புதன், ஏப்ரல் 09, 2025

1975 ஆம் வருடம் உள்நாட்டு நெருக்கடி நிலை ஒன்றை பிரகடனப்படுத்த வேண்டிய அழுத்தம் ஏன் ஏற்பட்டது?

1975 ஆம் வருடம் அன்றைய ஒன்றிய காங்கிரஸ் அரசின் தலைவர் இந்திரா காந்தி உள்நாட்டு நெருக்கடி நிலை ஒன்றை பிரகடனப்படுத்த வேண்டிய அழுத்தம் ஏன் ஏற்பட்டது? 

ஒரிசாவில் நந்தினி சத்பதி மாநில சட்டப்பேரவைக்கு பல லட்சங்கள் செலவழித்து வென்றதாக குற்றச்சாட்டு விழுந்தது அது ஒரு இடைத்தேர்தல் இதையே அன்றைய ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்கள் பிரதமராக இருந்த இந்திரா காந்தியிடம் ஊழல் புகாராக எழுப்பியபோது இந்திரா காந்தி கூறியது வேடிக்கையானது கட்சியை நடத்துவதற்கு கூட காங்கிரஸ் கட்சியில் பணமில்லை என்பது அவரது பதிலாக இருந்தது. 

உத்தரபிரதேச மாநிலம் ரே பரேலி நாடாளுமன்றத்தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட இந்திராவின் தேர்வு செல்லாது என்று அவருக்கு அடுத்த அதிகமான வாக்குகளைப் பெற்ற சம்யுக்த சோசலிஸ்ட் கட்சியின் ராஜ் நாராயணன் அலஹாபாத் உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இருவருக்கும் இடையில் 1,10,000  வாக்குகள் இடைவெளி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திராவின் 1971 தேர்தல் வெற்றி செல்லாது என்று 1975 ஜூன் 12 அன்று நீதிபதி ஜக்மோஹன்லால் சின்கா அறிவித்தார். கூடவே அடுத்த ஆறு வருடங்களுக்கு தேர்தலில் போட்டியிடவும் தடை விதிக்கப்பட்டது. 

பிரதமர் அலுவலகத்தில் பணியில் இருந்த யஷ்பால் கபூர் என்ற அரசு ஊழியரை தனது தேர்தல் ஆதாயங்களுக்காக பயன்படுத்திக் கொண்டது, உத்திர பிரதேச மாநில அரசு அதிகாரிகளை பயன்படுத்தி தனது தேர்தல் பிரச்சார மேடைகளை அமைத்துக் கொண்டது ஒலிபெருக்கிகள் மின்சார வசதிகளை பெற்றது ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகள் முக்கியமானவை. இந்த தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதை 20 நாட்களுக்கு தள்ளி வைத்தார் நீதிபதி. 
மாருதி கார் தொழிற்சாலை அமைக்க பிரதமரின் மகன் சஞ்சய் காந்திக்கு சல்லிக்காசு விலைக்கு 290 ஏக்கர் நிலமும் அதற்கும் கூட அரசு கடன் வழங்கியது அன்றைய ஹரியானா காங்கிரஸ் முதல்வரான பன்சிலா. 
காங்கிரஸ் கட்சியில் அன்று தீ மூர்த்திகளாக இருந்தவர்கள் சஞ்சய் காந்தி ஆர்கே தாவன் பன்சிலால் ஆகியோர். ஆர் கே தாவன் கேஸ் பால் கபூரின் சகோதரி மகன் என்பது குறிப்பிடத்தக்கது கபோரோம் ஸ்டெனோகிராபர் தான் பின்னர் ராஜ்யசபா மெம்பர் ஆனார் பிற்பாடு இந்திராவின் அரசியல் ஆலோசகராகவும் ஆனார் ரயில்வே துறையில் 450 ரூபாய் ஊதியம் வாங்கிக் கொண்டிருந்த ஒரு குமாஸ்தா பின்னர் பிரதமர் அலுவலகத்தில் கூடுதல் தனிச்செயலாளராக ஆனார். 

