.youtube.com/watch?v=A9mY_GsQZ2w&feature=player_embedded#!
                                        
(கடந்த மார்ச் மாதத்தில் ஒரு நாள்...இக்கவிதையை எனக்கு மின்னஞ்சலில் அனுப்பியவர் தோழர் எஸ்.வி.வேணுகோபாலன், கவிதை வாசிப்போரை சூடேற்றும் ஒன்றாகவே, உடனடியாக நான் அதை மொழிபெயர்த்து, ‘நல்லா இருக்குதா தோழர்? இல்லேன்னா திருத்துங்க’ என்று மட்டும்தான் சொன்னேன்.  அவர் அதைப் படித்துவிட்டு, தோழர் மாதவராஜுடன் பகிர்ந்து கொள்ள அவரோ பெருந்தன்மையுடனும் மகிழ்வுடனும் தனது தீராதபக்கங்களில் வெளியிட்டதுடன், மறுநாள் சனிக்கிழமை என்னை தொலைபேசியில் அழைத்து உற்சாகம் பொங்கும், கேட்போரையும் உற்சாகம்  தொற்றிக்கொள்ளும் அவரது குரலில் ‘தோழா...!” என அழைத்துப் பேசிக்கொண்டே போனார்!  தொடர்ந்து மூத்த தோழர் காஷ்யபன் நாக்பூரில் இருந்து அழைத்து வாழ்த்தினார். 
 இந்த  மொழியாக்கம் வண்ணக்கதிரிலும், Bank Workers Unity பத்திரிகையின் மார்ச் இதழிலும்  இடம் பெற்றது. பெற்றுள்ளது... எஸ்.வி.வி, மாதவ், காஷ்யபன், அ.குமரேசன்,  தீராதபக்கங்களில் வாழ்த்திய அனைவருக்கும் என் நன்றிகள்... நான் செய்த மொழிபெயர்ப்புக்களில் எனக்கு மிகுந்த திருப்தி தந்தவற்றுள் இதுவும் ஒன்று....)

சனி, செப்டம்பர் 17, 2011

கோமாதா...என் குலமாதா...


















செய்தி: காங்கிரஷ் எம்.பி.இஷான் ஜாஃப்ரி கொல்லப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தொடர்ந்து கண்காணிக்க தேவை இல்லை - இஷான் ஜாஃப்ரி மனைவி ஜாகியா தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.
நரேந்திர மோடி, பி.ஜே.பி.க்கும்பல் ஆரவாரம் ‘மோடி ரொம்ப நல்லவரு’....
மோடி, மேனகா காந்தி, எடியுரப்பா, அத்வானி, போன்ற மேதகு கனவான்களுக்கு தெருவுல போற நாய்க்கு அடிபட்டுதுன்னா உடனே கண்ணுல மளமளன்னு கண்ணீரு பொங்கும் தெரியுமா? இருதயம் வலிக்கும், உடனே கருணை பொங்க ஆம்புலன்ஸ்ல சைரன் ஒலிக்க தூக்கிகிட்டு சிகிச்சைக்கு ஓடுவாங்க. அவுங்கள எல்லாம் நாம் குறை சொல்லலாமா?
அது யாரு அவரு, ஸ்டெயின்ஸ் பாதிரியாரா? அவரோ அவரோட ரெண்டு குழந்தைகளோ கேவலம், மனுசப் பிறவிங்கதானே? உசிரோட இருந்தா என்ன. வைக்கப்போருல போட்டு கொளுத்துனா என்ன?
அது என்ன, பெஸ்ட் பேக்கரி? குஜராத்துல சொறி நாய்ங்க இருக்கலாம், கேவலம் முஸ்லீமுங்க இருக்கலாமா? அவங்கள உசிரோட எரிச்சா என்ன தப்பு?
தன்னோட படுக்கை அறையில குருவிங்க வந்து கூடு கட்டுதுன்னு தெரிஞ்ச பின்னால மின்விசிறிய போடுறத கூட இஷான் ஜாப்ரி (முன்னாள் காங்கிரஸ் எம்.பி.) நிறுத்திட்டாருன்னு படிச்சிருக்கேன். சரியான பைத்தியம் புடிச்ச ஆளு போல. அவரோட மனைவி கண் முன்னாலேயே ஜாப்ரியோட கைகள வெட்டி துண்டாக்கி முடிவில அவர கண்டதுண்டமா வெட்டிக் கூறு போட்டாங்களாம், கர்நாடகாவுல, குஜராத்துல மேயிற ஆடு மாடு எருமை போன்ற கோமாதாகளை விட ஜாப்ரி உசிரு என்ன அத்தன பெரிசா? போகுது விடுங்க சார். இந்தியாவுல, அதுவும் பி.ஜே.பி. சர்க்காரு ஆளுற மாநிலத்துல ஆடு மாடு எருமைக்கெல்லாம் இத்தனை மரியாத இருக்குறது நல்லதுதானே? (பல பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் ஆதரவு பனியா, பார்ப்பனர்களின் முக்கிய தொழிலே பளபளன்னு மினுங்குற கோமாதாவோட தோல்ல செருப்பு, ஷூ தயாரிக்கிறதுதான்கர உண்மையெல்லாம் நாம மறந்திடணும்).
ஒரு விஷயம் தெரியுமா? அந்த குத்புதீன் அன்சாரி நினைவிருக்கா? கண்ணுல தளும்பும் கண்ணீரும் கும்பிடும் கையுமா ஒரு புகைப்படம்? குஜராத்துல வாழ அந்த முஸ்லீம் பயலுக்கு என்ன தகுதி உண்டு? கபர்தார்!
மேற்கு வங்காளத்துக்கு போய் ரெண்டு வருஷம் அடைக்கலம் புகுந்தாரு. அப்புடி கேவலப்பட்ட மேற்கு வங்காளத்துல ரத்தன் டாடா மாதிரி கனவான்கள், மனிதாபிமானிகள் இருக்க முடியுமா, இல்ல இருக்கலாமா? அதுனால அவரு என்ன செஞ்சாரு? தன்னோட கார் பேக்டரிய குஜராத்துக்கு மாத்தினாரு, நியாயம்தானே? சரி சரி, அங்க எதோ ஆம்புலன்சு சத்தம் கேக்குது, உள்ள ஏதாச்சும் நாயோ எருமையோ கால்ல முள்ளுக் குத்தி கிடக்கும், ட்ராபிக்க சீர்படுத்துங்கப்பா, வேகமா ஆப்பரேசன் தியேட்டருக்கு போகணும்














ஞாயிறு, செப்டம்பர் 11, 2011

பாரதி Vs பெரியார்


facebook- ல் நண்பர்  தாமஸ் அலெக்ஸ் ராஜின் பக்கத்தில் அவர் பதிவிட்டதும், எனது பதிலும் இங்கு...

ஆனந்த விகடன் கேள்வி பதில் (கே.பாலசந்தர் பதில்கள் )

கேள்வி : பொதுவாக, பெண் விடுதலை பேசும் உங்கள் படங்களில் பாரதியாரையும் அவரது பாடல்களையும் அதிகம் பயன்படுத்தி இருகிறீர்கள் . பாரதியாரை விட தீவிரமாகப் பெண்ணியம் பேசியவர் பெரியார். ஆனால் உங்கள் பெண்ணிய படங்களில் ஏன் பெரியாரைப் பற்றிய சித்தரிப்புகள் இல்லை?

பதில் : ஒரு வேலை பெரியார் பாடல்கள் எழுதி இருந்தால் பயன்படுத்தி இருப்பேனோ?பெரியாருக்கு முன்பே பாரதி பிரந்துவிட்டதாலும் அவருடைய பெண்ணியக் கருத்துக்களில் பாரம்பரியத்தின் நல்ல அமசங்களும் புதுமையின் அவசியமும் சேர்ந்து இருந்ததாலும் , அதுவே எனக்குப் போதுமானதாக இறந்தது!.

இங்கு ஒரு தகவல் :

பெரியார் - 17 September 1879(1879-09-17) - 24 December 1973(1973-12-24)

பாரதி - December 11, 1882(1882-12-11) - September 11, 1921(1921-09-11)



1) முதலில் கேள்வியே தப்பு! பாலச்சந்தர் படத்தில் பெண் விடுதலை என்று என்றைக்கு பேசினார்? 'பெண் விடுதலை' என்று வார்த்தைகளில் சில பாத்திரங்கள் பேசுவது பெண் விடுதலை ஆகாது. மனதில் உறுதி வேண்டும் படத்தில் அந்தக் காட்சி ஞாபகம் உள்ளதா? நர்சுகள் எல்லாம் திரண்டு வருவார்களாம், சில கேள்விகள் கேட்பார்களாம், அதன் பின் மற்ற நர்சுகள் எல்லாம் போன பின் சுஹாசினியும் அந்த எழுத்தாளரும் 'கண்ணா வருவா' என்று மண்டபங்களில் நடனமாட....! ஒரே கூத்து போங்கள்! இவரது படங்களில் பெண் விடுதலை என்பது இதுவரை சின்னபுள்ள தனமாகத்தான் (அல்லது கால்வேக்காடு) காட்டப்படுள்ளது.
2) பெரியார் பெண்விடுதலையை இரண்டாவதாகத்தான் பேசினார். முதலில் அவர் தெளிவாக நம் பெண்களிடம் சொன்னது 'பெண்ணே! நீ அடிமையாக இருக்கின்றாய்! தெரியவில்லையா? நீ குடும்பத்துக்குள்ளும் சமுதாயத்துக்குள்ளும் அடிமையாக இருக்கின்றாய், புரியவில்லையா?' என்று முதலில் பெண்ணடிமைத்தனத்தையும் அதற்குக் காரணமான ஆணாதிக்கத்தையும் கேடுகெட்ட இந்துமதத்தின் வர்ணாசிரம, பார்ப்பனீய தத்துவங்களோடு இணைத்து பேசினார், அப்படித்தான் பேசவும் வேண்டியிருக்கும் . பெரியார் அதன் பின்பே பெண் விடுதலை பற்றி பேசுகின்றார். இஸ்லாமும் கிறித்துவமும் கணவனை இழந்த பெண்கள் மறுமணம் செய்து கொள்ள உரிமை கொடுத்துள்ளன, இஸ்லாம் ஒரு படி மேலே சென்று குடும்ப வாழ்க்கை ஆணுக்கும் பெண்ணுக்கும் தேவை என்று வலியுறுத்தவே செய்கின்றது. ஆனால் கணவனை இழந்த இந்து மதப் பெண்கள், குறிப்பாக பிராமண குடும்பத்துப் பெண்கள் மொட்டை அடிக்கப் பட்டு, வீட்டின் ஒரு இருட்டு மூலையில் தள்ளப்படும் அவலத்தை பாலச்சந்தர் பேச முற்படுவார் எனில், இது குறித்து பெரியாரின் கருத்துக்களை பேச வேண்டியிருக்கும், வருணாசிரம், பார்பனீயம்...என சாக்கடைகளைப் பற்றி பேசவேண்டிய கட்டாயம் ஏற்படும், பாலச்சந்தர் அப்படியான விசயங்களை பேசிவிடுவாரா என்ன?
3) பாரதியாரை விடவும் பெரியார்தான் பெண்ணியம், பெண் விடுதலை, உரிமை குறித்து அதிகம் பேசினார் என்பது உண்மை. எனவேதான் அத்தகைய பெரியாரின் குரல் நம் வீட்டு பெண்கள் காதில் விழுந்து விடக்கூடாது என்பதில் நம் ஆண்கள் மிக கவனமாக எச்சரிக்கையாக இருந்தார்கள், இருக்கின்றார்கள். அதற்கு அவர்கள், குறிப்பாக பார்ப்பனீயர்கள் கண்டுபிடித்த வழிதான், நம் சமுதாயப் பெண்களை எளிதில் கோபமுறச் செய்யும் 'பெரியாரா! அவரு சாமி சிலைய ஓடச்சாரு, புள்ளையாரு சிலைக்கு செருப்பு மாலை போட்டாரு' போன்ற பிரச்சாரங்களை வீட்டுக்குள்ளேயே பரப்பியதும், பெரியார் என்றாலே கடவுள் வெறுப்பாளர், மறுப்பாளர் என்ற ஒற்றை முகத்தை மட்டுமே நம் பெண்களுக்கு காட்டியதும். இதற்கு பாலச்சந்தரும் விதிவிலக்கல்ல. (பெரியாரின் பிறந்த தினம் தெரியாமல் இருப்பது ஒன்றும் பெரிய குற்றம் அல்ல, ஆனால் பெரியாரின் வரலாறும் தெரியாமல் பாரதியாரின் வரலாறும் தெரியாமல் அரைவேக்காடாய் இருப்பதுதான் குற்றம். அவரது பல படங்களும் அப்படித்தான், ஏதோ பெரிய பிரச்னையை பேச வருவது போல் தொடங்குவார், முடிக்க தெரியாமல் திணறுவார்).


மனிதம் காலி...மிருகம் மீதி...பாகம் 2


மனிதம் காலி...மிருகம் மீதி...பாகம் 2





(பொடா, தடா, அடாபுடா போன்ற சட்டங்களின் கீழ்ஏராளமான முஸ்லிம் இளைஞர்களை விசாரணை ஏதும் இன்றி வருடக்கணக்காய்சிறையில் அடைத்து மனநோயாளி களாக்கியபோதும் கூட மாண்புமிகு நீதிமன்றங்கள்பதட்டம் ஏதுமின்றி அமைதியாகத்தான் இருக்கின்றன.அரசு எந்தி ரமோ ஒரு நட்டு, போல்ட்டு, ஸ்க்ரூ கூட கழன்றுவிடாமல் எப்போதும்போல்கழுவப்படாத சிமெண்டு கலவை மெசின் போல சுழன்றுகொண்டேதான் இருக்கின்றது)



வெளிப்புறக்காட்சிகள், ஆடம்பரமான செட்டுக்கள், பாடல் போன்றவற்றைமிகக்கவனமாகத் தவிர்த்து, தமது இந்துத் துவா அரசியலை சீனுவாச ராமானுஜன்என்னும் பாத்திரம் வாயிலாக வெளிப்படுத்துவது என்ற ஒரே நோக்கில், வசனங் களுக்குமட்டுமே முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள்.


சீனுவாசன் காட்சிப்படுத்தப்படும் விதம் மிகமிக கவனமாகக் கையாளப்பட்டுள்ளது.நாயகன் காலையில் காய்கறி வாங்க வெளியே வந்தவன், மாலை ஆறுமணிக்குள் தனதுதிட் டத்தை நிகழ்த்திவிட்டு பதட்டம் ஏதும் இன்றி மிக சாதாரண மனிதனாக வீடுதிரும்புகின்றான். முதல் காட்சியில் அவனது இரண்டுகைகளிலும் பைகள் உள்ளன;பைகள் நிறைய பல சரக்கு, காய்கறிகள். அவனுடைய கால இலக்கான மாலை ஆறுமணிக்கு வீடு திரும்பும்போது அதே பைகள். பதட்டம் இல்லாத நிதானமான நடவடிக்கைககள். மிகமிக அற்புத மான உத்தி. "லவுகீக வாழ்வில் வேலைக்குப்போவது,கடைக்குப்போவது, சாப்பிடுவது, மலஜலம் கழிப்பது, துணி துவைப்பது" போன்றஅன்றாடக் கடமைகளைப் போலவே அல்லது அக்கடமைகளில் ஒன்றாகவே சமூகத்தை'தூய்மை'ப்படுத்துவதும் ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமை என்று அந்தக்காய்கறிப்பைகளும் மாலை ஆறு மணிக்கு வீடுதிரும்பும் ஒரு சாதாரண ஊழியனின்முகபாவ மும் பார்வையாளருக்கு போதிக்கின்றன. மூன்றுபேரை வெடிவைத்துக்கொன்ற பின்னும், ஒரு 'தூய்மை'ப்படுத்து பவன் எந்தவிதமான பதட்டமும் இன்றிநிதானமாக இருக்க வேண்டும் என்று நீரஜ் பாண்டேயும் கமலஹாசனும் நமக்குசொல்கின்றார்கள். கொலம்பஸ், ஹிட்லர், கோட்சே, அத்வானி, மோடி, ஜார்ஜ் புஷ்...எனவரலாறு நெடுகிலும் 'தூய்மை'ப்படுத்தப் புறப்பட்டவர்கள் இப்படித்தான் பதட்டமின்றிஇருந்தார்கள், இருக்கின்றார்கள்.


ஆயிரக்கணக்கான அரவாக் இன பழங்குடிகளைத் தீயில் இட்டு எரித்த கொலம்பசும்,யூதர்களை லட்சக்கணக்கில் சாக டித்த ஹிட்லரும், அரபுப்பிராந்தியத்திலும் இராக்கிலும்ஆப்கனிலும் ஒரு நூற்றாண்டாக அமெரிக்காவும் அதன் சகாக் களும் இப்படித்தான்பதட்டம் ஏதுமின்றி மனிதப்படு கொலையை செய்துகொண்டே இருக்கிறார்கள். காந்தியாரை சுட்டு வீழ்த்தியபோதும் கோட்சேயும் அவனது சகாக் களான வீரசவர்க்கார்கும்பலும் பதட்டமின்றி அமைதியாகத் தான் இருந்தார்கள். அயோத்தி, ஒரிசா, குஜராத்,பிஹார், மும்பை, மாலேகான், ஹைதராபாத், ராஜஸ்தான், தென் காசி, குல்பர்க்சொசைட்டி ஆகிய இடங்களில் முஸ்லிம், கிறித்துவ மக்களை உயிரோடு கொளுத்தியும்குரல்வளை களை அறுத்த போதும், முஸ்லிம்-கிறித்துவப் பெண்களை வல்லுறவுசெய்தபோதும் நிர்வாணமாக ஊர்வலம் வரச் செய்தபோதும் அவர்கள்பதட்டமின்றித்தான் இருந்தார்கள், நிதானமாக 'தூய்மை'ப்படுத்தினார்கள். ஸ்டெயின்ஸ்பாதிரி யாரையும் அவரது இரண்டு மகன்களையும் ஜீப்பில் வைத்துக் கொளுத்தி'தூய்மை'ப்படுத்தியபோதும், சொரா புதீன் ஷேக், இஷ்ரத் ஜெஹான் போன்றஇசுலாமியக்குப்பை களை போலி என்கவுன்டர்களில் சுட்டு வீழ்த்தியபோதும்பதட்டமின்றிதான் இருந்தார்கள்.  'வாட்டர்' படப்பிடிப்பின் போது மீராநாயரையும் அவரதுகுழுவினரையும் கங்கைக் கரையில் ஓடஓட விரட்டியபோதும் பதட்டம் இன்றிதான்இருந்தார்கள்.


மீராநாயரை விரட்டிவிட்டு, கங்கையிலும் காசியிலும் மொட்டை அடித்து தெருவில்அநாதைகளாகவும் விபச்சாரிகளாகவும் விரட்டப்பட்ட இந்து மதப்பெண்களின்'புனித'த்தைக் காப்பாற்றினார்கள். குஜராத்தில் சாயாஜி பல்கலைக்கழக மாணவர்சந்திரசேகரையும், பேராசியர் பணிக்கரையும் விரட்டி அடித்து சிறையில் தள்ளியபோதும், 94 வயதாகும் ஓவியர் எம்.எப்.ஹுசேனை அவரது வீடு புகுந்து தாக்கி அவரைவெளிநாட்டுக்குத் துரத்தி அடித்த போது, கர்நாடகாவில் இளம்பெண்களை அடித்துநொறுக்கி அவமதித்து 'பாரதப் பண்பாட்டை'க் கட்டிக்காத்தபோதும் பதட்டம் இன்றித்தான்இருந்தார்கள். ஆமிர்கானின் 'பானா' திரைப்படத்தை குஜராத்தில் திரையிட்டஅரங்குகளை எல்லாம் அடித்து நொறுக்கி குஜராத்தில் தடை செய்த போதும்பதட்டமின்றி அமைதியாகத்தான் இருந்தார்கள். காஷ்மீரில் முஸ்லீம் பெண்களைவல்லுறவுக்காளாக்கிய போதும், முஸ்லீம் சிறுவர்களை போலி என்கவுன்டரில்சுட்டுக்கொலை செய்து பதவிஉயர்வு பெற்றபோதும் இந்திய ராணுவத்தினர் பதட்டமின்றிநிதானமாகத்தான் இருக்கின் றார்கள். பொடா, தடா, அடாபுடா போன்ற சட்டங்களின் கீழ்ஏராளமான முஸ்லிம் இளைஞர்களை விசாரணை ஏதும் இன்றி வருடக்கணக்காய்சிறையில் அடைத்து மனநோயாளி களாக்கியபோதும் கூட மாண்புமிகு நீதிமன்றங்கள்பதட்டம் ஏதுமின்றி அமைதியாகத்தான் இருக்கின்றன.
அரசு எந்தி ரமோ ஒரு நட்டு, போல்ட்டு, ஸ்க்ரூ கூட கழன்றுவிடாமல் எப்போதும்போல்கழுவப்படாத சிமெண்டு கலவை மெசின் போல சுழன்றுகொண்டேதான் இருக்கின்றது.


கர்ப்பிணிப்பெண்ணின் பிறப்புறுப்பு வழியே கையை நுழைத்து கருப்பைக்குள் இருந்தகருவைக் கலைத்து கரு வறுத்தார்கள் என்று சீனுவாச ராமானுஜன் கண்ணில் நீர் வழியகூறுகின்றான். 'கருவறுத்தார்கள்' என்று இரண்டு முறை கூறுகின்றான். உண்மைதான்!முஸ்லிம் கர்ப்பிணிப் பெண்களைத் தேடி, வயிற்றை சூலாயுதங்களால் கிழித்து, உள்ளேஇருந்த சிசுக்களை தீயில் போட்டு வாட்டிய கொடுமையும் நடந்ததே! எங்கே? குஜராத்தில். செய்தவர்கள் யார்? நரேந்திரமோடியும் போலிசும் சங்பரிவார் கும்பலும் தானே!அல்-காய்தா, இராக், அமெரிக்கா, கத்திரிக்கா, புடலங்கா என்று பேசும் நீரஜ்பாண்டேயோகமலஹாசனோ குஜராத்தில் இந்தக்கொடுமைக்காரர்களைப் பற்றி படம் நெடுகிலும்ஓர்இடத்திலும் குறிப்பாகவோ அடையாளத் தாலோ கூட உணர்த்தாதது ஏன்?அப்புறப்படுத்தப்பட வேண்டிய 'குப்பை'களான அமானுல்லாவும் அவன் சகாக்களும்தான்அவற்றை செய்தார்கள் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டுமா? படம் நெடுகிலும்முஸ்லிம் களை தீவிரவாதிகளாக சித்தரித்துவிட்டு, இந்தக் கொடுமை களைப் பற்றிகண்ணில் நீர்வழியப் பேசும்போது, இவற்றை யும் முஸ்லீம்கள்தான் செய்தார்கள் என்றுபார்வையாளர்கள் புரிந்துகொள்ள வேண்டுமா?


நீரஜ்பாண்டேயும் கமலஹாச னும் யாருக்கு எதிராக, யாருக்கு ஆதரவாகபேசுகின்றார்கள்? படத்தின் தொடக்கக்காட்சியில் பின்னணியில் 'சம்பவாமி யுகே யுகே'என்ற கீதை வசனம் சங்கொலியுடன் ஒலிக்கிறது. அதாவது 'அதர்மம் தலைதூக்கும்போதெல்லாம் ஒவ்வொரு யுகத்திலும் நான் அவதரிப்பேன்' என்று பகவான் ஸ்ரீக்ருஷ்ணர்கீதையில் 'டிக்ளேர்' செய்கிறார். இந்தியாவில் 'இஸ்லாமிய அதர்மக் குப்பைகளை'அகற்ற, பகவான் ஸ்ரீக்ருஷ்ணர் சீனுவாச ராமானுஜன் உருவத்தில் அவதரிக்கின் றார்என்று நீரஜ் பாண்டேயும் கமலஹாசனும் 'டிக்ளேர்' செய் கிறார்கள். படத்தின்இறுதிக்காட்சியில் கமிஷனர் மரார் சொல்கின்றார்: "நடந்தது எல்லாம் நல்லபடியாத்தான்நடந்தது". இதுவும் பகவத்கீதை வசனம்தான். ஆம், பதட்டம் ஏதும் இன்றி இந்துத்துவாதீவிரவாதிகள், முஸ்லிம், கிறித்துவ குப்பைகளை நல்லபடியாகத்தான் 'தூய்மை'ப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.


"இது தேவை இல்லாதது, இடையூறு விளைவிப்பது" என்று முடிவு செய்வதுதூய்மைப்படுத்துபவர் சார்ந்த விசயம். நீரஜ் பாண்டேயும் கமலஹாசனும், 'இந்தியசமூகத்துக்கு இஸ்லா மியக் குப்பைகள் தேவையில்லாதவை, இடையூறு விளைவிப்பவை. இந்தக்குப்பைகளை அப்புறப்படுத்தி சமூகத் தைத்'தூய்மை'ப்படுத்தும்கடமையை கோட்சேயைப் போல், மோடியைப் போல் நிதானமாக, பதட்டமின்றிசெய்யவேண்டும்' என்ற இந்துத்துவா அரசியலை வெட்கம் ஏதுமின்றி 'பாஞ்ச ஜன்ய'சங்கு எடுத்து ஊதுகின்றனர். தனது வர்த்தக லாபங்களுக்காக உலகெங்குமுள்ளஇஸ்லாமியர்களை திட்டமிட்டே 'தீவிரவாதி' களாக ஆக்கும் உலகளாவிய அமெரிக்கபயங்கரவாதமும், வர்த்தக லாபங் களுக்காக இந்திய இஸ்லாமிய மக்களை திட்டமிட்டே'தீவிரவாதி'களாக ஆக்கும் பார்ப்பன, பனியா மேல்சாதி இந்துத்வா தீவிரவாதமும், இந்தஅஜெண்டாவை செயல் படுத்தும் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., காங்கிரஸ் கள்ளக்கூட்டணியும், இந்த மாபெரும் நெட்வொர்க்கின் பிரச்சார ஏஜெண்டுகளாக அச்சு,எலக்ட்ரானிக், திரைப்பட ஊடகங்களும் இயங்குகின்றன. இந்த பிரச் சார அரசியலின்ஒருபகுதியாக சீனுவாச ராமானுஜன் என்ற பெயரில் கமலஹாசன் வீதிக்கு வந்துள்ளார்.


பொதுவாக சமூகத்தில் சுத்தமானவர்கள், முற்போக்கானவர்கள் என்று 'அறியப்பட்ட'வர்களின் அசைவுகள், வார்த்தைகளை பொதுவெளி யில் உள்ள சமூகம் எப்போதும்அவதானித்துக் கொண்டே இருக்கிறது. அவர்கள் கூறும் வார்த்தைகளின் உள்ளே புகுந்துஉண்மையைத் தேடுவதை விட்டுவிட்டு வார்த்தைகளையே உண்மை எனநம்பிவிடுகின்றது. ஒரு அன்றாடக்கூலி இந்தி யனுக்கு ஒவ்வொரு அரிசிமணியும்தக்காளியும் மிக முக்கிய மான விசயங்கள். கமிஷனர் மராரும் சீனுவாச ராமானுஜனும்சந்திக்கின்ற அந்தக் கடைசிக் காட்சி மிக முக்கியமானது. அவனது பையில் இருந்து ஒருதக்காளி தரையில் விழ, மிகக் கவனமாக அதை எடுத்து பையில் போடும் சீனுவாசராமானுஜன் எண்பது விழுக்காடு சாமானிய இந்தியர்களோடு இக்காட்சியில் மிகநெருங்குகின்றான். இப்படி யான ஒரு பொறுப்பான சாமானியக் குடும்பத் தலைவன் படம்நெடுகிலும் பேசிய வார்த்தை களிலும் செய்த செயல்களிலும் நிச்சயம் ஏதோ நியாயம்இருப்பதாக சாமானிய பார்வையாளர் களை முடிவு செய்யத் தூண்டும் இந்த இறுதிக்காட்சி மிக அபாயமானது.


"அமைதிக்காலங்களில்தான் எதிர்கால வகுப்புக் கலவரங்களுக்கான விதைகள்சத்தமின்றித் தூவப் படுகின்றன, ஆனால் நாம் அப்போது சும்மா இருக்கின்றோம்" என்றச.தமிழ்ச்செல்வனின் கவலையை இங்கே பதிவு செய்வது பொருத்தம். ஒருமுற்போக்காளராக, வித்தியாசமான திரைப் படங்களைத் தருகின்றவராகபொதுவெளியில் அறியப்பட்டுள்ள கமலஹாசன், இந்துத்துவா தீவிரவாதத்தில் நியாயம்இருப்பதாக சாமானிய மக்கள் உணரக்கூடிய வகையில் நுட்பமாக ஒரு படத்தை இயக்கிவெளியிட்டுள் ளார். கமலஹாசன் யார் என்பதைக் கேள்வி கேட்க வேண்டிய அவசியம்உள்ளது. வெறுமனே அவர் ஒரு சினிமா வியாபாரி என்பதை நம்பமுடியாது.சீனுவாசராமானுஜன் "நானும் ஒரு தீவிரவாதிதான்" என்று சொல்கின்றான், ஆனால்அவன் பச்சையாக "நான் ஒரு இந்துத்துவா தீவிரவாதிதான்" என்று சொல்லியிருக்கலாம்.முழுக்க நனைஞ்ச பின்னே கோவணம் எதுக்கு? சீனுவாச ராமானுஜன்கோட்சேயைப்போல் ஒருவன், நம்மால் பதற்றமின்றி இருக்க முடியாது.

மனிதம் காலி...மிருகம் மீதி - 1


மனிதம் காலி...மிருகம் மீதி-1
(உன்னைப்போல் ஒருவன் திரைப்படத்துக்கு நான் எழுதிய  விமர்சனம்,  2009 அக்டோபர் 'புதுவிசை'யில் வெளியானது இப்போது பொதுவில்...)


(முதன்முதலாக சுதந்திர இந்தியாவின் நன்கு திட்டமிடப் பட்ட தீவிரவாதத்தாக்குலானது ஒரு தனிநபர் மீதான படு கொலையே, அதை நடத்தியது ஆர்.எஸ்.எஸ்.அதன் இலக்கு மஹாத்மா காந்தியடிகள். படுகொலைக்கு ஒரே ஒரு காரணம் மட்டுமேஇருந்தது: அவர் இந்து-முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தினார். எனவே விடுதலைபெற்ற இந்தியாவின் பயங்கரவாதத்தை1948 ஜனவரி 20லிருந்து பேசத்தொடங்குவதுதான் சரியாக இருக்கும்)


'புதன்கிழமை' என்ற இந்திப்படத்தின் கதாசிரியர் நீரஜ் பாண்டே. இவருக்கு இந்தியசமூகத்தில் கொட்டிக் கிடக் கும் குப்பைகளை சுத்தப்படுத்த வேண்டும் என்ற ஆசை வந்துவிடவே, 'புதன்கிழமை' என்ற விளக்குமாற்றுடன் பம்பாய் ஸ்டுடியோக்களில்அலைந்ததாகவும் ஆனால் இந்த விளக்கு மாற்றை அவ்வளவு எளிதாக யாரும்வாங்கவில்லை என்றும் அவரே ஒரு இணையதள பேட்டியில் சொன்னார். நீரஜ் பாண்டே'குப்பை' என்று குறிப்பிடுவது எது என்பதுதான் விவகாரமே. நீரஜ் பாண்டேயின்விளக்குமாற்றை தமிழ்நாட் டுக்கு இறக்குமதி செய்துள்ளார் கமலஹாசன் இப்போது.படத்தின் பெயர் உன்னைப் போல் ஒருவன்.அல்காய்தா, அமெரிக்கா, ஆப்கன், இராக்,முஷ், புஷ், குஜராத், ஹேமந்த் கார்காரே, மசூத் அசார், காந்தஹார், பெஸ்ட் பேக்கரிஇப்படி படம் நெடுகிலும் சர்ச்சைக்குரிய சொல்லாடல்கள். கதை மொத்தமும் சீனுவாசராமனுஜன் என்ற பாத்திரம் மூலமாக பார்வையாளர்களுக்கு சொல்லப்படுகின்றது. யார்அவன்? இதற்கான பதில் படம் முடியும்போது அவனாலேயே சொல்லப்படுகின்றது.


படத்தின் தொடக்கக் காட்சி செப்-11 அமெரிக்க சம்பவம் பற்றிப் பேசுகிறது - ஒருதொலைக்காட்சி டாக்-ஷோ வடி வில். இந்தியர்களுக்கு பிடிவாதமாக மீடியாக்களால்பகை வர்களாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பாகிஸ்தானின் அதிபர் முஷாரப், ஜார்ஜ்புஷுக்கு அனுதாபம் தெரிவிப்பதாக இக்காட்சி கேலியும் கிண்டலுமாக அனிமேஷன்வடிவில் காட்டப்படுகின்றது.
படம் இப்போது வேறுதிசைக்கு. வீட்டிலிருந்து காய்கறி வாங்கப் புறப்பட்ட சாதாரணஇந்தியக் குடிமகனான சீனு வாச ராமானுஜன், தனது தொழிநுட்ப அறிவைப் பயன் படுத்திசென்னை மாநகர போலீஸ் கமிஷனரான மராருடன் அலைபேசியில் பேசுகின்றான்.  "பெங்களூரிலும் சென்னை யிலும் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள நான்கு தீவிரவாதிகளை மாலை ஆறுமணிக்குள் விடுதலை செய்ய வேண் டும், இல்லையேல்சென்னையில் ஜனநடமாட்டம் அதிகமுள்ள ஆறு இடங்களில் தான் வைத்துள்ளகுண்டுகள் வெடிக்கும்" என்று எச்சரிக்கிறான். சீனுவாச ராமானுஜன் விடுவிக்கசொல்லும் நால்வரில் மூவர் மும்பையிலும் கோவையிலும் குண்டுவெடித்த
முஸ்லிம்கள்; ஒருவன் இந்து, அவன் வெடிமருந்து சப்ளை செய்பவன் மட்டுமே.


உலகளாவிய அல்காய்தா பயங்கரவாதிகள், இந்திய அளவி லான
பயங்கரவாதிகள்-இருவருமே முஸ்லிம்கள் என்று அடுத்தடுத்த இரு காட்சிகளால்பார்வையாளர்களுக்கு அறி விக்கப்பட்டு படம் இந்தக் கருத்தாக்கத்தில் இருந்துவளர்க்கப்படுகின்றது. சீனுவாச ராமானுஜனின் கோரிக்கை தமிழக முதல்வர் வரைபேசப்பட்டு ஒத்துக்கொள்ளப்படுகின்றது. இந்த ஆக்ஷனில் நேரடியாக இறங்குபவர்கள்சேது, ஆரிப் (முஸ்லிம்) ஆகிய இன்ஸ்பெக்டர்கள்."உலகளாவிய பயங்கரவாதிகளாகஇஸ் லாமியர்கள் இருப்பார்கள், ஆனால் உள்ளூரில் கடமை தவ றாத முஸ்லிம்கள்போலிஸாக இருப்பார்கள்" என்ற விஜய காந்த், அர்ஜூன் மோசடி 'நடுநிலை' பேலன்ஸ்வித்தை இங்கேயும் உண்டு. தாமிரபரணி, வாச்சாத்தி, சிதம்பரம் போன்ற பெரியவிசயங்களை எல்லாம், இளகிய மனம் படைத்த தமிழ்ச் சினிமாக்காரர்கள்தாங்கமாட்டார்கள், ஹார்ட் அட்டாக் வந்துவிடக்கூடும். எனவே குறைந்தபட்ச மாக தங்கநாற்கர நெடுஞ்சாலைகளில் கால் கட்டைவிரலை யும் பார்க்க முடியாதளவுக்குப்பெருத்துப்போன தொந்தி யோடு வேர்வை வழிய வழிய நின்றுகொண்டு, வெட்கம் மானம்ஏதுமின்றி லாரி டிரைவர்களிடம் பேரம் பேசும் காக்கி. காக்கிகளின் பகிரங்க
என்கவுண்டர்களைப் பார்க்க தமிழ்ச்சினிமாக்காரர்களை அன்போடு அழைக்கிறோம்,வருக. ஹார்ட்டுக்கு பாதகம் இல்லை.


நான்கு தீவிரவாதிகளும் சீனுவாசன் குறிப்பிடுமிடத்துக்குக் கொண்டுவரப்படும்போது,தீவிரவாதியான அமா னுல்லா, அதிகாரி ஆரிபுடன் பேசும் பேச்சு இது: "ஆரிப் பாய்,பெஸ்ட் பேக்கரி தெரியுமா, பெஸ்ட் பேக்கரி? என் பிள்ளையை அதில் எரித்துசாம்பலாக்கிவிட்டார்கள்" என்று அமானுல்லா சொல் கிறான்.இதனாலேயே அவன்தீவிரவாதி ஆனதாக இக்காட்சி சொல்கிறது.  'நம்ப' ஆளுங்க ஈராக்கிலும்ஆப்கானிஸ்தானி லும் ஓடஓட விரட்டப்படுறாங்க, ஆரிப் பாய்" என்றும்கொதிப்படைகிறான். கமிஷனர் மரார் "நீ யார்? நான்கு பேருக்கும் உனக்கும் என்னதொடர்பு?"- பார்வையாளர் களின் கேள்வியைக் கேட்கிறார். ராமானுஜன் தான் யார் என்பதையும் அல்லது பார்வையாளர்கள் யாராக மாற வேண்டும் என்பதையும் டிக்ளேர்செய்யும் இந்த இடம் முக்கியமா னது:"நான் ஒரு இந்துவாக, முஸ்லீமாக
,கிறித்துவனாக, பவுத்தனாக இருக்கலாம்; ஏன், ஒரு கம்யூனிஸ்டாகவோ
நாத்திகனாகவோகூட இருக்கலாம். நானும் ஒரு தீவிரவாதி தான்". சொல்கிறான்:"இவர்களை ஒழித்தால்தான் இந்திய சமூகம் தூய்மை ஆகும்.
யாரோ நிர்ப்பந்தம் செய்தால் தீவிர வாதிகளை விடுதலை செய்துவிட வேண்டுமா?ஒழித்துக் கட்டிவிடவேண்டும். சமூகத்தை 'தூய்மை'ப்படுத்த வேண்டும். நான் அந்தவேலையைத்தான் செய்கின்றேன். ஒவ்வொரு இந்தியனுக்கும் அந்தக் கடமை உண்டு.ஆனால் யாரும் செய்வதில்லை, யாராவது செய்வார்கள் என்று நான்காத்திருக்கப்போவதில்லை. எனவே நான் செய்கின்றேன்". 


பாரதீய ஜனதா மத்தியில்ஆட்சியில் இருந்த போது மசூத் அசார் என்ற தீவிரவாதியை இந்திய சிறையில் இருந்துவிடுவித்து ஆப்கனின் காந்தஹாருக்கு கொண்டு போய் ஒப்படைத்தார்கள்.தீவிரவாதியுடன் அன்றைய அமைச்சர் ஜஷ்வந்த் சிங்கும் பயணம் போனார். மசூத்தைவிடுவிக்க இந்திய அரசை நிர்ப்பந்திக்கும் வகையில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தைபயணியருடன் அவர்கள் கடத்திக் கொண்டு போனார்கள். இந்த நிகழ்வையே சீனுவாசராமானுஜன் நினைவூட்டுகிறான். உன்னைப்போல் ஒருவனின் கதாபாத்திரங்கள்தீவிரவாதி கள். இவர்களை ஒழித்துவிட்டால் தீவிரவாதம் ஒழிந்து விடும் என்று சீனுவாசராமானுஜன் தத்துவம் பேசுகிறான். நோயாளியை ஒழித்துவிட்டால் நோய் ஒழிந்துவிடும்என்ற இந்தக் குரலை ஜெர்மனியில் கேட்டிருக்கின்றோம்.


இஸ்லாமிய சமூகத்துக்கு எதிராக ஒரு சர்வதேசிய அரசியலைத் தொடங்கி கட்டமைக்கவேண்டிய கட்டாயம், குறிப்பாக 1908இல் இரானில் முதன் முதலாக பெட்ரோலியஎண்ணெய்வளம் கண்டுபிடிக்கப்பட்ட பின் அமெரிக்காவால் தொடங்கிவைக்கப்பட்டதுஎன்ற புள்ளியிலிருந்து பயணித் தால் உலகளாவிய பயங்கர வாதத்தின் வேரைகண்டடைய முடியும். இந்த சர்வதேச அரசியல் நோக்கத்தை நிறைவேற் றும் திட்டத்தின்ஒரு பகுதியாக, அதை நோக்கி நகர்த்திச் செல்லும் இயக்கக்கூறுகளாக உள்ளூர்அரசியல் இருக்கிறது. உண்மை இவ்வாறு இருக்க, கமலஹாசன் மையப்படுத்து கிறஇந்திய அளவிலான தீவிரவாதத்தை தனித்துப் பார்க்க முடியாது. உள்ளூர் தீவிரவாதம்மேற்படி சர்வதேச தீவிர வாதத்தின் உள்நோக்க அரசியலுடன் பின்னிப் பிணைந்தது.


உலகின் மொத்த பெட்ரோலிய வளத்தின் 80% அரபுப் பிராந் தியத்தில் புதைந்துள்ளது.இந்த உண்மையை உணர்ந்திடாத அரபு ஷேக்குகளும் சுல்தான்களும் அமீர்களும் அந்தஅளப்பரிய செல்வத்தை சுரண்டிப்போக அமெரிக்க, ஐரோப்பிய, பிரிட்டிஷ் மேற்கத்தியநாடுகளின் எண்ணெய்க் கம்பெனிகளை கட்டுப்பாடின்றி அனுமதித்தனர் என்பது தான்துயரமான வேடிக்கை.  இந்தக் கம்பெனிகள் பெயருக்கு ஒரு விலையைக் கொடுத்து விட்டு (ஒரு பேரலுக்குமுக்கால் டாலர்!), உலகெங்கும் கொள்ளை லாபத் துக்கு எண்ணெயை விற்று கோடிக்கணக்கில் டாலர்களைக் குவித்தன. ஆனால் இந்த செல்வத் தின் பிறப்பிடமானஅரபுநாடுகளோ சமூக-பொருளாதார வாழ்வில் பின் தங்கி ஏழைகளாக இருந்தன என்பதைஇப்போது நம்புவது கடினமே.


இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகளாவிய தேசிய உணர் வும் சோசலிசத்தின்எழுச்சியும் அரபுநாடுகளிலும் தேசிய விடுதலை உணர்வுகளைத் தூண்டியது. இரானில்இந்த எழுச்சி மேலோங்கியபோது பெட்ரோலிய வயல்கள் தேசிய மயமாக்கப்பட்டன.இரான் தேசியத்தலைவர் மொசாதிக் இதற்கு தலைமை தாங்கினார். தமது கல்லாப்பெட்டியின் கொழுத்தபகுதியில் அடிவிழவே அமெரிக்க பிரிட்டிஷ் ஏகாதிபத்தியங்கள்இந்த தேசியமயமாக்கலுக்கு தடைகளை ஏற்படுத்தின. இரானின் சுதந்திரமானஎண்ணெய் வர்த்த கத்தை கவிழ்த்துவிட பலவகையிலும் ஈனச் செயல்களில் இறங்கினர்.பிரிட்டிஷ் கப்பல்கள் இரானின் எண்ணெய்க் கப்பல்களை கடலில் தடுத்தன.உச்சகட்டமாக மொசாதிக் கின் ஆட்சியைக் கவிழ்த்து அவரையும் கொலை செய்தனர்.தனது கைக்கூலியான மன்னன் ஷாவின் பொம்மை அரசை அமெரிக்கா நிறுவியது.ஒருகட்டத்தில் இவனும் தேசிய இயக்கத்தின் பேரெழுச்சி அலையில் குடும்பத்தோடுஅமெரிக்காவுக்கு ஓடினான். ஏகாதிபத்திய கெடுபிடிகள் அனைத்தையும் மீறி அரபுதேசியம் வளர்ந்தது. இரானைத் தொடர்ந்து அரபுநாடுகள் அனைத்தும் தமதுஎண்ணெய்வளத்தை தேசியச்சொத்தாக பிரகடனம் செய்தன.
வழக்கம் போலவே அமெரிக்காவும் அதன் சக கொள்ளையர்களும் இந்த நாடுகளைதொடர்ந்து மிரட்டிக்கொண்டே இருந்தனர். அன்றிருந்த சோவியத் ரஷ்யா மட்டுமேஅரபுநாடுகளுக்கு துணையாக நின்றது. ஒரு பேரலுக்கு கேவலம் முக்கால் டாலர் என்றநிலை மாறி 30 டாலருக்கு அரபுநாடுகள் விற்கத் தொடங்கின. எண்ணெய் ஏற்றுமதிநாடுகளின் கூட்டமைப்பான ஓபெக் (OPEC) உருவாகி எண்ணெய் விலையைநிர்ணயிக்கும் அதிகாரத்தை கையில் எடுத்தது. வரலாற்றில் முதல்முறையாக அரபு மண்ணின் மக்கள் தமது சொந்த செல்வத்தின் மதிப்பை உணர்ந்து அனுபவித்தனர். செல்வம்குவிந்தது, ஏகாதிபத்தியத்தின் கல்லாப்பெட்டி அரசியலில் பெரும் அடி விழுந்தது.தொழில் வளர்ச்சியில் முன்னேறிச் சென்று கொண்டிருந்த ஏகாதிபத்தியங்களும் ஐரோப்பிய நாடுகளும் அரபுநாடுகள் சொன்ன விலைக்கு எண்ணெயை வாங்கும்நிர்ப்பந்தத்துக்கு ஆளாயின. அரபுநாடுகள் இதன் பின்னரே இன்று நாம் காணும்செழிப்புநிலையை அடைந்தன.


ஏகாதிபத்தியங்களின் பிறவிக்குணமான பிரித்தாளும் சூழ்ச்சியில் அமெரிக்காஇறங்கியது. இரான்-இராக் மோதல், எகிப்து-சிரியா மோதல், சிரியா-லெபனான் போர்,லெபனா னில் கிறித்துவர்-முஸ்லிமிடையே கலவரங்கள், இஸ்ரேல்- பாலஸ்தீனமோதல், குவைத், இராக், இதர அரபுநாடு களுக்கு இடையே தொடர்ந்து போரும்பதட்டமும் என்பதன் பின்னணியில் அமெரிக்காவின் சூழ்ச்சி அரசியலே நிலையாகஇருக்கின்றது. இத்தகைய சூழ்ச்சி அரசியலின் பின்னணியில் அரபுப் பிராந் தியத்தில்தனக்கு ஒரு வேட்டைநாயாகத்தான் இஸ்ரேல் என்ற நாட்டை அமெரிக்கா நிறுவியது. தியோடர் ஹெர்ஸ் என்ப வரின் யூத இனவெறிக் கோட்பாடான ஜியோனிச சித்தாந்தத்தின் அடிப்படையில், இஸ்லாமியரது நாடான பாலஸ்தீனம் 1948ல் அமெரிக்கஆதரவுடன் பிளக்கப்பட்டு இஸ்ரேல் என்ற புதிய தேசம் 'உருவானதாக'அறிவிக்கப்பட்டது! பாலஸ்தீன மக்களோ ஜோர்டான், சிரியா, லெபனான், எகிப்து ஆகியநாடுகளில் தஞ்சம் புகுந்தனர். 1948 முதல் 1956,1967, 1973, 1982 என தொடர்ந்து எகிப்து,சிரியா, ஜோர்டான், லெப னான், சினாய், கோலன் குன்றுகள், பாலஸ்தீனத்தின் காசா,மேற்குக்கரை என அரபுப்பிராந்தியத்தில் குண்டுவீச்சுக்களை இன்றளவும்நடத்திக்கொண்டு இஸ்ரேல் திரிவதை வரலாறு நிரூபிக்கிறது.


எகிப்தில் நெப்போலியன் தொடங்கி, அல்ஜீ ரியா, லிபியா, இரான், இராக், லிபியா,பாலஸ்தீனம் லெபனான் என அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் ஒரு நூற்றாண்டுஆக்கிரமிப்பு தனியே எழுதப்பட வேண்டியது. கடைசியாக பேரழிவு ஆயுதங்களிருப்பதாகபொய் சொல்லி இராக்கில் நுழைந்த அமெரிக்கப்படைகளின் துணையோடு பாக்தாத்தின்வரலாற்று ஆவணக்காப்பகம், தேசிய அருங் காட்சியகம், தேசிய நூலகம் ஆகியவை திட்டமிட்டு சூறை யாடப்பட்டு எரிக்கப்பட்டன. தொன்மையான மெசபடோ மியா, சுமேரியா, அக்காடியா, பாபிலோனியா, அசிரியா, சால்டியா, பெர்ஷியா (இரான்), கிரிஸ்,ரோம், அரபு வம்சங் கள் ஆகிய நாகரீக, கலாச்சார சின்னங்களின் மிகப்பெரும் அரியசேமிப்புக்களுடன், உலகின் முதல் சட்ட விதிகளின் தொகுப்பு என்று கருதப்படும்ஹமுராபி சட்ட வரைவுகளின் அசல் சுவடிகள், உலகின் ஆதிப்பழமையான எழுத்து வடிவங்களான குனிபார்ம் எழுத்துச்சுவடிகள், பாடல்கள், வாய் பாடுகள், சுடுகளி மண்சுவடிகள்..என இந்த அருங்காட்சி யகத்தில் இருந்த செல்வங்களின் மதிப்புஅளவிடற்கரியது.
இராக்கிலும் ஆப்கனிலும் நுழைவதற்கான திட்டம் ஏற்க னவே அமெரிக்காவிடம்இருந்ததுதான்.   "அரபுப் பிராந்தியத் தின் எண்ணெய் வளத்தைக் கபளீகரம் செய்வது,எடுக்கின்ற எண்ணெயை எந்த வழியாக தனது கட்டுப்பாட்டு எல்லைக் குள் கொண்டுவந்து ஸ்டாக் செய்வது, விற்பது" என்ற இரு அஜெண்டாக்களின் மீதுதான் இராக்+ஆப்கன் (உள்ளே நுழைவதற்கான) போர் தொடங்கப் பட்டது.


