ஒன்றின் இடத்தில் இன்னொன்று போட்டிக்கு வருவதில்லை
ஆனாலும் மேய்ச்சல் நிலம் ஒன்றுதான்
ஒன்றாய் வருவதும் ஒன்றாய் போவதும்
ஒன்றாய் மேய்வதுமாக
சச்சரவு சண்டை ஏதுமில்லை
அமைதியாக வாழ்க்கை நகர்ந்தது
நிறமாக இருந்த காவி கொடியாக மாறியது
மேய்ச்சல் நிலத்துக்குள் நுழைந்தது
ஆடுகளுக்கு அன்றிலிருந்து கொம்புகள் முளைத்தன
நாளடைவில் கூர்மை அடைந்தன
கொம்புகள் அதிவேகமாக வளர்ந்தன
கொம்புகள் தங்களுக்குள் ரகசியமாக உரையாடிக் கொண்டன
மந்தைக்குள் உறுமல் சத்தம் கேட்கத் தொடங்கியது
ஆடுகள் ஒன்றையொன்று உரசி மூர்க்கமாக விலக்கத் தொடங்கின
ஒன்றின் இடத்தை இன்னொன்று ஆக்கிரமிக்க சண்டைகள் பிறந்தன
சரி, இதுவரை நீங்கள் மேய்ந்தது போதும்,
இனி மேய்வதற்கான உரிமை எங்களுடையது என்றன கொம்புகள்
பச்சைப்புல்வெளி எங்கும் கொப்பளித்து ஓடிய ஆடுகளின் குருதியை
சுவைத்து நிமிர்ந்தன,
கொம்புகளில் இருந்து ஆவேசமாக நீண்ட காவி நிற நாக்குகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக