
2) பிரிட்டிஷ்காரர்கள் ஆண்டுகொண்டிருந்த நாடுகளில் ப்ரிட்டிஷ் அதிகாரிகளின் பொழுதுபோக்கிற்காக அவர்கள் இறக்குமதி செய்து விளையாடிய விளையாட்டுத்தான் கிரிக்கெட். ஆசியாவில் பெரும் மக்கள்தொகை கொண்ட இந்தியா, பக்கத்தில் உள்ள இலங்கை, ஆப்பிரிக்க கண்டத்தின் சில பகுதிகள் என கிரிக்கெட் விளையாடும் நாடுகளை எண்ணலாம். பிரிட்டனின் பக்கத்திலேயே இருக்கின்ற ஃப்ரான்சிலோ பிற ஐரோப்பிய நாடுகளிலோ கிரிக்கெட் ஏன் இல்லை என்று கேள்வி கேட்டுக்கொண்டால் இது புரியும். இந்த நாடுகளில் பிற கள விளையாட்டுக்களுக்கும் அவற்றை விடவும் தடகள விளையாட்டுக்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கின்றார்கள் என்பதை ஒலிம்பிக் பதக்கப்பட்டியல்கள் நிரூபிக்கின்றன; இந்தியாவில் உள்ள பல்வேறு கலாச்சாரங்களை பின்பற்றும் அந்தந்த மாநில மக்கள் தத்தமது பொருளியல் வாழ்க்கை சார்ந்த, உடல் வலிமையைக்காட்டும் பாரம்பரிய விளையாட்டுக்களை பல நூறு வருடங்களாக விளையாடி வருகின்றார்கள்; இத்தகைய மண்ணின் விளையாட்டுக்களை ஊக்குவிக்க இதுகாறும் ஆண்ட மத்திய மாநில அரசுகள் என்ன முயற்சி செய்தார்கள் என்பதை ஆய்வு செய்தால் விரக்தியே மிஞ்சும். மாறாக சர்வதேச விளையாட்டுக்கள் இந்தியாவில் நடந்தால் எத்தனை கோடிகளை சுருட்டலாம் என்றுதான் திட்டமிடுகின்றார்கள்; தெரியாதவர்கள் சுரேஷ் கல்மாடியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
3) பழைய காலத்தில் டெஸ்ட் போட்டி என்று விளையாடுவார்கள், பல நாட்கள் நடக்கும்.
1990களூக்கு பிறகு உலகமயமும் தாராளமயமும் தலைவிரித்து ஆடத்தொடங்கிய பொழுதில்
பாரம்பரிய காசு பார்க்கும் வியாபாரத்துறையில் எப்படியும் லாபம் சம்பாதிக்க
வேண்டும் என்ற உலகமய விதி தீவிரமாக அமலாக்கப்பட்டபின் அதன் வீச்சு
விரிவாக்கப்பட்டு மொட்டைத்தலைகளிலும் பிருஷ்ட பாகத்திலும் சர்வதேச கம்பெனி
விளம்பரங்கள் எழுதப்பட்டபின் அந்தந்த நாடுகளின் கலை பண்பாட்டுத்தளங்களிலும்
உலகமயம் தலையிட்ட்து, நோக்கம் ஒன்றே ஒன்றுதான்: எப்படியும் காசு சம்பாதி.
விளையாட்டுத்துறையையும் உலகமயத்தின் லாபவேட்கை விட்டுவைக்கவில்லை. விளைவாக
மிகப்பெரும் மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியாவில் இயற்கையாகவே இருக்கின்ற
மிகப்பெரும் வணிகச்சந்தையை கிரிக்கெட் என்னும் விளையாட்டு மூலம் வளைக்க
திட்டமிடப்பட்டது, விளைவாக ஒரு நாள் போட்டிகள் நடத்தப்பட்டன; கிரிக்கெட் விளையாட்டு
என்ற நிலையில் இருந்து நகர்ந்து சூதாட்டம் என்ற நிலையை எட்டியது; திரைமறைவில்
போட்டியின் முடிவை மட்டும் இன்றி ஒவ்வொரு பந்து வீச்சையும் கூட சர்வதேச
மாஃபியாக்கள் தீர்மானித்தார்கள்; சில நேரம் இது அம்பலத்துக்கு வந்தபோதும் கூட அது
விரைவில் ஊடகங்களால் பின்னுக்குத்தள்ளப்பட்டு கிரிக்கெட் ஒரு புனிதமான பசு என்று
தொடர்ந்து பிரச்சாரம் செய்யப்பட்டது; உதாரணமாக தொடக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள
ஹிந்து நாளேடு, இந்த ஏட்டுக்கு என படிப்பாளிகள் மத்தியில் இப்போதும் ஒரு மரியாதை
இருக்கின்றது, ஆனால் இந்த ஏடும் கூட கிரிக்கெட் போட்டிகள் நடக்கும்போது முதல்
பக்கத்திலேயே (அன்றைய அரசியல் செய்திகளையும் பின்னுக்கு தள்ளிவிட்டு) பரபரப்பான
தலைப்புக்களோடும் புகைப்படத்தோடும் செய்தி வெளியிடுகின்றது என்றால் அது சொல்ல
வருவது என்ன? மரியாதையான ஹிந்து கிரிக்கெட்டுக்கு முதல்பக்க முக்கியத்துவம்
தந்தால் ’கிரிக்கெட் இப்போதும் ஒரு புனிதப்பசுதான், அதில்
சூதாட்டம் எல்லாம் கிடையாது, அல்லது சூதாட்டத்தின் வலைக்குள் கிரிக்கெட்
விழுந்துவிடாது, அது சூதாட்டங்களுக்கு இடம் கொடாத ஒரு இரும்புக்கோட்டை’ என்பதுதானே? உண்மை அவ்வாறு இல்லை; இன்றைய தேதியில் ஆகப்பெரும் வணிகமயமாக்கப்பட்ட
விளையாட்டு கிரிக்கெட்டுத்தான்; சூதாட்ட்த்தின் மறுபெயரும் அதுவே; விளையாட்டு வீரர்களை
ஆடு மாடுகள் போல சந்தையில் கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு ஏலம் விடும் கேவலம் கிரிக்கெட் தவிர வேறு எதிலாவது உள்ளதா?
இப்படியான ஒரு சூதாட்டத்தில் சாதாரணமாக ஒரு விளையாட்டுக்கும்
ரசிகனுக்கும் இருக்க வேண்டிய உறவின் தன்மை என்ன, மரியாதை என்ன? ஏலத்தில்
எடுக்கப்பட்ட 22 மிருகங்களுக்கும் அவற்றின் பின்னால் இருந்து இயக்குகின்ற
கறுப்புப்பண கார்ப்பொரேட்டுக்களுக்கும் இவர்களின் கூட்டாளிகளான சர்வதேச
மாஃபியாக்களுக்கும் சாமானிய ரசிகனுக்கும் உள்ள உறவுதான் என்ன? இது ஏதோ கான்சி
க்ரோஞே, ஸ்ரீசாந்த் போன்ற தனிநபர்கள் சார்ந்த விசயம், மற்றப்படி கிரிக்கெட் என்பது
மனிதர் உணர்ந்து கொள்ள மனித விளையாட்டு அல்ல, அதையும் தாண்டி புனிதமானது என்பதாக
ஊடகங்களும் காவல்துறை கெடுபிடிகளும் சாமானிய ரசிகனுக்கு நம்பவைக்க வேர்வை சிந்தி
முயற்சி செய்கின்றன.
4) விவசாயம். ”இந்திய விவசாயிகள்
விவசாயத்தொழிலை விட்டு வெளியேற வேண்டும்; விவசாயத்தில் முதலீடு செய்துவிட்டு
பின்னர் ‘ஐயோ நஷ்டம்’ என்று புலம்புவதை
தவிர்க்க வேண்டுமெனில் விவசாயிகள் விவசாயத்தை கைவிட வேண்டும்”. இப்படி உபதேசித்தவர் விவசாய நிலங்களை
அபகரிக்கத்திட்டமிட்ட ஏதோ ஒரு கார்ப்பொரேட் முதலை அல்லர், இந்தியக்குடியரசின்
பிரதமர் மனுமோஹனேதான். உலகமயத்தின் தந்தையான அமெரிக்கா என்ன சொல்கின்றது?
‘இன்சூரன்ஸ் துறையை ஒழித்துக்கட்டு; விவசாயத்துறையில் இன்சூரன்ஸை ஒழி; மானியத்தை ஒழி’. இவ்வாறு போதிக்கின்ற அமெரிக்கா
தன் நாட்டில் விவசாயிகளுக்கு மானியம் கொடுக்கின்றது, விவசாயத்துக்கு இன்சூரன்ஸ்
கொடுக்கின்றது; அமெரிக்காவின் அடிமைகளான நமது பிரதமருக்கும் சிதம்பரத்துக்கும்
மாண்டேக் சிங் அலுவாலியாவுக்கும் இது தெரியாத்து அல்ல; இதுவும் தெரியும்,
கிரிகெட்டுக்கு பின்னால் உள்ள மாஃபியா கும்பலையும் அவர்கள் அறிவார்கள், அரசு
எந்திரத்தைக் கையில் வைத்திருப்பவர்கள் அல்லவா? கோடிக்கணக்கான இந்திய மக்கள்
கூட்டம் மத்திய அரசின் லஞ்ச ஊழல் லாவண்யங்களில் இருந்தும், ஏறும் விலைவாசிக்கான
காரணங்களை அறியும் ஆராய்ச்சியில் இருந்தும், உலகமயம் தனியார்மயம் ஆகிய
ஆட்கொல்லிகளின் கொடுமைகள் தந்திரங்களை
அறிந்துகொள்ளும் ஆய்வில் இருந்தும் திசைதிரும்பி பலமணி நேரங்கள் கிரிக்கெட்
சூதாட்டமே கதி என்று கிடப்பது நமது பிரதமருக்கும் சிதம்பரத்துக்கும் மாண்டேக் சிங்
அலுவாலியாவுக்கும் தேவையான ஒன்றாக இருக்கின்றது; அதனால்தான் பல கோடி ரூபாய்கள்
புழங்குகின்ற ஊழல் நாற்றமெடுத்து வீசுகின்ற கிரிக்கெட் கண்ட்ரோல் போர்ட்
தனியார்கள் கையில் இருந்தும் மத்திய அரசு அதைக் கண்டுகொள்ளாமல் இருக்கின்றது.
இங்கேதான் அரசுக்கும் கார்ப்பொரேட்டுக்களுக்கும் மாஃபியாக்களுக்கும் ஆன கள்ள உறவு
கொடிகட்டிப் பறக்கின்றது.
5) ஒரு இந்திய விவசாயிக்கு வேண்டியதெல்லாம் சில தேவைகள்தான்:
தனது நிலத்தில் விதை விதைப்பது தொடங்கி அறுவடை முடியும் காலம் வரை போட்ட முதலீட்டை
குறைந்தபட்சம் நஷ்டம் இல்லாமல் மீட்டு எடுக்க வேண்டும், இதற்கு அரசு கடன் கொடுக்க
வேண்டும், கந்துவட்டியில் விழுந்துவிடாமல் அரசு காக்க வேண்டும், வறட்சி வெள்ளம்
போன்ற இயற்கை அழிவுகள் நேரிட்டால் அரசு நஷ்ட ஈடு கொடுத்து தம்மைக் காப்பாற்ற
வேண்டும். அவ்வளவே. அரசோ இந்தக் கோரிக்கைகளை சமூகம் சார்ந்த முக்கியமான விசயமாகப்
பார்க்காமல் ஏதோ விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய விவசாயிகள் கூட்டு சேர்ந்து
அரசாங்கத்தை ஏமாற்றிவிட திட்டம் போடுவதாக நினைக்கின்றதோ? கிரிக்கெட் சூதாட்டத்தில்
புரளும் ஒரு நாள் கறுப்புப்பணம் கூட இதுபோன்ற விவசாயிகளில் செலவுகளுக்கு
போதுமானதாக இருக்கும், லட்சக்கணக்கான விவசாயிகளின் தற்கொலையை தடுத்து நிறுத்தவும்
போதுமானதாக இருக்கும். ஆனால் அமெரிக்கா, உலகவங்கி, சர்வதேச நிதிநிறுவனம் போன்ற
அமெரிக்கசார்பு நிதிக்கொள்ளையர்கள் இடும் கட்டளைகளை தலைமேல் சுமந்து நிறைவேற்றும்
மனுமோஹன் கும்பல் இன்சூரன்ஸ் துறையையும் விவசாயத்துக்கு மானியத்தையும் ஒழிக்க
ராப்பகலாக கடுமையாக உழைக்கின்றது. விளைவு விவசாயிகள் தமது தொழிலை கைவிட்டு நகர்ப்புறங்களுக்கு
நாட்கூலி வேலைக்கு இடம்பெயர்கின்றார்கள்; அரசு கண்டுகொள்வதில்லை; இன்றைய தேதியில் கையில்
பணம் உள்ளவனால் விலை உயர்ந்த அரிசியை வாங்கிவிட முடியும், ஆனால் பணம் இருந்தாலும்
அரிசியோ பிற தானியங்களோ கிடைக்காமல் திண்டாடப்போகும் நாள் வெகு தொலைவில் இல்லை.
இதனை உணர்ந்துதான் அரசு மிக எச்சரிக்கையாக ரேசன் முறையை ஒழித்து அதற்கான மானியத்தை
ரேசன் அட்டைதாரரின் வங்கிக்கணக்கில் போட்டுவிடுவதாக சொல்கின்றது; அதாவது இந்த
மானியத்தொகையை கொண்டுபோய் வால்மார்ட்டில் அரிசி கிலோ ஒரு ரூபாய்க்கோ இரண்டு
ரூபாய்க்கோ வாங்கிகொள்ளலாம் என்று மனுமோஹனும் மாண்டேக்சிங்கும் நமக்கு
சொல்கின்றார்கள்! ஒருவேளை இந்த விலையில் தரமான பூச்சிமருந்து கிடைக்கலாம்.
6) வெறியேற்றப்பட்ட ரசிகர்களோ டிக்கெட்டுக்களுக்கு ஆயிரக்கணக்கில்செலவு செய்கின்றார்கள்;
அவர்களுக்கு எல்லாம் தெரியும், ஆனாலும் கூட ரயில்களிலும் பேருந்துகளிலும் ’ஸ்கோர் என்ன’ என முன்பின் தெரியாதவர்களிடம் கூடக் கேட்டுக்கொடு
திரிபவர்களின் மூளையில் என்ன உள்ளது என்று தெரியவில்லை. இந்தியாவில் பிறக்கும்
ஒவ்வொரு குழந்தையும் கையில் கிரிக்கெட் மட்டையுடனோ அல்லது கிரீஸ் தடவப்பட்ட
பந்துடனோ பிறப்பதாக அவர்கள் நம்புகின்றார்கள்! அவ்வாறு என்னிடம் கேட்பவர்களுக்கு
‘எனக்கு கிரிக்கெட் தெரியாது’ என்றும்
சொல்லிருக்கின்றேன், ‘இரண்டு, மூன்று’ என்றும் சொல்லியிருக்கின்றேன். கண்ணை சுருக்கி நெற்றியை
உயர்த்தும் அவர்களிடம் ‘நேற்று காஸ்மீரில் இரண்டு
பேரை ராணுவம் சுட்டுக்கொன்றுள்ளது, நேற்றைய ஸ்கோர் அதுதான்’ என்றும் ‘நேற்று ஆந்திராவில் இரண்டு விவசாயிகள் தற்கொலை செய்து
கொண்டார்கள், நேற்றைய ஸ்கோர் அதுதான்’ என்றும் சொல்லியிருக்கின்றேன்.
3 கருத்துகள்:
\ஆனாலும் கூட ரயில்களிலும் பேருந்துகளிலும் ’ஸ்கோர் என்ன’ என முன்பின் தெரியாதவர்களிடம் கூடக் கேட்டுக்கொடு திரிபவர்களின் மூளையில் என்ன உள்ளது என்று தெரியவில்லை./ “அதைக்கண்டிப்பாக நாம் தெரிந்துக்கொள்ள வேண்டும் இக்பால்.!”.
\‘எனக்கு கிரிக்கெட் தெரியாது’ என்றும் சொல்லிருக்கின்றேன், ‘இரண்டு, மூன்று’ என்றும் சொல்லியிருக்கின்றேன். கண்ணை சுருக்கி நெற்றியை உயர்த்தும் அவர்களிடம் ‘நேற்று காஸ்மீரில் இரண்டு பேரை ராணுவம் சுட்டுக்கொன்றுள்ளது, நேற்றைய ஸ்கோர் அதுதான்’ என்றும் ‘நேற்று ஆந்திராவில் இரண்டு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள், நேற்றைய ஸ்கோர் அதுதான்’ என்றும் சொல்லியிருக்கின்றேன்./ “நான் நாத்திகனாக என்னை அறிவித்துகொண்டபோது உனக்கென்ன தெரியும் ஆத்திகத்தைப்பற்றி? என கேள்வி வந்தது.நியாயமான அந்தக்கேள்விக்கு நான் தீவிர ஆத்மீகவாதியாக இருந்தது பதில் சொல்ல உதவியது.....!அது போல நானும் என் கிரிக்கெட் நண்பர்களை கலாய்ப்பதுண்டு.ஆனால், அவர்களிடம்தான் கிரிக்கெட்டைக்கற்றுக்கொண்டேன்!!!.”
நன்றி தோழர்...
உலகமயத்தின் தீவிரம் கலை இலக்கிய பண்பாட்டு தளத்தின் அனைத்து வடிவங்களையும் வியாபாரமயமாக்கி, லாபம் ஒன்றே தாரகமந்திரம் என்ற திசையை நோக்கி தீவிரமாக செலுத்துகின்றது; இன்று கிரிக்கெட் பலியாகி உள்ளது; நாளை வேறு எந்த விளையாட்டுக்கும் இந்த கதி ஏற்படாது என்ற உத்தரவாதம் ஏதும் இல்லை தோழர்! அந்த அச்சம் எனக்கு உள்ளது!
அனேக நன்றி உங்களுக்கு!
அர்த்தச் செறிவுள்ள ஆழ்ந்த பொருளுள்ள கட்டுரை. நெஞ்சு பதறுகிறது. கவலையே இன்றி கொள்ளை அடிக்கும் கார்ப் பரடே நிறுவனங்கள். மட்டை ஆட்டத்துல ரசிகர்கள் எல்லாரும் மட்டை ஆயிடுவாங்களோ/,,,,,,
கருத்துரையிடுக