வளைகுடா நாடுகளின் எண்ணெய், எரிவாயுவை ரஷ்யா வழி யாகவோ இரான் வழியாகபாரசீக வளைகுடாவுக்கு தரை மார்க்கமாகவோ எடுத்துவர அமெரிக்கா விரும்பவில்லை.ஆனால் மூன்று மாற்றுத் திட்டங்களை அது வைத்திருந்தது. அஜர்பைஜான், ஜார்ஜியா,துருக்கி வழியாக மேற்கே மத்திய தரைக்கடல் பகுதிக்குக் கொண்டுவருவது; அல்லதுகஜக்ஸ் தான், சீனா வழியாக கிழக்கே பசிபிக் பகுதிக்கு கொண்டு வருவது; ஆனால் துர்க்மேனிஸ்தான் தொடங்கி மேற்கு ஆப்கன், பாகிஸ்தான் வழியே இந்தியப்பெருங்கடல் வந்த டையும் மூன்றாவது வழியே உகந்தது என்று அமெரிக்கா முடிவுசெய்தது. எனில் தனது கட்டுப் பாட்டுக்குட்பட்ட பிரதேசமாக ஆப்கனை மாற்றியமைக்கவேண்டும். அதற்கான ஒரு தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த போதுதான்அமெரிக்காவால் கொம்பு சீவி வளர்க்கப்பட்ட பின்-லேடனும் அல்-காய்தாவும் உலகவர்த்தக மையத்தின் மீது தாக்குதல் நடத்தி ஒரு வழியைத் திறந்துவிட்டார்கள்.
இராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக பொய்க் காரணத்தைப் பரப்பி அமெரிக்காஇராக்கில் நுழைந்தது, சதாம் உசேனையும் கொன்றது, இராக்கில் எண்ணெய் எடுக்கும்தனது நோக்கத்தை நிறைவேற்றிக்கொண்டது. அல்-காய் தாவை ஒழிப்பதாகச் சொல்லிஆப்கனில் நுழைந்தது. 9/11 தாக்குதலை அமெரிக்கா முன்கூட்டியே அறிந்திருந்தும்,தனது மக்கள் ஆயிரக்கணக்கில் சாவார்கள் என்று தெரிந்திருந் தும் தாக்குதலைஅனுமதித்தது. காரணம் எண்ணெய் அஜெண்டாதான். இதற்கான ஆதாரங்கள்இணையதளங் களில் கொட்டிக் கிடக்கின்றன. அரபுப் பிராந்திய இஸ்லாமிய மக்களின்கோபத்தைத் தூண்ட முக்கிய காரணமாக இருப்பது, தங்கள் மண்ணில் உள்ள பெட்ரோலியத்தை அமெரிக்க, ஐரோப்பிய ஆக்கிரமிப்பா ளர்கள், சுரண்டி எடுப்பதுமட்டுமல்ல. தங்களின் நீண்ட பாரம்பரிய மத, கலாச்சார வாழ்வையும் பாரம்பரிய அடையாளச் சின்னங்களையும் அழித்ததை, தங்கள் மதத்தின், கலாச்சாரத்தின் மீதானபடையெடுப்பாக, இன அழிப்பா கவே அவர்கள் பார்க்கிறார்கள்.


அமெரிக்காவிலும் அதன் சகாக்களின் மண்ணிலும் இருக்கின்ற பெட்ரோலிய வளம்வெகுவிரைவில் வற்றிவிடும் என்று கண்டறியப்பட்டுள்ள முக்கியமான பின்னணியில்மட்டுமே அரபுப்பிராந்தியத்தில் அமெரிக்க, பிரிட்டிஷ் ஏகா திபத்தியங்களின் ஆர்வம்,ஆதிக்கம், கெடுபிடி அரசியல், 'பயங்கரவாதத்திற்கு எதிரான போர்' ஆகியவற்றை ஆய்வுசெய்யவேண்டும். உலகின் மிகப்பெரும்பான்மை பெட்ரோலியவள நாடுகளை தனதுகாலடியின்கீழ் கொண்டு வருவதன் மூலம், உலக அரசியல்-பொருளாதாரத்தின்அச்சையே தன்னால் கட்டுப்படுத்த முடியும், தான் விரும் பிய திசைக்கு நகர்த்த முடியும்என்ற ஏகாதிபத்திய அரசியல் தான் அமெரிக்காவின் நவீனகால கெடுபிடி அரசியலின்மையப்புள்ளி. இந்த மையப்புள்ளியில் இருந்து பிறழ்ந்து "அரபுப்பிராந்தியஅரசியல்+அமெரிக்கா+உலகளாவிய பயங்கரவாதம்" என்ற அரசியலை ஆய்வு செய்வது,தன்னை ஏமாற்றிக்கொள்வது அல்லது பிறரை ஏமாற்றுவது ஆகிய இரண்டில்ஒன்றாகவே இருக்கும்.


இந்தியாவின் பயங்கரவாதம் உண்மையில் 1947 ஆகஸ்ட் 15க்கு முன்னதாகவேதொடங்கிவிட்டது. அதன் உச்சகட் டம் தான் பிவினையின் போது வடக்கு,வடமேற்குப்பகுதி களிலும் பஞ்சாபிலும், கல்கத்தாவிலும் நடந்த கொடூரங்கள். இந்தப்படுகொலைகளில் இந்து, முஸ் லிம், சீக்கியர் என்று அனைத்துத்தரப்பாரும்ஈடுபட்டிருந்தார்கள். இந்த வகுப்புக் கலவரங்களில் ஆர்.எஸ்.எஸ்.இன் கைகள்இருந்ததை அதன் வரலாறு அம்பலப்படுத்துகிறது. ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., பஜ்ரங்தள்,விஷ்வ இந்து பரிஷத், சிவசேனா போன்ற பயங்கரவாத இயக்கங்கள்தான் விடுதலைபெற்ற இந்தியா வில் தீவிர வாதத்தின் ஊற்றுக்கண்ணாக இருக்கின்றன என்றஉண்மையைப் பேசாமல் இந்தியாவில் பயங்கரவாதம் பற்றிய விவாதம் முழுமைபெறாது. முதன்முதலாக சுதந்திர இந்தியாவின் நன்கு திட்டமிடப் பட்ட தீவிரவாதத்தாக்குலானது ஒரு தனிநபர் மீதான படு கொலையே, அதை நடத்தியது ஆர்.எஸ்.எஸ்.அதன் இலக்கு மஹாத்மா காந்தியடிகள். படுகொலைக்கு ஒரே ஒரு காரணம் மட்டுமேஇருந்தது: அவர் இந்து-முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தினார். எனவே விடுதலைபெற்ற இந்தியாவின் பயங்கரவாதத்தை1948 ஜனவரி 20லிருந்து பேசத்தொடங்குவதுதான் சரியாக இருக்கும்.


ஆனால் அவர் களே எதிர்பாராத விதமாக, அவர்கள் திட்டத்தில் ஏற்பட்ட கோளாறால்அன்றைய முயற்சி வெறும் வெடிகுண்டு வீச்சோடு முடிந்தது, காந்தியார் இன்னும் ஒருபத்துநாள் உயிரோடு இருந்தார். ஜனவரி 30 அன்று கோட்சே அடுத்த முயற்சியில்காரியத்தை நிறைவேற்றினான். அன்றைக்கு கோட்சே செய்திருந்த ஆண்குறித்தோல்நீக்கமும் (இஸ் லாமிய மதச்சடங்கு), கையில் குத்தியிருந்த இஸ்மாயில் என்றமுஸ்லிம் பெயரும் எதிர்கால இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். என்ன செய்யப் போகிறதுஎன்பதை அறுதி யிட்டுச் சொல்வனவாக இருந்தன. அவர்களது நோக்கம்: சர்வதேசஅளவில் கவனத்தைப் பெற்ற, காலமெல்லாம் இந்து-முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்திய தேசப்பிதா என்று அழைக்கப்பட்டவரை ஒரு முஸ்லிம் கொன்றுவிட் டான்என்ற செய்தியைப் பரப்புவதன் மூலம், இந்தியாவில் மட்டுமல்ல, சர்வதேச அளவில்முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வைத் தூண்டிவிடுவது, அனைத்து மத மக்களையும் 'முஸ்லிம் பயங்கரவாதத்துக்கு' எதிராகத் தூண்டி விடுவது.மருத்துவமனையின் உள்ளேயிருந்து ஒருவன் ஓடி வந்து, "காந்தியை முஸ்லிம்ஒருவன் சுட்டுவிட்டான்" என்று கூச்சல் போட்டதும், அவனை ஜவஹர்லால் நேரு பற்றிஇழுத்து கன்னத்தில் அறைந்து "முட்டாள், காந்தியை சுட்டது ஒரு இந்து" என்றுசொன்னதும், தொடர்ந்து வானொலியில் அதை அறிவித்து மிகப்பெரும் மதக்கலவரத்தை தவிர்த்ததும் வரலாற்று உண்மை.  'ஹே ராம்' படத்தில் இக்காட்சி இடம்பெற்றதை முன்னாள் சாஹேத் ராமும் இன்னாள் சீனுவாச ராமானுஜனுமான கமலஹாசனுக்கு நினைவூட்டுவது நமது கடமை.
பயங்கரவாதத்தை, அதுவும் இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டிவிட்டுத்தான்மறுவேலை என்று கங்கணம் கட்டிக்கொண்டு ஊளையிடும் ஊடகங்களும் ஆட்சியாளர்களும்கூட 1948 ஜனவரி 20, 30 பற்றியோ கோட்சேவின் முஸ்லிம் வேஷம் பற்றியோபேசாமல் மிக ஜாக்கிரதையாக தவிர்த்தே வந்திருக்கின்றார்கள். இனிமேலும்பேசமாட்டார் கள். நமது பாடப்புத்தகங்களில் கூட "காந்தியாரை ஒருவன் சுட்டான்" என்ற ஒற்றைவரியோடு காந்தியின் வரலாறு அல்லது கதை முடிந்து போவது தற்செயலானஒன்றல்ல. விடுதலை பெற்ற இந்தியாவின் மிகப்பெரும் திட்டமிடப் பட்ட,ஒருங்கிணைக்கப்பட்ட பயங்கரவாதமாக 1992 டிசம் பர் 6 அயோத்தி பாபர் மசூதி இடிப்பும்அதனைத் தொடர்ந்த முஸ்லிம்களுக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. கொலைவெறித் தாண்டவமும், எதிர்வினையாக நாடெங்கும் நடந்த குண்டுவெடிப்புக்களும்.இந்திய ஜனநாயகத்தின் தூண்கள், உத்திரங்கள், ஜன்னல்கம்பிகள் என்று வர்ணிக்கப்படும் இந்திய ஊடகங்கள், 1992இக்குப் பிறகு, (தூர்தர்ஷன், ஆல் இந்தியாரேடியோ போன்ற அரசு ஊடகங்கள் உட்பட) அயோத்தி பற்றிக் குறிப்பிடும்போது'சர்ச்சைக்குரிய' என்ற சொல்லை சிறிதுகாலம் பயன்படுத்தி வந்தன. ஆனால்இப்போதெல்லாம் ராமர்கோவில் என்றே ஊடகங்களில் சொல்லாடப்படுவது,கோட்சேவை 'மறந்தது' போன்ற மறதியா, திட்டமிட்ட ஒன்றா? இது ஊடகபயங்கரவாதமா ஊடக ஜனநாயகமா? தெரிந்தவர்கள் சொல்லலாம்.


அயோத்தியைப் போல், குஜராத்தில் அந்த வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டது பா.ஜ.க.முதல்வர் நரேந்திரமோடி, ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள், கூடவே மாநில போலீஸ். ஆயிரக்கணக்கில் குப்பையாக அப்புறப்படுத்தப்பட்டனர் முஸ்லீம் மக்கள். கமலஹாசன்குறிப்பிடுகிற பெஸ்ட் பேக்கரி என்ற ரொட்டிக்கடையும் அதினுள்ளே உயிருக்குப் பயந்துஒளிந்து கிடந்தவர்களையும் இந்தக் கும்பல்தான் எரித்துக்கொன்றது. இதை நேரில்பார்த்த ஜாஹிரா ஷேக் என்ற இளம் பெண்ணும் அவளுக்காக வாதாட வந்த டீஸ்டாசெதல்வாத் என்ற சமூகப் போராளியும் நாயை விடவும் கேவலமாக அரசு நிர்வாகத்தால்அலைக்கழிக்கப்பட்டனர். ஒருகட்டத்தில் டீஸ்டாவுக்கு எதிராகவே ஜாஹிராவாக்குமூலம் கொடுக்கும் அளவுக்கு நரேந்திர மோடி அரசு கொடுமைப்படுத்தியது.இங்கேதான் வாய்கிழியும் அளவுக்கு ஜனநாயகம் பேசப்படுகின்றது.


ஆனால் உன்னைப்போல் ஒருவனில் அமானுல்லா "பெஸ்ட் பேக்கரி சம்பவத்தால் நான்தீவிரவாதி ஆனேன்" என்று சொல்வது எத்தனை பொய் வரலாற்று மோசடி!   2002இல்நடந்த பெஸ்ட் பேக்கரி கொடுமைக்கு பழிவாங்க 1993இல் மும்பையில் அல்லது1998இல் கோவையில் வெடிகுண்டு வைக்கின்றானாம் அமானுல்லா! வரலாற்றுச்சம்பவங்களை முன்பின்னாக அடுக்கி 'எடிட்' செய்வதன்மூலம் வர லாற்றைச்சிதைக்கும்-வரலாற்றைத் திரித்து எழுதும் இந்துத் துவா அஜெண்டா இக்காட்சியில்அப்பட்டமாக வெளிப் படுகிறது. ஏற்கனவே தீவிரவாதியாக அறிமுகப்படுத்தப் பட்ட அமானுல்லாவை, அப்பாவி முஸ்லிம்களின் பிரதிநிதி யாகப் பேசவைக்கும்போது,"ஒருதீவிரவாதி நியாயம் பேசலாமா?" என்ற கேள்வியை பார்வையாளர்களைக் கேட்கவைக்கும் உத்தி இது. அன்றாடங் காய்ச்சிகளாக, அகதி முகாம்களில் இன்றும்விளிம்புநிலை வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கின்ற முஸ்லிம்களின் நியாயங்கள், 'தீவிரவாதி'யான அமானுல்லா பேசும்போது அடிபட்டுப் போகின் றன, முற்றாக ஒதுக்கித்தள்ளப்படுகின்றன.  "நீ ஒன்றும் பேசாதே, என்ன இருந்தாலும் நீ தீவிரவாதி"என்ற முத்திரை படம் நெடுகிலும் குத்தப்படுகின்றது.
மாலேகான், ஹைதராபாத் மெக்கா மசூதி போன்ற இடங் களில் குண்டுவெடிக்கச்செய்தவர்கள் ராணுவ கர்னலான புரோஹித் என்பவனும், ஒரு பெண்சாமியாரும், இவர்கள் இணைந்து நடத்தும் ஒரு இந்துத்துவா தீவிரவாத ஆயுதப்பயிற்சிப்பள்ளியும். மும்பை போலீஸ் அதிகாரி ஹேமந்த் கார்காரே பாரபட்சமின்றிஇவ்வழக்கின் விசாரணையை மேற்கொண்டதால், பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். கும்பலால்"துரோகி" என்று தூற்றப்பட்டு படாதபாடு படுத்தினர்.  2008 நவம்பர் 26 மும்பைதீவிரவாதத் தாக்குதலின்போது அங்கே நடவடிக்கைக்காக சென்ற கார்காரே,தீவிரவாதிகளின் துப்பாக்கிக்கு பலியானார் ('துரோகி' என்று திட்டிய பா.ஜ.க. கும்பல்உடனடியாக 'கார்கரே ஒரு தியாகி' என்று பாடியது. அவரது மனைவிக்கு கோடிரூபாய்களை சன்மானமாகத் தர மோடி முன்வந்தபோது கார்கரேயின் மனைவி துச்சமாகநிராகரித்தார்). அதன்பின் புல்லட் புரூஃப் ஜாக்கட்டுகள் வாங்க கோடிக்கணக்கான ரூபாய்அரசால் ஒதுக்கப்பட்டது.


படத்தில் ஒரு காட்சியில் சேதுவும் ஆரிபும் ஆக்ஷனுக்கு தயாராகும் போது, "இந்தபுல்லட்ப்ரூப் ஜாக்கட்டுக்காக நீங்க கார்கரேக்கு நன்றி சொல்லனும்" என்று கமிஷனர்மரார் சொல்கின்றார். கார்காரேயின் மரணத்தில் சந்தேகம் இருப் பதாக பெரும்சர்ச்சைகளும் விவாதங்களும் எழுந்தன. கமிஷனர் மரார் அதைப் பற்றியல்லவாபேசியிருக்க வேண்டும்? பெரியார், சிங்காரவேலர் போன்ற போராளிகள் சமூகசீர்திருத்தம், சாதி- மதம்- கடவுள் மறுப்பு பிரச்சாரம் செய்த தமிழ்மண்ணில் ஒருமயிரைக்கூட நுழைக்க முடியா மல் திண்டாடிக் கொண்டிருந்த பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ்.பரி வாரத்துக்கு நடைபாவாடை விரித்து வரவேற்று சட்டமன் றத்தில் நுழையும்அளவுக்கு வளர்த்துவிட்ட இரண்டு திராவிடக் கட்சிகளில் ஒன்றின் தானைத்தலைவரின் குரல், படம் நெடுகிலும் தமிழக முதல்வரின் குரலாக வருவது சூப்பர்! படத்தில் தனியானகாமெடி ட்ராக் இல்லாத குறையை இது போக்குகின்றது.


தொடரும்....2.