
அன்புத்தோழர்களே!

அலைகள்-விடியல் வெளியீட்டகங்கள் இணைந்து 2012 செப்டம்பரில் வெளியிட்ட ‘மாவோ தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புக்க’ளை (9 தொகுதிகள்) ஆனந்தவிகடன் 2012ஆம் ஆண்டின்
சிறந்த மொழிபெயர்ப்பு
நூலாக தேர்ந்தெடுத்துள்ளது. தொகுதிகள் 5, 9 ஆகியவற்றை நான் மொழிபெயர்த்துள்ளேன் என்ற மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். ஆனந்தவிகடனுக்கு நன்றி! மொழிபெயர்க்கும் வாய்ப்பை அளித்த அலைகள் சிவம் அவர்களுக்கும் நன்றி!
பிற தொகுதிகளை மொழிபெயர்த்த தோழர்கள் மயிலை பாலு, நிழல்வண்ணன், வான்முகிலன்,பாஸ்கர், பாலன், மணிவாசகம், தங்கப்பாண்டியன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்!
வாழ்த்துகின்ற தோழர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல....!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக