காதல்
ஆதாமோ ஏவாளோ
அவாளோ இவாளோ
கத்திரி வெயில் நடுநடுக்கும்
கத்திரி வெயில் நடுநடுக்கும்
டிசம்பர் குளிர் சூடெடுக்கும்
குளிர்பானம் கதகதக்கும்
வெந்நீரோ குளிரடிக்கும்
நேற்று ஒதுக்கிய நிறமெல்லாம்
இன்றைக்குப் பிடித்துப்போகும்
ரசம் போன கண்ணாடியும்
நம் முகத்தை அழகாய் காட்டும்
கடைசி இருக்கையும் பல்லக்கு ஆகும்
கண்டக்டர் அண்ணனாவார்
வேகமாய் போய் சேர்ந்தால்
ஓட்டுநரோ எதிரியாவார்
எதிரியெல்லாம் நண்பனாவான்
அப்பனெல்லாம் எதிரியாவான்
திரையரங்கம் கோவிலாக
செல்போன் தெய்வமாகும்
அப்பன் பாட்டன் பூட்டனும்
சாத்திர சூத்திரங்களும்
காலங்காலமாய் கட்டி வைத்த
சாதிமத பேதமெல்லாம்
ஆவியாகி கரைந்துபோகும்
இதயம் + இதயம் மட்டுமே
இணைகின்ற ரசவாதம்
பூப்பந்தை புதுசாய் செய்யும்
காதலென்ற கெமிஸ்ட்ரியில்
மட்டுமே சாத்தியமாகும்!
ஆதலால், இளைஞர்களே,
காதலிப்பீர், காதலிப்பீர்!
........................................
1 கருத்து:
கவிதை நன்றாகவே இருக்கிறது.மார்ச் 18 ம் தேதிக்கான முன்னோட்டமா! வாழ்த்துக்கள்---காஸ்யபன்
கருத்துரையிடுக