இந்திரா ஒரு ஊழலின் ஊற்றுக்கண் அடிப்படை வலிமியங்களை அளிப்பவர் என்ற முடிவுக்கு வந்தார் அன்றைய ஜெயப்பிரகாஷ் நாராயணன். அன்றைய ரயில்வே அமைச்சர் எலியன் மிஸ்ராவுக்கு நெருக்கமான துல்மோகன் ராவ் என்ற நாடாளுமன்ற உறுப்பினருக்கு இறக்குமதி அனுமதி கொடுத்த விவகாரம் நாடாளுமன்றத்தில் பிரதமருக்கு நெருக்கடியை உருவாக்கியது. அதற்கு பொறுப்பானவர் யார் என்ற முடிவுக்கு வரும்பும் இஸ்ரா வெடிகுண்டு விபத்தில் இறந்தார் நிஷாவின் அமைச்சர் அலுவலகத்தில் புகுந்து சஞ்சய் காந்தியும் ஆர் கே தாவனும் பல ஆவணங்களை எடுத்துக்கொண்டு அந்த அறையை சீல் வைத்தார்கள் என்பது வரலாறு. இந்த விஷயத்தில் நாடாளுமன்றத்தில் மொரார்ஜிக்கும் இந்திராவுக்கும் நேரடியாக மோதல் ஏற்பட சபாநாயகர் ஆன குருதியால் சிங் தில்லானுக்கும் இந்திராவுக்கும் உரசல் ஏற்பட்டது இதன் தொடர்ச்சியாக தில்லான் ராஜினாமா செய்யவே முன்வந்தார் இவ்வளவு பிரச்சினைகள் தலை எடுக்கவே 1975 ஜூலை ஆகஸ்ட் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தள்ளி வைக்கவும் கூட பிரதமர் இந்திரா முடிவு செய்தார் அமைச்சராக இருந்த ஜெகஜீவன் ராமுக்கும் இந்திராவுக்கும் உறவு சீர்கெட்டது எஸ்வந்த் ராவ் சாவனுக்கும் ஸ்வரன் சிங்குக்கும் பிரதமராகவும் ஆசை இருந்தது அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பு இந்த ஆசை தீயில் எண்ணெய் வார்த்தது மோகன் தாரியா இந்திரா பாகதேவி விலக வேண்டும் என்கிறார் இளம் துருக்கி அவர்களோ ஜெகஜீவன் ராமுடன் நெருக்கமாக இருக்கிறார்கள் என்று உளவுத்துறை சொன்னது இடையிலே அமராவதி திருவிழா பிரதமராக நியமிக்கவும் இந்திராவின் சிந்தனை ஓடியது பெரிய குற்றச்சாட்டாக இருப்பது முன்னாள் ராணுவ அதிகாரி ரத்தம் சோறா நகர்வாளா 60 லட்சம் ஸ்டேட் பேங்க் வங்கியில் இருந்து பெற்றுக்கொண்டார் என்பது இந்திரா காந்தி அவரது செயலாளர்கள் ஆகியோரின் குரலில் தொலைபேசியில் வங்கியில் அதிகாரிகளுடன் பேசி இவ்வாறு பணத்தைப் பெற்றுக் கொண்டார் என்பது வெட்ட வெளிச்சமானது ஒரு லட்சத்து 35 ஆயிரம் ரயில்வே தொழிலாளர்களும் 3 ரிலேஷன் தினக்கூலி தொழிலாளர்களும் அடங்கிய திறலில் 65 விழுக்காடு தொழிலாளர்கள் 1974 வேலை நிறுத்தத்தில் முழுமையாக பங்கு பெற்றனர் வேலை நிறுத்தத்தை உடைக்கவும் அனைத்து விதமான அடக்குமுறைகளையும் ஈவு இரக்கமின்றி அன்றைய பிரதமர் இந்திரா கட்டவிழ்த்து விட்டார் 1950 51 1965 66 காலகட்டத்தில் விலைவாசி உயர்வு ஏறத்தாழ 3 விழுக்காடு மட்டுமே ஆனால் அவரது ஆட்சியிலோ அது 15 விழுக்காடாக உயர்ந்தது எல்கேஜாவும் சூப்பர் கவர்மெண்டாக மாறினார்கள் தனக்கான ஆதரவை காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சிக்குள் திரட்ட இந்திரா ஆகப் பெரிய முயற்சிகளை செய்து கொண்டிருந்த நேரத்தில் 1975 ஜூன் 23 அன்று உச்சநீதிமன்ற நீதிபதி பி ஆர் கிருஷ்ண ஐயர் தீர்ப்பளித்தார் தேர்தல் ஆதாயத்திற்கான அவர் மீதான குற்றச்சாட்டுகளின் மீது அவருக்கு தண்டனை எதுவும் வழங்கப்படவில்லை அவர் பிரதமராக தொடரலாம் ஆனால் வழக்கின் இறுதி தீர்ப்பு வரும் வரை நாடாளுமன்றத்தில் அவர் வாக்களிக்க உரிமையை இழக்கின்றார் என்பது தீர்ப்பு இதன் பின்னர் அவருக்கு நெருக்கடி அதிகரிக்கவே செய்தது எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி காங்கிரஸ் கட்சிக்குள்ளும் இருந்த இளம் துருக்கியவர்களும் அவர் பதவி விலகுவதற்கான நடவடிக்கைகளை செய்து கொண்டிருந்தார்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே அவரை அன்று இப்படி ஆதரித்தது வலது சாரி ப்ரிபோக்கு சக்திகள் பிளாக்மெயில் அழுத்தங்களுக்கு காந்தி இடம் கொடுத்து விடலாகாது அவர் பிரதமராக தொடர வேண்டும்

சூழ்ந்துள்ள கடுமையான நெருக்கடியை சமாளிக்க ஒரு எமர்ஜென்சி நிலையை பிரகடனத்தை படுத்த வேண்டும் என்ற ஆலோசனையை முதல் முதலாக இந்திராவுக்கு முன்வைத்தவர் சித்தார்த்த சங்கர் ரே அன்றைய மேற்கு வங்காள மாநில அரசின் முதலமைச்சர் குடிமக்களின் அடிப்படை உரிமைகளை பறிப்பது தான் இந்த ஆலோசனையின் அடிப்படை நோக்கம் 1962 சீனாவுடன் ஆனப்போரில் தோல்வியை சந்தித்தபோது உள்நாட்டு எமர்ஜென்சியை அறிவிக்கலாம் என கிருஷ்ணா மேனன் ஆலோசனை கூறிய போது பிரதமர் நேரு அந்த ஆலோசனையை நிராகரித்தார் ஜனநாயக விழுமியங்களுக்கு அது பாதகமாக அமையும் என்று உறுதியாக கூறினார் என்பது நினைவு கூறத்தக்கது இறுதியாக 1975 ஜூன் 25 நள்ளிரவில் எமர்ஜென்சியை அறிவிப்பது என இந்திரா வுக்கு நெருக்கமான சஞ்சய் காந்தி ஆர் கே தாகம் பன்சிலால் ஓம் ஓம் மேத்தா
கிஷன் சன்க் சித்தாந்த சங்கர் ஆகிய சிறு சிறிய குழு முடிவு செய்தது. 

இந்திராவை இந்தியாவே இந்திரா என்ற முழக்கத்தை கண்டுபிடித்த தேவகாந்த பருவா எப்படியோ இதை மோப்பம் பிடித்தவராக சஞ்சய் காந்தியிடம் நல்ல பெயர் வாங்கும் முயற்சியில் சர்க்கரை ஆலைகளையும் ஜவுளி ஆலைகளையும் தேசிய மையம் ஆக்கினால் வேலையில்லா பட்டதாரிகளுக்கு ஏதாவது பண உதவித்தொகை திட்டம் அறிவித்தால் எமர்ஜென்சியின் கடுமையிலிருந்து மக்களை திசை திருப்பலாம் என்று ஆலோசனை சொல்ல சஞ்சய் காந்தி அதை நிராகரித்தார் 

இறுதியாக ஜூன் 25 இரவு 11 முக்கால் மணிக்கு குடியரசு தலைவர் தகுருதின் அழியாகவும் நெருக்கடி நிலை பிரகடத்தில் கையெழுத்து விட்டார். 

அன்றைய நிலையில் எமர்ஜென்சி வரும் என்று முன்னுணர்ந்தவர் இருவர் மட்டுமே ஒருவர் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர் ஜோதிர் பாய் பாசு இந்திரா காந்தி அரசியல் சட்டத்தை தூக்கி எறிவார் விரைவில் நடக்கும் என்று அவர் பகிரங்கமாக பேசினார் தனது வீட்டின் ஜன்னல்களுக்கு இரும்பு கம்பிகளை பொருத்தினார் மற்றவர் எமர்ஜென்சி போன்ற ஒரு நெருக்கடியை இந்திரா காந்தி பிரகடனம் செய்யக்கூடும் என்று அவர் உணர்ந்திருந்தார் இதன் பின்னர் நடந்தவை உலகறிந்த வரலாறு எனவே நாட்டுக்கு வெளியே இருந்ததாக சொல்லப்படும் புற காரணிகளை விடவும் காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த நெருக்கடிகளும் உள்நாட்டில் நிலவிய சூழ்நிலைகளும் தான் 1975 நெருக்கடி நிலைக்கான தலையாய காரணங்கள் ஒருவேளை தோழர் ஜேம்ஸ் குறிப்பிடுகின்ற புறக்காரணிகள் காரணங்கள் இல்லாமல் போயிருந்தாலும் கூட அன்று பிரதமராக இருந்த இந்திரா காந்தி தன்னை சூழ்ந்துள்ள நெருக்கடியில் இருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள எமர்ஜென்சி நிலையை அறிவித்திருப்பார் என்பதுதான் உண்மை.

(மாத இதழ் (மார்ச் 2025) ஒன்றில் வெளியான இடதுசாரித் தோழர் ஒருவரின் நேர்காணலை வாசித்த பின், அவசர நிலை பிரகடனம் செய்ய வேண்டிய தேவைகள் என்று அவர் பட்டியல் இட்ட காரணங்களை பகுதி அளவில் நான் மறுத்து அதே இதழின் ஆசிரியருக்கு எழுதிய கடிதம் அடுத்த இதழில் பிரசுரம் ஆகவில்லை. எனவே இங்கே பதிவு செய்கிறேன்.)

கருத்துகள் இல்லை: