பாதை தெரியுது பார் குறித்த ஒரு மலரும் நினைவு...
2000, ஆகஸ்ட் 12, 13 ஆகிய நாட்களில் லயோலா கல்லூரி வளாகத்தில் பண்பாடு-மக்கள் தொடர்பகம் ‘தமிழகப்பொதுவுடைமை இயக்கங்களும் கலை இலக்கியப்போக்குகளும்’ என்ற கருப்பொருளில் ஆய்வரங்கம் ஒன்றை நடத்தியது.
தீக்கதிர் அ.குமரேசன் அறிமுக உரையுடன் தோழர் அ.நல்லக்கண்ணு தொடங்கி வைத்தார். கே.வரதராஜன், பொன்னீலன், ஸ்ரீரசா (சு.ரவிக்குமார்), சி.மகேந்திரன், ச.செந்தில்நாதன், அறந்தை நாராயணன், ச.தமிழ்ச்செல்வன், பேரா.ச.மாடசாமி, பேரா.கே.ராஜூ, பேரா.தி.சு.நடராஜன், ச.ராஜநாயகம், சு.சமுத்திரம், சு.பொ.அகத்தியலிங்கம், ந.முத்துநிலவன் உள்ளிட்ட பலர் கருத்துரை ஆற்றினர். இரண்டு நாள் நிகழ்வின் பதிவு இப்போதும் என்னிடம் உள்ளதால் இத்தனை விவரங்களைத் தர முடிகின்றது.
அறந்தை நாராயணன் அவர்களின் உரையில் இருந்து சில பதிவுகளை கீழே தருகின்றேன், என்றைக்கும் மறக்க இயலாதவை:
”தாமரைக்குளம் என்றொரு திரைப்படம். தலித்துக்கள் குளத்தில் நீர் எடுக்கக்கூடாது என்று சாதி இந்துக்கள் தடுக்கின்றார்கள், படத்தின் கதை அதுதான். பாண்டித்தேவன் என்றொரு படம், மலை உச்சியில் பாறையை உடைத்தால் ஊருக்குள் தண்ணீர் வரும் என்பது கதை. தண்ணீர் தண்ணீர் அதன் பாதிப்பே.
கம்யூனிஸ்ட்டுக்களும் கம்யூனிச ஆதரவாளர்களும் ஒன்றிணைந்து ஒரு திரைப்படம் தயாரிக்க முடிவு செய்தனர். அத்தனை எளிதானதல்ல அது. குமரி ஃபில்ம்ஸ் என்ற பேனர். மிகச்சிறந்த இசைமேதையான கம்யூனிஸ்ட் எம்.பி.சீனிவாசன் இதில் முக்கிய பங்காற்றினார். கதையை ஆர்.கே.கண்ணன் எழுதினார். வங்கத்தில் இருந்து நிமாய் கோஷை கலைவாணர் என்.எஸ்.கே. இப்படத்தில் பணியாற்ற அழைத்து வந்தார். கோஷ் இயக்கம், ஒளிப்பதிவு இரண்டு பொறுப்புக்களையும் ஏற்றார். நாயகனாக நடிக்க திருச்சி பொன்மலையில் ரயில்வே தொழிலாளியாக இருந்த கே.விஜயனை அழைத்து வந்தனர். சேலம் தாமோதரன், பழனி நாச்சிமுத்து, ஈரோடு பாட்டப்பா, எஸ்.வி.சகஸ்ரநாமம் (பிற்காலத்தில் சேவா ஸ்டேஜ் நாடகக்குழுவை நிறுவினார், அக்குழுவில் ஒருவர் கோமல் சுவாமிநாதன்). எல்.விஜயலட்சுமி, எஸ்.வி.சுப்பையா ஆகியோர் நடித்தனர். சமூக சீரழிவுகள், தொழிலாளர் பிரச்னைகள், அநியாய வட்டி, கள்ளச்சந்தை, பணவீக்கம் போன்ற பிரச்னைகளைப் பேசியது. ஆனால் தொழிலாளர்கள் நிறைந்திருந்த கோவை மாநகரத்திலே கூட படம் ஒரு வாரத்திற்கு மேல் ஓடவில்லை. ஏன்?
கம்யூனிஸ்ட் தலைவர் எம்.ஆர்.வெங்கட்ராமன் அவர்களால் படப்பிடிப்பு தொடங்கிவைக்கப்பட்டது. பக்கத்து செட்டில் வேறு ஒரு படப்பிடிப்பில் இருந்த எஸ்.எஸ்.ராஜேந்திரன் ‘கம்யூனிஸ்ட்டுக்கள் சேர்ந்து படம் எடுக்குறாங்க, ஜாக்ரதையா இருக்கணும்’ என்று பேசியதாக சொன்னார்கள்.”
இந்த படத்தின் வினியோக உரிமையை AVM செட்டியார் வாங்கினார். சென்னை அருகில் உள்ள ஒரு கீத்து கொட்டகையில் ஒருவாரம் ஓட்டிவிட்டு டப்பாவை முடிவிட்டார் . லட்சிய நடிகர் ராஜேந்திரன் "டேய் ! கொக்கி பயலுக சினிமாவுக்குள்ள வந்துட்டானுக ! பாத்துங்குங்கடா ! "என்று அறிவித்தார் ! பாதை தெரியுது பார் படத்தின் ஒரு பிரதி திரைப்பட ஆவண காப்பகத்தில் இருக்கும் . பாவிகள்! அதையும் அழித்திருக்கும் வாய்ப்புகள் அதிகம் என்று கொதிப்புற்று வருந்துகின்றார் மூத்த தோழர் எழுத்தாளர் காஸ்யபன்.
படத்தின் பாடல்களை ஜெயகாந்தன் (தென்னங்கீற்று ஊஞ்சலிலே, அழுத கண்ணீரும் பாலாகுமா), கே.சி.எஸ்.அருணாச்சலம் (சின்னச்சின்ன மூக்குத்தியாம், ராசா மக போலிருந்தே), பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (உண்மை ஒருநாள் வெளியாகும்) ஆகியோர் எழுதினர்.
தென்மாவட்ட மக்களின் நேசிப்புக்குரியதாக இருந்த இலங்கை வானொலியில் தென்னங்கீற்று ஊஞ்சலிலே, சின்னச்சின்ன மூக்குத்தியாம் ஆகிய பாடல்கள் ஒலிபரப்பாகாத நாட்களே இல்லை எனலாம். அப்போது பள்ளி செல்லும் சிறுவனாக இருந்த எனக்கு இப்படம் குறித்த தகவலோ பாடல்கள் குறித்த தகவலோ தெரியாது, பாடல்கள் கேட்பதற்கு இனிமையானவை, அவ்வளவுதான். எனினும் இப்படத்தின் ஒளிப்பிரதியோ பாடல்களின் ஒளிப்பிரதியோ இப்போது கிடைக்கவில்லை என்று அறியும்போது தினந்தோறும் அப்பாடல்களையாவது வான்வெளி மூலம் கேட்டு இன்புற முடிந்ததே என்று மகிழ்ச்சியடைவதா அல்லது வருத்தப்படுவதா என்று தெரியவில்லை. பொதுவுடைமைவாதிகளின் சினிமா முயற்சி திட்டமிட்டு அழிக்கப்பட்டதாகவே தெரிகின்றது.
தேவாரத்தில் இருந்து மாசில் வீணையும் என்ற பதிகத்தை இப்படத்தில் எஸ்.ஜானகி பாடுகின்றார். படத்தின் நாயகி எல்.விஜயலட்சுமி. சிறந்த நடனக்கலைஞரான இவர் பிற்காலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸின் பல படங்களில் நடித்தார். எம்ஜிஆருடன் ஆடி நடித்த ஆடலுடன் பாடலைக்கேட்டேன் என்ற பாடல் மிகப்பிரபலம்.
நிமாய் கோஷ் அனுபவி ராஜா அனுபவி படத்தின் ஒளிப்பதிவாளர்; சூறாவளி என்ற படத்தையும் இயக்கினார்.
கே.விஜயன் புதுவெள்ளம் என்ற படத்தை இயக்கினார், அப்படத்தின் இசை எம்.பி.சீனிவாசன். சிவக்குமார் நடித்தார். புதுவெள்ளம் இது புதுவெள்ளம், இது பொங்கி வருகின்ற புதுவெள்ளம், தங்குதடையின்றி அது செல்லும், துளித்துளி துளித்துளி மழைத்துளி என்ற பாடலும் அப்போது வானொலியில் பிரபலம். பிற்காலத்தில் சிவாஜி கணேசன் நடித்த பல படங்களை இயக்கினார். அவரது மகன் சுந்தர் கே.விஜயன்.
1995 டிசம்பர் 8,9,10 ஆகிய நாட்களில் சென்னை கிறித்துவ இலக்கியச்சங்கம் பேரா.தயானந்தன் ஃப்ரான்சிஸ், சு.சமுத்திரம் ஆகியோரின் முன்முயற்சியில் ‘மக்கள் இலக்கியமும் திறனாய்வுப்போக்குகளும்’ என்ற கருப்பொருளில் கருத்தரங்கம் நடத்தியது. முதல் நாள் அமர்வுக்குத் தலைமை தாங்கியவர் மதிப்பிற்குரிய கே.சி.எஸ்.அருணாச்சலம் அவர்கள். அந்த அமர்வு கவிதைகள் குறித்த அமர்வு. அமர்வின் இறுதியில் அவரது சின்னச்சின்ன மூக்குத்தியாம்... பாடலின் இறுதி நான்கு வரிகளை அவரே பாடி முடித்தார்.
ஐந்து வருடங்களுக்குப் பிறகு லயோலா கல்லூரி வளாகத்தில் பாதை தெரியுது பாரின் வரலாற்றை அறந்தை நாராயணன் ஆற்றாமையுடனும் கொந்தளிப்பான மனநிலையுடனும் பகிர்ந்து கொண்ட கணங்களில் வரலாறு நெடுகிலும் எதிர்முனையில் இருந்து ஏவப்படும் முடிவில்லா அடக்குமுறை ஒடுக்கல் முயற்சிகளையும் எத்தனங்களையும் பொதுவுடைமை இயக்கம் எதிர்கொண்டு தாக்குப்பிடித்து வளர்வதில் உள்ள பிரயத்தனங்களையும் போராட்டங்களையும் உணர முடிந்தது. 1995 டிசம்பர் 8 அன்று சின்னச்சின்னமூக்குத்தியாம் பாடலை கே.சி.எஸ்.அவர்களின் வாயால் பாடக்கேட்டபோது மிகப்பெரும் பாக்கியம் செய்த உணர்வுக்கு ஆளானேன்; அவரது நண்பர்கள் அவரைப் பாடச்சொல்லிக் கேட்டு மகிழும் அளவுக்கு நன்றாகப் பாடும் திறன்பெற்றவர் எனப் பின்னர் அறிந்தேன். ஆனால் கே.சி.எஸ். அவர்கள் மறைந்த அன்று (1999) துயரம் தாளாமல் குமுறி அழவே முடிந்தது. பித்து பிடிச்சவன் என்று சொல்லி என்னைப் பேசிப் பேசி இந்த ஊர் சிரிக்கும்....
சின்னச்சின்ன மூக்குத்தியாம்
செகப்புக்கல்லு.. மூக்குத்தியாம்
கன்னிப் பொண்ணே உன் ஒய்யாரங் கண்டு
கண்ணைச் சிமிட்டுற மூக்குத்தியாம் (சின்ன)
வெத்தில போட்ட உன் வாய் செவக்கும்- கன்னம்
வெக்கத்தினாலே செவந்திருக்கும்
முத்தும் சிரிப்பில் மறஞ்சிருக்கும் உன்
முகத்தில் தாமரை பூத்திருக்கும் (சின்ன)
அள்ளிச் சொருகிய கொண்டையிலே எந்தன்
ஆவி சிறையுண் டிருக்குதடி
துள்ளித் திரிகிற ரெண்டு கண்ணு
அதச் சொல்லி சிரிக்குது ஒண்ணுக்கொண்ணு. (சின்ன)
கழுத்தை சுத்தியோர் அட்டியலாம்
உன் கட்டழகே ஒரு பட்டியலாம்
உழைக்கும் மேனி கருத்திருக்கும் பேச்சு
ஒவ்வொண்ணும் தேனா இனிச்சிருக்கும் (சின்ன)
நெத்தியில் பொட்டு பளபளக்கும் கண்ணு
நெஞ்சை இழுத்து என்னை மயக்கும்
பித்து பிடிச்சவன் என்று சொல்லி
என்னைப் பேசிப் பேசி இந்த ஊர் சிரிக்கும். (சின்ன)
சின்னச்சின்ன மூக்குத்தியாம் பாடல் இணைப்புக்கு...
https://www.youtube.com/watch?v=pM1W5HuZNLg
ஜெயகாந்தனின் தென்னங்கீற்று ஊஞ்சலிலே இணைப்புக்கு...
https://www.youtube.com/watch?v=Dw77uCP_PdI
இந்த இணைப்பில் ஒரு சுவாரஸ்யம் உள்ளது, அனுபவியுங்களேன்!
https://www.youtube.com/watch?v=wplkczKa3Zg

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக