இதோ இங்கே இதே இடத்தில்தான்...
மெல்லிய காற்றிலாடி
வா...வா...என அழைக்கும்
மஞ்சள்மலரின் பேரழகுடன்
பொன்னிறக்கற்றைமுடிகள்
காற்றில்
அலைபாய
இதுவரை
எழுதப்பட்ட
அழகுக்கான
இலக்கணங்கள் அனைத்தையும்
நதியில்
நீந்தும் சூரியஒளியெனப்பிரியும்
தன்
விரல்களால்
அலட்சியம் செய்தவாறே அவள்
அலட்சியம் செய்தவாறே அவள்
தேவதைக்கதைகளின்
பக்கங்களில் இருந்து
ஒய்யாரமாய்
இறங்கிவந்தாள்
அரங்கின்
மூலைகளிலிருந்து
வெளிச்சத்தை
வாரி இறைத்த
ராட்சச
மின்னொளிவிளக்குகளுக்கு
வேலையைக்குறைத்து
வெட்கப்படச்செய்த
பேரொளியுடன்
ஒவ்வொரு
நொடியிலும்
சர்வஅலட்சியமாக
ஓராயிரம்
சரீரவித்தைகளை அள்ளி வீசினாள்
இடைவெளியற்ற
கரவொலிகளின் வடிவில்
ஒற்றைப்புள்ளியில்
வந்துகுவிந்த பாராட்டுக்களை
களங்கமற்று
விரிந்த
சிற்றிதழின்
புன்னகையால்
தலைகுனிந்து
ஏற்றுக்கொண்டு
ஏற்றுக்கொண்டு
அரங்கிலிருந்து
விலகும்போது
கர்வத்தின் வாசனையைக்
காற்றில்பரவவிட்டபடி
அவள் என்னைக் கடந்து சென்ற
இதோ இந்த இடத்தில்
டிப்பர் லாரிகள் பெருத்த உறுமலுடன்
மலைமலையாய் இப்போது
மண்ணைக்கொட்டிக்கொண்டிருக்கின்றன...